ஒரு தேர்வை சந்திக்கத் துணிவில்லை. தன் திறமையின் மீது நம்பிக்கையில்லை.
தோல்வி வந்தால்தான் என்ன?
எதிர்கொள்ள சாமர்த்தியமில்லை.
காருக்கு ஸ்டெப்னி மாதிரி மருத்துவம் இல்லாவிட்டால் அடுத்து பாரா மெடிகல் லைன். அதுவும் இல்லாவிட்டால் அல்லது வேண்டாமென்றால் அடுத்த சாய்ஸ் என்ன என்பதை முதலிலேயே தீர்மானம் செய்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் இது இல்லாவிட்டால் அதைப் படிக்கலாம் என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ரயில் இல்லாவிட்டால் பஸ் அது இல்லையா ஆட்டோ ....ஊபர் ..எத்தனையோ மாற்று வழிகள் நிறைந்தது உலகு.
நாம் வாழ்க்கையில் முன்னேற ஆயிரமாயிரம் நல்வழிகள் உண்டு.
தேர்ந்தெடுக்காதது நம் தவறே.
எத்தனை விதமான படிப்புகள்..வாய்ப்புகள்...கொட்டிக் கிடக்கிறது.
மற்ற படிப்பெல்லாம் படிப்பில்லையா?
மற்ற தொழில் செய்வோரெல்லாம் மனிதரில்லையா?
ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் வருத்தம்தான். ஆனால் அதை எளிதாகக் கடக்க பழக்கித் தராத பெற்றோரும்...
ஒன்றுக்கும் உதவாத முட்டாள்தனமான கல்வி பயிற்சிகளும்...
பிணத்தை வைத்து மலிவான அரசியல் செய்யும் இழிந்த ஒட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள்...
இவர்கள் அனைவரும் சேர்ந்த பேராசை தத்துவம் தான் இவரை தற்கொலைக்கு தூண்டியது...
எனவே இவர்களின் பேராசை தான் அவரைக் கொலை செய்துள்ளது...
தான் காரணம்.

No comments:
Post a Comment