Sunday, July 11, 2021

குளிர் விட்டு போனது கொரோனா அச்சம் ; தி.நகரில் கட்டுக்கடங்காத கூட்டம்.

 தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் முறையாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளத


தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன. சென்னை தியாகராய நகரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மட்டுமின்றி, நடைபாதை கடைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.பொருள் வாங்கும் ஆர்வத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறினர்.



ரங்கநாதன் தெரு உட்பட தி.நகரின் முக்கிய வர்த்தக பகுதிகளில், மக்கள் மூக்கிற்கு கீழ் முக கவசம் அணிந்து சுற்றுவதை காண முடிந்தது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ரங்கநாதன் தெரு, தி.நகர் பேருந்து நிலையம், நடேசன் பூங்கா, மாம்பலம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் மாநகராட்சியினர் முகாம் நடத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இங்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, முக கவசம் அணியவும், இடைவெளிவிட்டு பொருட்கள் வாங்கவும் வலியுறுத்தினர்.



எனினும் இந்த அறிவுரைகளை காதில் வாங்காத பொதுமக்கள், தங்கள் இஷ்டம் போல் கடை வீதிகளில் வலம் வந்தனர்.இதனால் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமீறிய கடைகள், வியாபாரிகளிடம் 90,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...