தமிழில் பெயரை எழுதும் போது முன் எழுத்தையும் (INITIAL) தமிழில் எழுத வேண்டும்!
அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்.
அமைச்சர் கூறியபடி சில பெயர்களைக் கற்பனை செய்தேன்.
இப்பெயர்கள் முழுக்க முழுக்கக் கற்பனையே - நிஜத்தில் எவரையும் குறிப்பிடும் நோக்கில் அல்ல - ஒரு விவாதத்தின் பொருட்டே!
பாலூர் விஸ்வநாதன் மகன் ராமசாமி - P.V. ராமசாமி இனி பா.வி.ராமசாமி ஆவார்!
குன்றத்தூர் சுப்ரமணியன் மகன் பாண்டி - K.S.பாண்டி - இனி கு.சு.பாண்டி ஆகி ஊரையே நாறடிப்பான்!
சாத்தூர் உதயகுமார் மகன் - தாமோதரனை அழைப்பவர்கள் சா.உ.தாமோதரா என அழைத்து அவரை ஒருகணம் திகைக்க வைக்கலாம்!
வானூர் வாசுதேவன் மகள் கமலாவை வா.வா.கமலா என எவர் அழைத்தாலும் அவள் கோபிக்க மாட்டாள்!
முத்தரசம்பட்டி துரைசாமி மகள் மைவிழி தனது கையெழுத்தை - இனிஷியல் மட்டும் போட்டு-இடும் போதெல்லாம் மு.து.மை ஆகிவிடுவார்!
காஞ்சிபுரம் லிங்கப்பன் மகன் கோவிந்தன் கா.லி.கோவிந்தன் ஆகிவிட்டதாலேயே - ஒரு நல்ல ஜெண்டில்மேன் ஆக இருக்கும் தகுதியை இழக்க வாய்ப்பு உண்டு!
வயலூர் சைலேந்திரன் மகள் சுந்தரி - வ.சை.சுந்தரி ஆவாள்!
இதெல்லாம் போகட்டும்...
வேலூர் சின்னச்சாமி மகள் விஜயா என்ன ஆவாள் என்பதை நினைத்தால்தான் மனம் பதைக்கிறது!
No comments:
Post a Comment