பறவைக்கு என்று ஒரு குணம் ,
புளிக்கு என்று ஒரு குணம், மானுக்கென்று என்று ஒரு குணம்,.
குரங்கிற்கு என்ற ஒரு குணம்,
ஆனால் மனிதனிடத்தில் உலகில் உள்ள அனைத்து விலங்கினத்தின் குணமும் ஒன்று சேர இருக்கும்.
உலகில் உள்ள எல்லா விலங்கினத்திற்கும் மூன்றே மூன்று குறிக்கோள் தான் இருக்கு.
1.பசி எடுத்தால் உணவு உண்பது.
2.தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது.
3.தினவு எடுத்தால் துணை தேடுவது .
வேறு எந்த நோக்கமும் கிடையாது. நான் நான் என்று தனக்கா மட்டுமே வாழக்கூடியது விலங்கினம்.
ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளே விலங்கும் இருக்கிறது
மனிதனும் இருக்கின்றது.
இறைவனும் இருக்கார்.
நான் மனிதனாக பிறந்து மனிதனாக இறக்க வேண்டுமா? விலங்காக இறக்க வேண்டுமா? இறைவனாக மாறி மோட்சம் அடைய வேண்டுமா என்பதை சிந்திப்பீர்.
விலங்கினத்தில் இருந்து மனிதனாக மாறி பிறகு மனிதன் மாமனிதனாக மாறி பிறகு மாமனிதன் இறைவனாக மாறவேண்டும்.
எனக்கு எனக்கு என்று நான்
வாழுகிற போது விலங்காகவும்,
குடும்பம் ஊர் சுற்றத்திற்க்காக வாழுகிற போது நான் மனிதனாகவும், சமூகத்திற்காக வாழ நமது மனம் விரியும் போது இறைவனாகவும் ஆகிறோம்.
No comments:
Post a Comment