இந்த #அகண்ட_பாரத தேசத்தில் இருந்து நமக்கு #தனி_நாடு என்று எதுவும் வேண்டாம்..! அப்படி கேட்பதில் எந்த உடன்பாடும் கிடையாது...!
ஆனால் அப்படி பிரிப்பதாக இருந்தால் எங்கள் #குமரியை #தனி_யூனியனாக பிரித்து தாருங்கள்...! அது போதும்...! 

ஏனெனில் அனைத்து அரசு தேவைகளுக்கும் #சென்னையையே நம்ப வேண்டி உள்ளது...!
அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் எங்களை பற்றி எந்தவித கவலையும் கிடையாது எப்போதுமே...! எந்தவித தொழில், வேலைவாய்ப்பும் கிடையாது...! கொஞ்சம் முன்னேற நினைத்தால் நன்றாகவே படித்தாலும் கண்டிப்பாக அயல்நாட்டையோ, குறைந்தபட்சம் சென்னை,கோவையையோ நம்பி தான் பிழைக்க வேண்டியுள்ளது...!
மேலும் 780 கிலோமீட்டர் தூரமுள்ள தமிழக #தலைநகரமான_சென்னையை சாராமல் வெறும் 67 கி.மீ. தூரமுள்ள கேரளாவின் தலைநகர் #திருவனந்தபுரத்தை சார்வது மிகவும் எளிது...! ஆனாலும் அது தேவையில்லை...! உணர்வால், பண்பாட்டால் #தமிழனாகவே இருக்க விரும்புகிறோம்...! ஆனாலும் #தனித்துவமாக இயங்க விரும்புகிறோம்...!
#ஐவகை_நிலங்களும் எங்கள் பிரதேசத்தில் உள்ளது...! கடல்வளமும், ஆற்றுப்படுகையும் உள்ளது...! அதை வைத்து #சுயசார்பை எங்களால் அடைய முடியும்...! அவ்வளவு திறமையும், தகுதியும், உழைப்பும் எங்களிடையே கொட்டி கிடக்கிறது...! வெற்றியோடு மீண்டு வருவோம் நாங்கள்...! வேண்டும் குமரி...! 

அதனால் #குமரியை_தனிபிரதேசமாக அறிவிக்க வேண்டும்...! 



No comments:
Post a Comment