Sunday, July 11, 2021

கேந்த்ரிய_வித்யாலயா பற்றிய #திமுகவின்_நாடகம்...!

 இந்தியாவில் மொத்தம் 25 முக்கிய பகுதிகளில் 1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 48,314 ஆசிரியர்கள் மற்றும் 13,88,899 மாணவர்களுடன், வருடத்திற்கு 4862 கோடி செலவில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு மாநிலங்களில் மாறுதலுக்குட்பட்ட பணியில் இருக்கும் ஊழியர்கள், பாதுகாப்பு துறை மற்றும் துணை ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, இடம் மாறுவதால் படிப்பில் பிரச்சனைகள் இருக்கக்கூடாது, மற்ற பிள்ளைகளைப் போல் இவர்களுக்கும் பொதுவான கல்வியை வழங்குவதே கே.வி ஆரம்பிக்கப்பட்டதன் குறிக்கோள்.

இந்த கேவி கல்வி நிறுவனங்கள் சிபிஎஸ்இ (CBSE) மற்றும் என்சிஇஆர்டி (NCERT) வரை முறைக்கு உட்பட்டவை. இந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாம் மொழியை அவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். இது சிபிஎஸ்இ விதிமுறைகளில் ஒன்று.
அதன்படி சமஸ்கிருதம் மற்றும் அந்தந்த மாநில மொழிக்கான வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மூன்றாம் மொழியாக தமிழ்நாட்டில் தமிழ் அல்லது சமஸ்கிருதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும்.
இதில் ஒரு நடைமுறை சிக்கல் என்னவென்றால், குறிப்பிட்ட அளவு மாணவர்கள் தமிழையோ சமஸ்கிருதத்தையோ தேர்ந்தெடுத்தால் தான் அந்த வகுப்பில் மூன்றாம் மொழியாக அது கற்பிக்கப்படும். கேவி பள்ளிகளில் பெரும்பாலும் பிராந்திய மொழிகளை மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பதில்லை.
ஏனெனில், அவர்கள் ஆறாம் வகுப்பில் மூன்றாம் மொழியாக தமிழை தேர்ந்தெடுத்தால், அந்தப் பிள்ளையின் பெற்றோர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால், ஏழாம் வகுப்பில் மற்றொரு மொழியை மூன்றாம் மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அது அவர்களுக்கு அதிக சுமையைத் தரும்‌.
எனவே பெரும்பாலும் கேவி மாணவர்கள் மூன்றாம் மொழியாக சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தானே தவிர, மத்திய அரசின் சட்டத்தினாலோ அல்லது திணிப்பினாலோ இல்லை.
மேலும், தமிழகத்தில் உள்ள எந்த சிபிஎஸ்இ பள்ளியிலும் தமிழ் கட்டாயம் இல்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது - அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகள் உள்பட! தமிழ்நாட்டில் தமிழர்களால் நடத்தப்படும் பள்ளிகளிலேயே தமிழ் கட்டாயம் இல்லை என்றான பின், மத்திய அரசினால் பல்வேறு மாநில மாணவர்களுக்காக நடத்தப்படும் கேவி பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது என்ன நியாயமாக இருக்க முடியும்..!? 😏😏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...