Monday, September 6, 2021

எது நாலாந்திர அரசியல் என்பதை சோதிமணி அம்மிணி பேசவேண்டும் .

 அம்மா சோதிமணி எம்.பி அவர்களே ...

ஏதோ தமிழக மக்கள் உங்களை போன்றவர்களை திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள் ...
கடந்த 50 வருடங்களாக தமிழக மக்களை ஆளும் டாஸ்மார்க் திராவிட அரசுகள்
இலவசங்களுக்கு மக்களை பழக்கப்படுத்தி
அதையே தேர்தல் வழக்கங்களாக்கி
தேர்தல் என்றாலே இலவசங்கள் , ஓட்டிற்கு பணம் என்று தமிழக மக்களை மாக்களாக்கி விட்டனர் .
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல்
திராவிடம் என்றாலே இலவசங்கள்
ஓட்டிற்கு பணம்
பொட்டல பிரியாணி
குவாட்டர்
என்ற ரீதியில் தமிழகத்தின் தேர்தல்கள் தீர்மானிக்கப்பட்டு
அரசமைக்கப்படுகின்றது .
இப்படி கட்டமைக்கப்பட்டு வீசிய திராவிட
சூறாவளி காற்றில் தற்குறிகளும்,
ஊழல் பேர்வழிகளும் அதிஷ்டவசமாக
மக்களவையை அலங்கரிக்கும் அசிங்கங்களாகி விட்ட காலத்தின் கோலங்களை
கண்டு
நல்ல புத்தியுள்ள ,
தெளிவான சமுதாய சிந்தனை கொண்ட
தேசப்பற்று மிக்க ,
டாஷ்மார்க்கின் அடிமைகளாகாத தமிழர்கள்
தலையில் அடித்து கொண்டு
நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்கும் தலைவிதிக்கு ஆளாகி விட்டார்கள் .
நல்லதொரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து
ஒழுக்கமாக வளர்ந்து தேர்வெழுதி
ஐபிஎஸ் அதிகாரியாகி
நேர்மையாக பதவி வகித்த அண்ணாமலை
தேசத்திற்கே சேவையாற்ற துணிந்து
தேசத்தை நேசிக்கும் பாஜகவில் இணைந்து
தேசத்தை வலிமைப்படுத்தி
ஆண்டு வரும் பிரதமர் மோதியின் வழியில்
களமாடுவது
தேசவிரோத ஊழல் கட்சிகளுக்கு வயிற்றில் அமிலத்தை பாய்ச்சுகிறது .
பள்ளி கற்றுத் தந்த தெளிவோடு
இயல்பாகவே அமைந்த அறிவோடு
புள்ளி விவரங்களோடு
பேசி அரசியல் செய்யும்
அண்ணாமலை
நான்காம் தர அரசியல்வாதி என்றால் ?????
தாத்தா பாட்டி வழியில்
அம்மா அப்பா தயவில்
வாரிசு அரசியல்வாதியாக உண்டு கொழுத்து
தேசத்திற்கு எதிராகவே
கண்டதையும் உளறித் திரியும்
காங்கிரஸ் இளவல் எந்தவகை
அரசியல்வாதி ??!
நாட்டின் நிதி அமைச்சராக
உள்துறை அமைச்சராக
பணியாற்றி
தேசத்தை எதிரிகளுக்கு சாதகமாக்கி
ஊழல்களில் உண்டு கொழித்த
கணக்கிலடங்கா சொத்து சேர்த்த ப.சிதம்பரம்
போன்றவர்களின் அரசியல் எந்தவகை நாலாந்திர அரசியல் என்று சோதிமணி தான் சொல்ல வேண்டும்.
சோதிமணிக்கு இது தெரியவில்லை என்றால்
உங்கள் ஆட்சியில்
முன்னாள் மனிதவளத்துறை
ஆலோசகராக இருந்த இந்திராணி முகர்ஜியை கேட்டு தெரிந்து கொண்டு வாயைத் திறக்க வேண்டும் .
அதே மாதிரி
திராவிட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றையும்
தெரிந்து கொண்டு
வாயை திறந்து
எது நாலாந்திர அரசியல் என்பதை சோதிமணி அம்மிணி
பேசவேண்டும் .
நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை ..
அவள் படிதாண்டா பத்தினியுமில்லை ...
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு ...
என்று சொன்னவர்களும்
வளர்ப்பு மகளையே மணந்து கொண்டு
பெண் உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர்களும்
என்ன வகையான
எந்த வகையான அரசியல்வாதிகளென்று சோதிமணி அம்மா செப்ப வேண்டும் .
திட்டமிட்டே
பாஜகவை இழிவுபடுத்த வேண்டும் என்றெண்ணி களமாடிய புல்லுருவிகளின்
ஆடியோ வீடியோக்கள் எல்லாம்
திராவிடக் கலாச்சார காங்கிரஸ் செட்டப்புகள் என்பதை
மனசாட்சியுள்ள மக்கள் நன்கறிவார்கள் சோதிமணி ..
இலவசக்காற்றில் உயரப்பறந்து பதவி வகிக்கும்
அம்மணிகள் முதலில்
தங்கள் கட்சியில் நாலாந்திர கருமாந்திரங்களே நடக்காத மாதிரி பில்டப் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் .
ஒரு கட்சியை இழிவுபடுத்த
அதில் பிரபலமாக இருக்கும் ஒருவரை குறிவைத்து திட்டமிட்டே காம இச்சையை தூண்டி விட்டு
ஸ்டிங் ஆப்ரேஷன் என்று சொல்லி
வீடியோ எடுத்து வெளியிட்ட
சில கழிசடைகளின் அந்தரங்கங்களை யாரும் படமெடுக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில்
பல நாலாந்திர அரசியல் கழிசடைகள் எல்லாம் பாஜகவை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது சோதிமணி ...
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு ..
சூழ்ச்சி செய்து அரியணை ஏறியவனுக்கு
அந்த அரியணை என்றுமே அந்தரத்தில் ஊசலாடும்
சிம்மாசனம் என்பதை
சோதிமணி முதலில்
தெரிந்து கொண்டு வாயைத் திறப்பது உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு மிக நல்லது .
ஆதாரங்களை கொடுங்கள்
அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை. எடுக்கிறோம்
என்று சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை
நாலாந்திர அரசியல்வாதி என்றால் ???
உங்கள் கட்சியிலும்
கூட்டணி கட்சியிலும் பாலியல் வழக்கில் ஆதாரங்களோடு மாட்டி கொண்டு
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று சட்டை காலரை கெத்தாக மடித்து விட்டு
சுற்றிவரும் அரசியல்வாதிகளின் அரசியல் மட்டும்
எந்த வகையான யோக்யமான அரசியல் என்பதை சோதிமணி சொல்ல வேண்டும் .
சொல்வீர்களா சோதிமணி ??????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...