Monday, July 12, 2021

வெள்ளை_யானை...!

 #சன்_டீவியில் நேற்று நேரடியா ரிலீஸான படம்.

விவசாயிகள் பற்றிய கதை. பேங்கில் கடன் வாங்கி விவசாயிகள் படும் துன்பம் தான் களம்.
எல்லாம் சரி தான்.
ஆனால் 'நாம ஊருக்கே சாப்பாடு போடுறோம், நமக்கு உதவ ஒருத்தரும் இல்லை'ங்கிற மாதிரி வசனமெல்லாம் எங்களை ஏதோ குற்றவாளி மாதிரியே நினைக்க வைக்குது.
நாம ஏமாற்றினோமா விவசாயிகளை?
விளை பொருட்களை நாம அடிச்சுப் பிடுங்கினோமா?
இல்லை அடிமாட்டு விலைக்கு வாங்குறோமா?
Director, producer,technicians,நீங்க,நான்,ஏன் நாம எல்லாருமே ஐந்து பங்கு விலை கொடுத்து தான் marketல விளைபொருட்களை வாங்குறோம்.
தரமான சாப்பாட்டு அரிசி கிலோ 75/-₹.பருப்புகள் 75-120/₹ வரை கூட இருக்கு.
நாம வாங்கத்தானே செய்யறோம்!
அட! லாக்டவுனுக்கு முதல் நாள் கறிகாயெல்லாம் எதையெடுத்தாலும் 150-200 ₹.
வாங்காமலா இருந்தோம்?
இப்படி எவ்வளவோ உதாரணம் தரலாம்.
ஆக நமக்கு விலைவாசி உயர்வு, ஆனால் விவசாயிகள் ஏழ்மையில்!
அப்போ பணம் எங்கேதான் போகுது??
அதைச் சொல்லுங்க டைரக்டர்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் முடிவு கட்டத் தானே Farm laws கொண்டுவந்தது அரசு.
அதை குறுக்க விழுந்து தடுக்குதே ஒரு கூட்டம்.
அதைச்சொல்லுங்க டைரக்டர்.
போற போக்குல ஒரு வசனம் வேற, அரசாங்கமும் நமக்கு ஒண்ணும் பண்ணலைன்னு.
இலவச மின்சாரத்தில் தொடங்கி கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி வரை அரசாங்கம் பண்ணலையா?
பயிர் காப்பீட்டு திட்டம் முதல் kisan samman nidhi வரை கொண்டு வரலையா?
அதைச்சொல்லுங்க டைரக்டர்.
இதெல்லாமும் சமூக அக்கறை தானே?
இதெல்லாம் போக,பெங்களூருவுக்கு பஞ்சம் பிழைக்கப்போன நம்மூர் விவசாயிகளை பெங்களூர் போலீஸ் வீடு புகுந்து தூக்கிட்டு போயி பொய் கேஸ் போடுறாப்புல ஒரு காட்சி!
பல வருஷமா அந்த சிவாஜிநகர் பகுதில தமிழர்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறப்போ இந்த மாதிரி காட்சிகள்
தேவையா?
நாமும் கன்னடர்களும் ஒற்றுமையா வாழ்வதைப்போல காட்டலாமே.
படக்கதை தானே.பாசிடிவ்வா சொல்லுங்களேன் டைரக்டர்.
பி.கு:- Cinematograph bill-ன் அவசியம் இப்போ புரியுதா..! 😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...