புரட்டாசி 5 ம் தேதி (21 - 9 - 20211) செவ்வாய் கிழமை ஆரம்பித்து புரட்டாசி 19 ம் தேதி (5 - 10 - 20211) செவ்வாய் கிழமை விஷஸத்திரஹத பிதுர் மஹாளயம் வரை, ஆக 15 நாட்கள் மஹாளயபட்ச நாட்கள் ஆகும்.
புரட்டாசி 20 ம் தேதி (6 - 10 - 20211) புதன் கிழமை மஹாளய அமாவாசை வருகிறது.
இறந்த நமது பெற்றோர்கள், நமது தாய் வழி மூதாதையர் 5 தலைமுறை, நமது தந்தை வழி மூதாதையர் 5 தலைமுறை ஆகிய முன்னோர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, மஹாளயபட்சமான 15 நாட்கள் ஆக வருடத்திற்கு 18 நாட்கள் பித்ருலோகத்தில் இருந்து பூலோகத்தில் அவர்களுக்கு பிடித்த, பிரியமான இடத்திற்கு வந்து செல்வார்கள். வருடத்திற்கு 18 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பித்ருலோகத்தை விட்டு வெளியே வரமுடியாது.
அந்த 18 நாட்களில் நமது வீட்டுக்கு வரும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு விருப்பமான செயல்களை செய்து, விருப்பமானவற்றை படையல் இட்டு வழிபட்டு உபசரித்து சந்தோசப்படுத்துங்கள்; சந்தோசம் அடையுங்கள். (நமது பெற்றோர்களுடன் வரும் மூதாதையர்களுக்காக ஆசாரமான படையலும், வழிபாடும் முக்கியம்.) அவர்கள் சந்தோசத்துடன் தரும் நல்ல சிறப்பான பலன்களை பெறுங்கள். அவர்கள் கொடுக்கும் நற்பலனை எந்த தெய்வத்தாலும் தடுக்க முடியாது.
தினசரி மற்றும் மாத அமாவாசை தினங்களில் நமது முன்னோர்களுக்காக செய்யும் விரதம், படையல், வழிபாடுகளை பித்ரு தேவன் பெற்று, பித்ருலோகத்தில் உரியவர்களிடம் சேர்த்துவிடுவார். ஆசாரத்தை தனது பிள்ளைகளிடம் பெற்றோர் எதிர்பார்பதில்லை, ஆனால் பித்ருதேவனுக்கும், நமது பெற்றோர்களுடன் வரும் மூதாதையர்களுக்கும் ஆசாரமான படையலும், வழிபாடும் முக்கியம். பித்ருதேவனும், நமது பெற்றோர்களுடன் வரும் மூதாதையர்களும் ஆசாரம் இல்லாத படையலையும் , வழிபாட்டையும் ஏற்பது இல்லை. அதனால் ஆசாரம் இல்லாத படையலும், வழிபாடும் நமது முன்னோர்களிடம் போய் சேருவதில்லை.
நமது பெற்றோர்கள், நமது தாய் வழி மூதாதையர் 5 தலைமுறை, நமது தந்தை வழி மூதாதையர் 5 தலைமுறை ஆகிய முன்னோர்களுக்கு மட்டுமே நாம் படையல் விடமுடியும். உங்களுக்கு பிரியமான மற்ற யாருக்கும் தகுந்த சிவாச்சாரியர்கள் மூலமாக தர்ப்பணம் செய்யலாம்.
இந்து மதத்தின்படி சித்தர்களுக்கு மட்டும் சமாதியில் வழிபாடு உண்டு. மற்ற சாதாரண மனிதர்களை பொறுத்தவரையில் சமாதியில் வழிபாடு கிடையாது.
சமாதிக்குள் வைக்கப்பட்ட உடல் அழுகி, புழு பூச்சிகளால் சாப்பிடப்பட்டு உடல் அழிந்துவிடும். ஆக சமாதிக்குள்ளோ, எரியூட்டப்பட்ட இடத்திலோ உடல் அழிந்து விடும். உடல் அழியும்வரை ஆன்மா உடலருகில் இருக்கும். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஆன்மா இந்த பூமியில் பேய் ஆக அலைந்துகொண்டு இருக்கும்; யாருடைய வீட்டுக்குள்ளும், வழிபாட்டு ஸ்தலங்களுக்குள்ளும் நுழையமுடியாது. அவர்கள் விதிப்படி இயற்கையாக வாழ்நாள்(ஆயுள்) முடியும் காலம்வரை இந்தநிலை தொடரும்.
இயற்கையாக மரணம் அடையும்போது, மரணத்துக்குப்பின்பு ஆன்மா பதினாறு நாட்கள் வரை இந்த பூமியில் தனக்கு விருப்பமானவர்கள் அருகில் இருக்கும். அதன்பின்பு பித்ரு லோகம் செல்லும். அதற்கு பின்பு வருடத்திற்கு 18 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பித்ருலோகத்தை விட்டு வெளியே வரமுடியாது.
முழு முதல் தெய்வம் நமது மூதாதையர்களே. அதற்கு அடுத்து நமது குலதெய்வம்; அதற்குப்பின்புதான் இதர தெய்வங்கள். நமது மூதாதையர்கள், குலதெய்வம் தந்த நல்ல மற்றும் கெட்ட பலன்களை மாற்றாமல் மட்டுமே மற்ற தெய்வங்கள் செயல்பட முடியும். அதற்கு காரணம் விதியை நிர்ணயித்த தெய்வங்களால் விதியை முழுவதுமாக ஒதுக்கி நற்பலன் தர முடியாது. அவர்களை வழிபடுவது இந்த பிறவியில் ஓரளவு நிவாரணமும், அடுத்து வரப்போகும் பிறவிகளின் விதியை அல்லது பிறவி இல்லாமையை நிர்ணயிக்கும்...
விதியை நிர்ணயம் செய்வதில் பங்குகொள்ளாத நம் முன்னோர்கள், பெற்றோர்கள், குலதெய்வங்களால் விதியை மீறி நமக்கு நல்லதோ, கெட்டதோ செய்யமுடியும்.
No comments:
Post a Comment