#சேலம் குகை என்றால் சேலம் மக்களுக்கு நினைவுக்கு வரும் இரண்டு விசயம்? அது என்ன என்று பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாது..
அது தான் நம்ம சேலம் குகை குழம்பு கடை மற்றொன்று குகை ஜிலேபி கடை.
நாம்ப இப்போ பாக்க போரது சேலம் ஜிலேபி தெரு.
சேலத்தில் ஒரு, ஒரு தொழிலுக்கும் ஒரு சிறப்பு, பாரம்பரியம், ஈடுபாடு, உழைப்பு, தொழில் நேர்த்தி அதாவது அந்த தொழிலில் அவர்களை அடித்து கொள்ள ஆலே இல்லை என்ற அளவுக்கு சத்தமே இல்லாமல் நடைபெரும் அது தான் சேலத்தின் சிறப்பு.
#குகை #மாரியம்மன்கோவில் தெரு என்றால் எல்லோருக்கும் தெரியும் அந்த தெருவுக்கு இன்னொரு பெயரும் உண்டு அது சேலம் ஜிலேபி தெரு.
குகை கோவிலை நீங்கள் தாண்டியவுடன் உங்கள் கண்களுக்கு தெரிவது எல்லாமே ஜிலேபியாகத் தான் இருக்கும். அந்த தெருவே ஜிலேபியாக சும்மா தேனீக்கள் மோய்க்க சுட சுட உங்கள் கண் முன்னே பாகில் நலைத்து இந்தா தாம்பி ஒரு ஜிலேபி சாப்பிட்டு பாருங்க என்று தருவாங்க..
வாங்கி சாப்பிட்டால் அட அட என்ன ருசி அதுவும் சூட மொரு மொரு என்று சொல்ல வார்த்தை இல்லை!! அடுத்து நாம்ப என்ன பன்னுவோம் டேஸ்ட் நாக்கில் ஒட்டிக்கும் இன்னும் சாப்பிடனும் வீட்டுக்கும் வாங்கி தரலாம் என்று நினைக்கும் அப்போ தான் தெரியும் நமக்கு சாப்பிட்டு பாக்க அவிங்க ஜிலேபி தரவில்லை.. நம்ப ஆசையை தூண்டவே என்று. இது தான் நம்ம சேலத்துக்காரங்க தொழில் நேர்த்தி பொருள் தரமா இருந்தால் தான் வாங்க சொல்லுவங்க.
ஜிலேபி நல்லாருக்கு ரேட்டு கூட இருக்குமே என்று நினைக்கும் மனசு அது தான் இல்லைங்க ஒரு ஜிலேபி 5 ரூபாய் மட்டுமே.. ஒரு கிலோ 240 என்றார்கள் ஒரு கிலோக்கு 40 பீஸ் கிட்ட வரும்.
#தீபாவளி பண்டிகை என்றால் குகை தெரு பரப்பரபாக காணப்படும். இவர்களிடம் ஜிலேபி மட்டும் இல்லிங்க லட்டு, பாதுஷா, முந்துரி கேக், கார வகைகள் நம்ம வீட்டில் செய்வது போல சுத்துமாகவும், பொருள் தரமாகவும் மக்களிடம் சேர்க்கின்றனர். வெளியுர் மக்களுக்கும் சேலம் குகை தெரு ஜிலேபி என்றால் தெரியும் அளவுக்கு சத்தமே இல்லாமல் 60 வருடம் பாரம்பரியமாக ஸ்ரீ சண்முகவிலாஸ் ஜிலேபி கடை அமைந்துள்ளது.
கல்யாணம், வலைகாப்பு, கோவில் பண்டிகை, பலகார சீட்டு மற்றும் பல அனைத்து வீசேசங்களுக்கும் இங்கு தரமான பலகாரம் வாங்கலாம், நீங்கள் வீயாபரம் பண்ட நினைத்தால் இவர்கள் மொத்தவிலைக்கு, சில்லரை விலைக்கும் தருகிறார்கள்..
அண்ணனுக்கு ஒரு கிலோ ஜிலேபி பார்சல் 


நம்ம சேலம்!! நம்ம ஊரு !!
Google map

No comments:
Post a Comment