#குமுதம் பத்திரிகை சென்னையில் 1947-48 இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் அவரின் நம்பிக்கைக்குரியவருமான பி.வி. பார்த்தசாரதி ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இப்போது இந்த பத்திரிகை குமுதம் குழுமத்தின் கீழ் வெளியிடுகிறது. இதன் கிளையாக நிறைய வார இதழ்கள் வெளியாகி வருகின்றன.
இளம் வயதில் இந்த புத்தகம் வாசிப்பு பழக்கத்தை தொடர காரணமான பத்திரிகைகளில் ஒன்று. நான் வாசிக்கும் காலத்தில் அரசு பதில்கள், ஆறு வித்தியாசங்கள், பிரார்த்தனை கிளப், லைட்ஸ் ஆன் வினோத், லைட்ஸ் ஆன் சுனில், வாசகர் கடிதங்கள், தொடர் கதைகள், சினிமா விமர்சனம், நடுப்பக்கம், சிறுகதைகள் என வாசித்த காலங்கள் வசந்த காலங்கள் என குறிப்பிடலாம்.
ஒரு படத்தில் ( இங்கிலீஷ்காரன்)
வடிவேலு திருமணமான தன் அக்கா வீட்டோடு ஓசியில் செட்டில் ஆவது போல
இந்த குமுதம் இதழுடன் #கல்கண்டு" பத்திரிக்கையும் சேர்ந்து விடும்.

ஆசிரியர் வெவ்வேறாக இருந்த போதிலும் ஒரே பதிப்பகம் என்பதால்
"குமுதம் கல்கண்டு" என்று இணைத்து வாங்குவதை அப்போதைய வாசகர்கள் வழக்கமாக வைத்து இருந்தார்கள்.
இது 1986 இல் 620,000 பிரதிகள் புழக்கத்தில் இருந்தது.
தற்போது இந்த பத்திரிகையை கடைசியாக நான் எப்போது படித்தேன் என்று எண்ணுதல், வாசிப்பு பழக்கம் தொலைந்து போன காலக்கொடுமை

No comments:
Post a Comment