'கட்டடத்தின் பெருமை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் பழைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது' என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2014ல் இது அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது, இங்கு ஏராளமானோர் உயர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகே, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்கிவருகின்றன.
தி.மு.க., அரசு மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், இந்த கட்டடத்தை மீண்டும் சட்டசபை மற்றும் தலைமை செயலகமாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகதகவல் வெளியானது.இந்நிலையில், மருத்துவமனையின் முன்பக்கத்தில், புதிய தலைமை செயலகம் திறப்புக்கான கல்வெட்டு நேற்று முன்தினம் மீண்டும் பொருத்தப்பட்டது. இதனால் மருத்துவமனை, தலைமை செயலகமாக மாற்றப்படுமோ என நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பார்ப்பதற்கு பிரமாண்ட சிவலிங்கம் போன்று காணப்படும் இந்த கட்டடத்தில், சட்டசபை மட்டுமின்றி, முதல்வர், அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒரே இடத்தில் அறைகள் அமைக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், இந்த கட்டடத்தின் பெருமை மற்றும் வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அகற்றப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன. வேறு எந்த காரணமும் இப்போதைக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment