கரூர் மாவட்ட தி.மு.க. வினரின் சட்டவிரோத அத்துமீறல் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில்.

அதிகாலை 5 மணியில் இருந்து வரிசையில் காத்திருப்போருக்கு தடுப்பூசி கிடைப்பதில்லைஅவர்கள் அதிகாலையில் இருந்து சுட்டெரிக்கும் வெயிலில் 1 மணிவரை காத்திருந்து தடுப்பூசி போடாமல் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. தடுப்பூசி கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் ஊர் ஊராகச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தி.மு.க.வினர் தங்கள் சொந்தப்பெயரை முத்திரை பதித்து டோக்கன் கொடுப்பது கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் நடக்கிறது. அனில் அமைச்சர் இதற்கு என்ன நரிக்கதை சொல்லப் போகிறார்? மக்களின் பாவத்தை சுமக்கும் தி.மு.க.வினரின் கதி என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம். அதோடு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என பார்ப்போம்.
இந்த சம்பவம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் தடாகோவிலில் நேற்று (03-07-2021) நடந்தது.
No comments:
Post a Comment