தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல், ஏராளமான ஐ.ஏ.ஏஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இன்னும் மாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியல் காத்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றங்கள் அனைத்தும், முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரை அடிப்படையில் செய்யப்பட்டாலும், அவருக்கு யார் பரிந்துரை செய்தது என்பது குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. பின்புலம்கனடாவில் இருந்து, 'ரிமோட் கன்ட்ரோலில்' ஷெட்டி என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் தகவலும் கிடைத்துள்ளது. ஷெட்டியின் செயல்பாடு குறித்து நன்கு அறிந்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த 2006- - 11 தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறையை கவனித்து வந்த ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தார்.அப்போது அவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷெட்டி.
உள்ளாட்சி துறை நிர்வாகத்தில் ஸ்டாலின் சிறப்பான பெயர் எடுக்க அவருக்கு உதவிக்கரமாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்ததால், அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ஷெட்டி பழிவாங்கப்பட்டார். இருப்பினும், ஸ்டாலின் உடனான அவரின் ஆழமான நட்பும், புரிதலும் தொடர்ந்தது.ஆலோசகர்எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போதும், ஷெட்டி அடிக்கடி அவரை சந்தித்தார். ஒருகட்டத்தில், இது அப்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியவர, அவருக்கு துறை ரீதியாக நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசு பொறுப்பே தனக்கு வேண்டாம் எனக் கூறி, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்.ஆட்சியாளர்கள் அதை ஏற்காமல் கிடப்பில் போட்டனர். ஆனாலும், உச்ச நீதிமன்றம் வரை சென்று, தமிழக அரசு பொறுப்பில் இருந்து வெளியேறினார் ஷெட்டி. தற்போது தமிழக அரசில் முக்கிய துறையின் செயலராக இருக்கும் முருகனின் பெயரை உடைய அதிகாரியும், ஷெட்டியும் நல்ல நண்பர்கள். அரசு பொறுப்பிலிருந்து ஷெட்டி வெளியே வந்த நேரத்தில், மத்திய அமைச்சராக இருந்த வாசனுக்கு, நேர்முக செயலராக இருந்தார் முருகனின் பெயரை உடைய அந்த அதிகாரி.அவர் வாசனிடம் கூறி, ஷெட்டிக்கு தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணைவேந்தர் பொறுப்பை வாங்கி கொடுத்தார்.
சில ஆண்டுகள் துணைவேந்தர் பொறுப்பில் இருந்த ஷெட்டி, தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்தும் ராஜினாமா செய்து விட்டார். பின், தி.மு.க.,வின் வெற்றிக்காக தொடர்ந்து மறைமுகமாக பாடுபட்டு வந்தார். சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவிக்கப்படாத ஆலோசகராக செயல்படத் துவங்கி விட்டார். தற்போது, ஸ்டாலின் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு பின்னணியில் இருப்பவர் அவரே. குறிப்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம், மாற்றம் தொடர்பாக எது நடந்தாலும், அது, ஷெட்டியின் சிபாரிசு அல்லது ஆலோசனைப்படியே நடக்கிறது.தலைமை செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டது முதல், இளைஞர்கள் பலர் பல்வேறு மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக நியமிக்கப்பட்டதற்கும் ஷெட்டியின் யோசனையே காரணம். இப்படி ஏராளமான அதிகாரிகள் மாற்றப்பட்டாலும், முக்கிய துறையின் செயலராக இருக்கும், முருகன் பெயருடைய அந்த அதிகாரி மட்டும் மாற்றப்படவில்லை. இதிலிருந்தே ஷெட்டியின் பின்னணியை அறியலாம்.

அதே நேரத்தில், சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருக்கும் பலர், தி.மு.க., ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். செல்வாக்குகுறிப்பாக, இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது, தலைமை செயலராக இருந்த ராஜிவ் ரஞ்சன், அங்கிருந்து மாற்றப்பட்டு, 'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல, ஹன்ஸ்ராஜ் வர்மாவும் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். இவர்கள் நொந்து போய், மத்திய அரசு பணிக்கு வாய்ப்பு கிடைத்தால், மாற்றலாகிச் செல்ல தயாராக உள்ளனர்.
இதற்காக சிலர் டில்லியில், 'லாபி' செய்தும் வருகின்றனர்.தமிழகத்தில் இருக்கும் பல்கலைகளுக்கு, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களை நியமிக்க பரிந்துரை செய்யும் அளவுக்கு ஷெட்டியின் செல்வாக்கு விரிந்துள்ளது.தற்போது கனடாவில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்தபடியே, தமிழக அரசையும், ஸ்டாலினையும், 'ரிமோட் கன்ட்ரோலில்' இயக்கி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.-
No comments:
Post a Comment