*நடிகை சுஜாதா தமிழில் நடித்த முதல் படம் அவள் ஒரு தொடர்கதை கடைசி படம் வரலாறு.*
சின்ன வயதில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் ஒரு தொடர்கதையாகி தென்னிந்திய திரை உலகில் முப்பது ஆண்டுகளுக்கு குறையாத வரலாற்றை
சொல்வது போலிருக்கிறது முதலும் கடைசியுமான படங்கள்.
தென்னிந்திய சினிமாவில் மூன்று செஞ்சுரிகள் போட்ட சுஜாதா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற அன்னக்கிளியின் நாயகன் சிவக்குமார் உடன் 12.படங்களில்ஜோடியாக நடித்து
உள்ளார்கள். அவர் சுஜாதாவுடனா நினைவுகளை பகிர்ந்து கொண்டது ஒரு
அழுத்தமான திரை காவியம் போல் இருந்தது.
எந்த ஒரு நடிகையும் தான் நடித்த படம் வெற்றியடைந்து தனக்கு புகழும் செல்வமும் குவியனுமென்றுநினைப்பபாஙக. ஆனா
ஒவ்வொரு படத்தையும் அதுவே தனக்கு
கடைசி படமாக அமைய அந்த படம் தோல்வியை தழுவதா என எதிர் பார்த்த அபூர்வ நடிகை சுஜாதா. அதுக்கு காரணம் திருமணத்திற்கு முன் இருந்த சொந்த வாழ்க்கை சோகங்கள். எதாவது ஒரு சாமானியனை கல்யாணம் பண்ணிக் கிட்டு திரை உலகை விட்டு விலகி இருக்க நினைத்த சுஜாதாவை திரையுலகம் ரொம்பவே நேசிச்சது. வெற்றியும் புகழும் செல்வமும் போட்டி போட்டு தூரச்சி. அப்படி உச்சமா நினைச்ச படம் அன்னிக்கிளி என சொன்னால் நம்பறத்திற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். கறுப்பு வெள்ளை சினிமா வரலாற்றில் மிக பெரிய வசூலை அள்ளிக் குவித்த படம்.
கோயமுத்துர்ல ஒரு தியேட்டரில் 204நாட்கள் ஓடிய படம் அன்னிக்கிளி. திருப்பூர்ல ரீலிஸ் ஆன தியேட்டரில் 90 நாட்கள் ஒடியது. ஆனால் மாற்றிப் போட்ட
தியேட்டரில் 120 நாட்கள் ஒடி சரித்திரம்படைத்தது. முழுக்க முழுக்க அவுட்டோர் சூட்டிங் இளையராஜா இசை என வெற்றிக்கு பல காரங்கள் இருந்தது வேறு விஷயம்.
ஆனா சினிமாவே வேண்டாம் என நினைத்த சுஜாதாவை வெற்றியும் புகழும் செல்வமும் விரும்பி வந்து சேர்த்த படம் அன்னிக்கிளி. வேண்டிய எளிமையான வாழ்க்கை கைகூடமா, வேண்டாத பெரிய வாழ்க்கை விரட்டிக்கிட்டு வந்தது. அது தான் விதியோட விபரீதமான விளையாட்டு. அந்தகாலகட்டத்துப் படங்களில் இளையராஜாவும் சுஜாதாவும் அசைக்க முடியாத வியாபார ஆதாரங்களா இருந்தாங்க .
நடிகையாக பார்த்தால் சினிமாவில் அந்த கால கண்ணாம்பாவைப் போல் உணர்ச்சிமயமான நடிகை சுஜாதா. நாங்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் வாட்ச்மேன் வடிவேல். இந்த படத்தில் நான் வாட்ச்மேன் ஆகவும் எனக்கு மனைவியாக நடித்த சுஜாதா ரோடு போடற பெண்ணாகவும் வருவோம். அப்படி இருந்தும் பாடுபட்டு படிக்க வைப்போம்.அவன்வளர்ந்து சீமானாகி பெரிய வீட்டுக்கு மாப்பிள்ளை
ஆகி அந்த வீட்டிற்கு என்னை வாட்ச்மேன் ஆகவும் சுஜாதாவை வேலைக்காரியாக
வைப்பான். ஒரு காட்சியில் கேவலம் ஒரு வாட்ச்மேன் தானே நீ என இழிவா பேச ,உன்ன பெத்த கருப்பையை எரிஞ்சிடுவேன் என அறைந்து பேச வேண்டும்.
எங்க மகனாக நடிச்சது நாகேஷ் மகன் ஆனந்த் பாபு. அந்த சீன்ல உண்மையிலே
உணர்ச்சிமயமாகி விட்ட சுஜாதா அடித்த அடியிலும் நெருப்பாக வீசியகோபத்தில்
சீன் ஒகே ஆகிவிட்டது. ஆனா ஆனந்த் பாபு சற்று மயங்கி விழுந்து விட்டான். அவனை தேற்ற சுஜாதா கதறி அழுத காட்சி திரையில் வாராதது.
நிஜ வாழ்க்கையில் சுஜாதா ஒரு நெருப்பு தான். கற்புகரசி கண்ணகி கூட மாதவி
இடத்தில் கோவலனை விட்டுக் கொடுத்து
விட்டு அவனை இழந்த பிறகு தான் மதுரையை எரித்தாள்.
ஆனா சுஜாதாவோட கோபம் மாதவி வீட்டிற்கு செல்லும் முன் கோவலனை எரித்து விடும். அந்த விஷயத்தில் சுஜாதாவும் ஒரு கண்ணகி தான். சினிமாவில் பல நடிகர்கள் உடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் ஒரு கணவருடன் வாழ மாட்டார்கள் என தவறான அபிப்பிராயம் சமுதாயத்தில் இருந்தது. அது சுஜாதாவை ரொம்பவே ஆதங்கபட செய்தது. ஒரு சாமானியனை கல்யாணம் பண்ணிக் கிட்டு எளிமையான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சுஜாதா வாழ்வில் ஜெயகர் வந்தார். நினைச்சதுப் போலவே கடைசி வரை வாழ்ந்தாங்க. அதோட சாட்சி அவரது மகன் மற்றும் மகள்.
முன் பாதியில் விரும்பிய வாழ்க்கை விலகிபோயிருந்தாலும் இரண்டாவது பாதியில் விலகியிருந்த வாழ்க்கையை
வாழ்ந்து முடித்த சுஜாதா நல்ல நடிகைக்கு ஒரு உதாரணம்.

No comments:
Post a Comment