இலவச சீருடை
இலவச பாடப் புத்தகங்கள்
இலவச நோட் புத்தகங்கள்
இலவச புத்தகப்பை
இலவச செருப்பு
இலவச மதிய உணவு
இலவச சைக்கிள்
இலவச பேருந்து பயணம்
இலவச ஷூ மற்றும் சாக்ஸ்
இலவச ஜாமின்றி பாக்ஸ்
இலவச ஸ்மார்ட் போன் (Tablet)
அதோடு சாதாரண பள்ளிகளில் வசூலிக்கும் 40,000 முதல் CBSE பள்ளிகள் என சொல்லிக் கொண்டு வசூலிக்கும் 1,00,000 ரூபாய் போன்ற எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பதோடு பல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என செலவுக்கு கூட பணம் உண்டு..
எங்கே..!?
நமது தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு பள்ளிகளிலும் தான்..
ஆனால்..! தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதுமான மாணவர்கள் சேர்க்கை கூட இல்லை.. பல ஊர்களில் ஒற்ற இலக்கத்தில் தான் மாணவர் சேர்க்கை இருப்பதாகவும், ஒருசில வகுப்புகளில் சுத்தமாக கூட மாணவர் சேர்க்கை இல்லாமல் பல வகுப்புகளை இணைத்து பாடம் நடத்தப்படுவதாகவும் தகவல்..
ஏழ்மை, நடுத்தர வகுப்பினர் கூட கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் (சேர்க்கிறோம்) என்பது ஊரறிந்த விஷயம்..
சரி.. அத்தனையும் அரசு இலவசமாக கொடுக்கும்போது ஏன் அரசு பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்க்காமல் தனியார் பள்ளிகளை நோக்கி மக்கள் ஓடுகின்றனர்..
தன் பிள்ளை நல்லா படிச்சு முதல் ரேங்க் எடுக்கவா..!?
இல்லையே.. தற்போதெல்லாம் ரேங்க் என்பதே கிடையாது.. வேற..?
கக்கூஸ் சரியில்லை.. வாத்தியார் சரியில்லை என அப்படிஇப்படியினு ஏதேதோ காரணங்களை சொல்லலாம்..
ஆனா! முக்கியமான ஒரே காரணம்.. தன் பிள்ளை பல மொழியை கத்துக்கணும் அதுவும் தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை இங்கிலீஷில் படிக்கணும், பேசணும் என்பதாகத்தான் இருக்கும்..
தனியார் பள்ளிகளில் கூட இல்லாத ஐந்தாம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழி கல்வி.. அதற்குமேல் அவரவர் விருப்ப மொழி கல்வி.. அதோடு எல்லா தனியார் பள்ளிகளில் இருப்பதுபோலவே மூன்றாவதாக ஒரு மொழியை அரசு பள்ளிகளிலும் கற்றுக் கொடுப்போம் என அந்த மோடி முயற்சித்தால் அய்யோ என் தாய் மொழி அழிஞ்சிடும் என அலறுகிறோம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்..
ஒரு நல்ல அரசாங்கம் என்ன பண்ணனும்.. பல்லாயிரம் கோடிகளில் செலவிட்டு சம்பளம் கொடுக்கிறோமே எதற்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை இல்லை என ஆராய வேண்டும்..
ஓய்வுபெற்ற நீதிபதியோ, ஐஏஎஸ் அதிகாரியோ நல்ல ஒரு குழுவை அமைத்து மாணவர், பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அவர்கள் சொல்லும் குறைகளை எல்லாம் நீக்கி நல்லவிதமா அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிக்கணும்.. ஏழை, நடுத்தர மாணவர்கள் மேல் உண்மையில் அக்கறை கொண்ட அரசு அதைத்தான் செய்யும்..
IIT, JEE, BITSAT, NDA என ஆயிரத்தெட்டு போட்டி தேர்வுகள் இருக்கு.. ஆனா..! நீட் எனும் ஒரு பொம்மையை மட்டுமே வைத்து விளையாட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள் நீக்கவே முடியாது என தெரிந்தும்..
இன்று தமிழகத்தில் ஒரு லட்சத்து பனிரெண்டாயிரம் மாணவர்கள் நீட் எழுதி இருக்கிறார்கள்.. அதில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் வெறும் பத்தாயிரம் பேர் மட்டுமே..
மொழிதானே பிரச்சினை.. சரி உனது தமிழ் மொழியில் கூட எழுதலாம் என வாய்ப்பு கொடுத்தால்.. தமிழில் தேர்வு எழுதுறேன் என அப்ளிகேஷன்ஸ் போட்டவர்கள் வெறும் 18,000 பேர் மட்டுமே..
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்த்த மாட்டீங்க.. இடம் மட்டும் குடுத்தால் சர்வதேச தரத்தில் மாவட்டந்தோறும் 'நவதோயா பள்ளிகள்' என மத்திய அரசே முழு பள்ளிகளையும் கட்டிக் கொடுத்து பராமரிப்பு செய்வதையும் விடமாட்டீங்க..
யாருமே படிக்காத அரசு பள்ளிகளின் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மட்டும் டீ ஆத்துவீங்க.. எல்லாம் எங்க தலையெழுத்து..! 




No comments:
Post a Comment