*பசியெடுத்தால் உணவை தேடுவான். உறக்கம் வந்தால் படுக்கயை தேடுவான். காசு இருந்தால் சுகத்தை தேடுவான்.கவலை வந்தால்தான் கடவுளை தேடுவான். இதுதாங்க மனிதன் !!*
*மற்றவர்களுக்கு நாம் வலிய போய் செய்யும் அறிவுரை உபதேசம் அன்பு இந்த மூன்று விசயங்களுக்கு மதிப்பு இருக்காது.*
*எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு, நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை.*
*அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்..*
*தங்க நாற்காலியின் முன் கைகட்டி நிற்பதை விட உங்கள் உழைப்பினால் ஆன தகர நாற்காலியின் மேல் கால் போட்டு உட்கார கற்றுக்கொள்ளுங்கள்!*
*ஒவ்வொரு பொழுதும் உங்கள் தேவைகளை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் சக மனிதர்களை நம்பி வாழாதீர்கள் ..! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின் சுயரூபம் வெளிப்படும் போது மனம் உடைந்து சிதறி விடுகின்றது..!*
*அழகு திரும்ப, திரும்ப பார்க்கத்தான் வைக்கும். ஆனால் அன்பு திரும்ப, திரும்ப நினைத்து பார்க்க வைக்கும்...!*
*ஆசைகளும் வசதிகளும் குறைவான இடத்தில் வாழ்வதற்கான வாய்ப்புகள் நிறைவாக இருக்கும்...*
*எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் மனசு மட்டும் இருந்து விட்டால் உலகத்தில் நம்மை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது...*
*நிதானம் நிம்மதியைத் தரும். காதல் வந்துவிட்டால் கழுதையும் நடனமாடும். காசு வந்துவிட்டால் காக்கையும் கானம் பாடும். போதைகள் அதிகமானால் பாதை மாறிப்போகும்.ஆசைக்கு அடிமையானால் அவதிகள் அதிகமாகும்.வயதில் வளையாவிட்டால் வாழ்க்கை தான் வீணாய்ப்போகும்.வார்த்தையில் வலிகள் தந்தால் வரவுகள் வறுமையாய்ப் போகும்.பணமே பெரிதானால் பாசம் குறைந்து போகும். புகழுக்குள் புகுந்து விட்டால் புன்னகை மறைந்து போகும். நிதானம் நிலை குலைந்தால் நிம்மதி தொலைந்து போகும். சிந்திக்க மறந்து விட்டால் சிந்தனை சிதைந்து போகும். நன்றியை மறந்து விட்டால் நன்மைகள் கரைந்து போகும்.நாவடக்க மறந்து விட்டால் நாகரிகம் பறந்து போகும். சிரிக்க சிரமப்பட்டால் சிறுமையும் சிரித்துப் போகும். சிக்கனம் மறந்து விட்டால் சீக்கிரம் செலவாய்ப் போகும்.ஆடைகள் குறைந்துவிட்டால் ஆபாசம் கூடிப்போகும். அளவுக்கு அதிகமானால் அன்புவாசம் அழிந்து போகும். மனிதனாய் வாழ்ந்து விட்டால் மனமே மாலைபோடும். உண்மையாய் வாழ்ந்துவிட்டால் உலகமே கவிதை பாடும்.*
No comments:
Post a Comment