Sunday, July 18, 2021

அமைச்சர் அறையில் உதயநிதி படம்.

 அமைச்சர்கள் அறையில் உதயநிதி படம் மாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'இது தலைமை செயலகமா அறிவாலயமா' என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் தங்கள் அறையில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் மாட்டி வைத்துள்ளனர்.


latest tamil news


சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவரது அறையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த படத்தில் அமைச்சர் அறையில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை தொடர்ந்து உதயநிதி படமும் இருப்பது தெரிய வந்தது.

இந்த புகைப்படத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து 'தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம். தலைமை செயலகமா; அறிவாலயமா?' என கேட்டுள்ளார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...