ஹலோ.... போலீஸ் ஸ்டேஷன்...?
ஆமா.... சொல்லுங்கம்மா....
சார்... பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில மெயின் ரோட்டுக்கிட்டே இருந்து பேசுறேன்... ஒரு கார் ஒரு பெரியவரை மோதிட்டு நிற்காமல் போய்கிட்டே இருக்கு சார்... உடனே வாங்க....
(சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார்....)
இங்க யாரும்மா போன் செஞ்சது...?
நான்தான் சார்....
மோதினது என்ன கார்னு தெரியுமாம்மா....?
அந்த அவசரத்தில நான் கவனிக்கல சார்....
சரி கார் நம்பரையாவது நோட் பண்ணீங்களா....?
இல்லையே சார்.... அவ்வளவு வேகமா போகும்போது எப்படி சார் நம்பரை நோட்பண்ண முடியும்...?
சரி... சரி.... காரை ஓட்டினவர் எப்படி இருந்தார்...? வயசானவரா...? சின்ன வயசா...?
நான் உங்களுக்கு போன் செய்யனுமேங்ற கவனத்தில அதை பார்க்க விட்டுட்டேனே சார்..
என்னம்மா இது.... இப்படி எதையுமே கவனிக்காம விட்டுறிக்கீங்க.... சரி சரி... உள்ள யாராவது இருந்தாங்களா...?
ஆமா சார்... உள்ள முப்பது வயசு இருக்கிற ஒரு பொண்ணு இருந்துச்சு.....
வெரிகுட்..... அவங்க எப்படி இருந்தாங்க...? என்ன கலர் டிரஸ் போட்டிருந்தாங்க.....? சாரியா....? இல்ல வேறயா....?
அவங்க நல்லா சிகப்பா இருந்தாங்க ரவுண்டு முகம்... ரோஸ் கலர்ல பச்சை பார்டர் வச்ச பட்டுப்புடவை கட்டியிருந்தாங்க சார்.... ஃபுல் ஜரிகை.. அதுக்கு மேச்சா பச்சை கலர்ல ஜாக்கெட்... கழுத்தில ரெட்டவடம் முகப்பு செயின் போட்டிருந்தாங்க.... அதுக்கு மேல வெள்ளை கல்லும் ரோஸ் கல்லும் வச்ச ஆரம் போட்டிருந்தாங்க.... காதுல அழகா பூப்போட்ட தோடு சின்னதா இல்லாமலும் பெருசா இல்லாமலும் மீடியமா போட்டிருந்தாங்க.... மெரூன் வொயிட் கல்லுவச்ச வளையல் கைக்கு ரெண்டு போட்டிருந்தாங்க.... டிசைன்பொட்டு சின்னதா வச்சிருந்தாங்க... இவ்வளவுதான் சார் கவனிச்சேன்.......
"


அடேய் 

No comments:
Post a Comment