Friday, September 3, 2021

*_தெரிந்து கொள்ளலாம்._*

 _*திருமண அழைப்பிதழில்* இப்படி ஒரு விஷயம் இருக்கா? என்று கேட்கலாம்.இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு.*திருமண அழைப்பிதழில் மணமக்கள்* பெயருக்கு முன்னால் *

🍁திருவளர்ச்செல்வன்/செல்வி* என்றால் அது அந்தக் குடும்பத்தின் *மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.*_
_*🍁 திருநிறைச்செல்வன்/செல்வி* என்றால் *இளைய மகன்/மகளின்* திருமணமாகும்._
_*🌱திருவளர்ச்செல்வன்/செல்வி* எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும். எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்._
_*🌳திருநிறைச்செல்வன்/செல்வி* என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்._

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...