Sunday, October 31, 2021

அப்பா_மகள் ❤️❤️❤️....

 அம்மா எவ்ளோ திட்டினாலும்

இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்......
அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா
அவ்ளோ தான்....
மனசுல பாரம் நிரம்பி போகும்....
கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்...
இது தான் அப்பாக்களுக்கே உரிய சிறப்பு ....
உனக்கு இது செஞ்சேன்.....
அது செஞ்சேன்.....
உன்ன இப்படி வளர்த்தேன்...
அப்படி வளர்த்தேன்......
என்று அம்மா அடிக்கடி கூறும் போது
கலங்காத நம்ம மனசு......
அப்பா ஒரே ஒரு தடவ
கண்கள் சுருக்கி நம்மள பாத்துட்டார்னா......
அதுல தான் எவ்ளோ அர்த்தம்.......
கரைஞ்சு போகுது இந்த மனசு.......
அவ்ளோ ருசியா சமைச்சு போடுவா அம்மா......
நம்மள ரசிச்சு ரசிச்சு கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவா அம்மா.........
ஒரே ஒரு முறை தலையை வருடி செல்லும் அப்பாவின் கைக்கும் மட்டும் ஒரு மகிமை....
அந்த ஒரு வருடலில் காணாமல் போகும் வலி........
எதுவும் சொல்லவே மாட்டார்.......
சில நேரம் கத்தவும் செய்வார்.......
புகழ்ந்து பேச காசு கேப்பாரு.......
நாம இல்லாத போது
என் மகளுக்கு ஈடு இணை ஏது.. ......?
என் மகனுக்கு ஈடு இணை எது.........?
என்று பெருமை பேசும் அப்பாவின் முன்னே
பறந்தே போகுது இந்த செல்ல கோபங்கள்.........
நமக்கு அழகழகாய் ஆடை அணிய செய்து
அழகு பார்க்கும் அப்பாக்கள்......
தனக்கென விலை உயர்ந்த ஆடைகளை எடுப்பதே இல்லை.......
அதே சமயம் நாம் ஆசையாக வாங்கி கொடுத்தால்
அவரின் முகத்தில் வந்து விடும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.......
பிள்ளைகளின் பரிசை பொக்கிஷமாக
பாதுகாக்கும் அப்பாக்கள்......
பூமியில் பிறந்த அனைவருக்கும்
இதயத்தை படைத்த இறைவன்.......
அப்பாக்களுக்கு மட்டும் கனவுகள் படைத்தான்......
அதில் தன் பிள்ளைகளின்
எதிர்காலத்தை மட்டுமே
அழுத்தமாய் பதித்தான்.......
அப்பாவின் விழியோரம் நீர்த்துளிகள்.....
பிள்ளைகளுக்காவே.......
ஆனந்த கண்ணீராக........
காலங்கள் ஓடி விடும்.......
வருடங்கள் ஓடி விடும்.......
பிஞ்சு விரல் பிடித்து........
தோள் மீது நம்மை சுமந்து........
தன் காயங்கள் மறைத்து.........
நம் முன்னே என்றும் சிரித்து.......
நம் வளர்ச்சியை பார்த்து பார்த்து
நிறைவு கொள்ளும் அப்பாக்களின்
அன்பு மட்டும் என்றென்றும் மாறுவதில்லை... ❤️❤️❤️

திருதராஷ்டிரர் ஏன் தனது பிள்ளைகளை இழந்தார் – கண்ணன் தந்த விளக்கம்.

 குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந்தனர். பகவான் கிருஷ்ணரின் உதவியால் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அவரது வழி காட்டு தலுடனும் கருத்தொருமித்த சகோதரர்களின் ஒற்றுமையாலும் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார் தருமபுத்திரர்.

இதையடுத்து பகவான் கிருஷ்ணரின் தலைமையில், சகோதரர்கள் புடைசூழ, தனது பெரிய தகப்பனாரான திருதராஷ்டிரரிடம் ஆசி பெற வந்தார் தருமர்.
துர்க்குணம் கொண்ட துரியோதனன் முதலான கௌரவர்களுக்குத் தந்தையாக இருந்தாலும் திருதராஷ்டிரர் இயல்பிலேயே கொஞ்சம் நற்குணம் மிக்கவர். தன் சகோதரனான பாண்டுவின் மைந்தர்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர். பாண்டவர்களுக்காகத் தன் மகன்களிடம் அவர் பல முறை பரிந்து பேசியும் பலன் இல்லை விளைவு… யுத்தம்! அதில், மகன்கள் அனைவரையும் பறி கொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தார் திருதராஷ்டிரர்.
இந்த நிலையில் தான் அவரைச் சந்திக்க வந்தனர் பாண்டவர்கள். தம்மை வணங்கி நிற்கும் கிருஷ்ணரையும் பாண்டவர்களையும் கண்ட திருதராஷ்டிரர் துக்கம் தாளாமல் கதறி அழுதார்.
பகவான் கிருஷ்ணரும் தருமரும் நீதிநெறிகளை எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றினர். சற்று ஆறுதல் பெற்ற திருதராஷ்டிரர், ‘கிருஷ்ணா! நீயே பரம புருஷன் இந்த உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நீயே காரணமானவன். உனையன்றி ஓர் அணுவும் அசைவதில்லை. துரோணர், பீஷ்மர் முதலான பெரியோர்களது ஆலோசனைப்படி நல்லாட்சி செய்ததால், என் தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சிறந்த அரசன் என்று பெயர் பெற்ற எனக்கு, இவ்வளவு பெரிய துன்பம் எதனால் ஏற்பட்டது?’ என்று துக்கத்துடன் கேட்டார்.
உடனே, ‘சக்ரவர்த்தியே, வேறு விஷயங்களைப் பேசி, துக்கத்தைக் கொஞ்சம் மறக்க லாமே!’ என்ற கிருஷ்ண பரமாத்மா தன் பேச்சைத் தொடர்ந்தார்:
‘பாண்டுவின் மைந்தரான தரும புத்திரர் அரச பொறுப்பு ஏற்றுள்ள இந்த தருணத்தில், அரச நீதி குறித்து எங்களுக்கு ஒரு சந்தேகம் அதை, தாங்கள் தான் களைய வேண்டும்!’ என்றார் கிருஷ்ணர்.
‘அப்படி என்ன சந்தேகம் பரந்தாமா?’- என்று திருதராஷ்டிரர் கேட்டார்.
‘ஒரு கதை சொல்கிறேன் அதிலேயே எங்களது சந்தேகமும் அடங்கி இருக்கிறது’ என்ற கிருஷ்ணர், கதையை விவரித்தார்.
‘அந்த அரசன், மிக நல்லவன் நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான். சைவ நெறிப்படி வாழ்ந்தவன். ஆனால், அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்! அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன். அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா, அசைவமா என்று கண்டறிய முடியாது. இந்த ஆசாமிக்கு ஒரு விபரீதமான- கொடூரமான ஆசை வந்து விட்டது. அதாவது, அசைவ உணவை சைவம் போல் தயாரித்துக் கொடுத்து அரசனைச் சாப்பிட வைக்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை.
அரசன், தனது அரண்மனையில் சாதுவான மிருகங்களையும் பல அதிசயப் பறவைகளையும் வளர்த்து வந்தான். அவற்றில் ஓர் அன்னப் பறவையும் உண்டு. அது, தினமும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து வந்தது. ஒரு நாள், இந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றைப் பிடித்து வந்த சமையற்காரன், அசைவ உணவு என்று அறிய முடியாதபடி பக்குவமாகச் சமைத்து மன்னனுக்குப் பரிமாறினான்.
அது, அசைவ உணவு என்பதை அறியாத மன்னனும் ‘அடடா… பிரமாதம்!’ என்றபடி ரசித்து, ருசித்து, இன்னும் கேட்டுச் சாப்பிட்டான். இதைக் கண்ட சமையற்காரன் மகிழ்ந்தான். அரசரையே ஏமாற்ற வைக்கும் தன் திறமையை எண்ணி வியந்தான். இதே போல் தினமும் அந்த அன்னப் பறவையின் ஒவ்வொரு குஞ்சுகளாக நூறு குஞ்சுகளை (நூறு நாட்கள் என) அசைவ உணவாகத் தயாரித்து மன்னனுக்குப் பரிமாறினான். சமையலில் அவனது கைப்பக்குவத்தைப் பாராட்டிய மன்னன், ஏராளமான பரிசு வழங்கி கௌரவித்தான்!’
- கதையை இவ்வாறு கூறி முடித்த கிருஷ்ணர், ‘சக்ரவர்த்தியே, எங்களது சந்தேகம் இதுதான்! மன்னனை ஏமாற்றி, புலால் உணவு சாப்பிடச் செய்த சமையற்காரன் குற்றவாளியா? அல்லது அசைவம் என்று அறியாமல் புலால் உணவு சாப்பிட்ட மன்னன் குற்றவாளியா? இருவரில் தண்டனைக்குரியவர் யார்?’ என்று கேட்டார்.
திருதராஷ்டிரர் பதில் கூறினார்: ‘கண்ணா, சர்வ வியாபியான உனக்குத் தெரியாத நீதியா? குருக்ஷேத் திரத்தில் அர்ஜுனனுக்கு பரிபூரணமான நீதிநெறிகளை (கீதையை) உபதேசித்த நீ, என்னிடம் விளக்கம் கேட்கிறாயே… சரி, எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்!
சமையற்காரன் செய்தது பெரிய குற்றமல்ல. வேலைக்காரர்கள், நேர்மையாகவோ அல்லது ஏமாற்றியோ தங்கள் எஜமானனை திருப்தியடையச் செய்து, பரிசுகள் பெறுவது உலக இயல்பு. ஆகவே, அவன் செய்தது சிறிய குற்றமே. ஆனால், மன்னனின் நிலை அப்படியல்ல அவன், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மிக நுட்பமாக கிரகிக்க வேண்டும். தன் பணியாளர்களது செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், எதிரிகளது சூழ்ச்சியால் நாட்டையும்… ஏன், தன் உயிரையே கூட இழக்க நேரிடும்.
கிருஷ்ணா! கதையில் நீ குறிப்பிட்ட மன்னன் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. ஆக, அவன் கடமை தவறியது முதல் குற்றம். சமையற்காரன் ஒருவனிடம் ஏமாந்தது இரண்டாவது குற்றம். புலால் உண்டது மூன்றாவது குற்றம். இவற்றை அவன் அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி மேலும், பறவையின் கொலையில் மன்னனுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதால், அவனே அதிக குற்றங்களைச் செய்தவன் ஆகிறான். எனவே, மன்னனுக்கே தண்டனை வழங்க வேண்டும்’ என்றார் திருதராஷ்டிரர்.
இதைக் கேட்டுப் புன்னகைத்த கிருஷ்ணர், ‘சக்ரவர்த்தி! தங்களிடம் நான் சொன்னது கதையல்ல; உண்மைச் சம்பவம் இந்தக் கதையின் நாயகன் தாங்களே. முற்பிறவியில் செய்த தான- தர்மத்தின் பலனால், இந்தப் பிறவியில் நல்ல மனைவி, நல்ல மந்திரிகள், வளமான நாடு, நிறைய சந்ததிகள் என்று சகலமும் வாய்க்கப் பெற்றீர்கள் இதேபோல், பாவத்தின் விளைவால் இப்போது, புத்திர சோகத்தில் தவிக்கிறீர்கள்.
சமையற்காரன் செய்த உயிர்க் கொலை, தாங்கள் அறியாமல் நடந்தது என்றாலும், அவன் சமைத்த புலால் உணவைச் சாப்பிட்டதால், கொலை செய்த பாவம் தங்களை யும் ஒட்டிக் கொண்டது ‘மன்னனே குற்றவாளி; அவனுக்கே தண்டனை’ என்ற நியாயத்தை தாங்களே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
பாவம்… நெருப்பைப் போன்றது! நாம் அறியாமல் தொட்டாலும் நெருப்பு நம்மைச் சுட்டு விடும். அதே போல் அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நீங்களும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகவே, இப்போது புத்திரர்களை இழந்து தண்டனையை அனுபவிக்கிறீர்கள்’ என்று முடித்தார் பகவான் கிருஷ்ணர்.
திருதராஷ்டிரர், தருமர் மற்றும் உடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போயினர்.
இதனால் தான் திருதராஷ்ட்ரன் தனது நூறு பிள்ளைகளை இழந்தான். (எப்படி அந்த அன்னப் பறவை தனது குஞ்சுகளை இழந்ததோ அதே போல)
May be an image of 1 person and text that says 'காலத்தை விட ந்த நண்பனும் கிடையாது, மோசமான எதிரியும் கிடையாது. அவற்றை நண்பனாக்குவதும், எதிரியாக்குவதும் நீங்கள் மட்டுமே..! சிந்தித்து செயலாற்றுங்கள்...'

``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்.

 'சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமா, இணைக்கக்கூடாதா' என பட்டிமன்றத் தலைப்பிட்டு சூடு பறக்க விவாதம் நடத்திவருகிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள். கட்சியின் அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்கக்கூடிய இரட்டைத் தலைமைகளும்கூட இந்த விஷயத்தில் இரண்டுபட்டு நிற்பதுதான் கூடுதல் சிக்கலுக்கு வழி வகுத்துள்ளது.

இந்த நிலையில், 'சசிகலாவை எக்காரணம் கொண்டும் அதிமுக-வில் சேர்க்க முடியாது' என்று கட்சியின் நிலைப்பாட்டை முன்வைத்துப் பேசிவருகிற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
''கடந்தகாலத்தில், அதிமுக ஜெ., ஜா என இரு அணிகளாகப் பிரிந்து நின்றபோது, எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்காக பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து விலகினார் ஜானகி அம்மாள். அதுபோன்று சசிகலாவும் பெருந்தன்மையுடன் தூர இருந்து கட்சியைப் பார்த்து ஆனந்தம் அடைந்து கொள்வதுதான் சிறந்த பண்பு. அதைவிட்டு விட்டு 'அரசியலிலிருந்து விலகிவிட்டேன்' என்று அறிவித்துவிட்டு மறுபடியும் அரசியலுக்குள் வருகிறேன் என்று சொல்வது சரியல்ல. ஏற்கனவே ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் 'கட்சியில் என் தலையீடோ என் குடும்பத்தினரது தலையீடோ இருக்காது' என்று எழுதிக்கொடுத்தவர்தான் சசிகலா.
ஆனால், இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பதுபோல், 'பதவி, பந்தா' சுகம் மீண்டும் கிடைக்கவேண்டும் என பல பகீரத முயற்சிகளை எல்லாம் சசிகலா எடுத்துவருகிறார். ஆனால், எந்த நிலையிலும் அவரின் முயற்சிகள் எடுபடப்போவது கிடையாது.''
''சசிகலா தயவால், முதல்வர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிதான், 'சசிகலாவை மீண்டும் அதிமுக-வுக்குள் இணைத்தால் தனது தனிப்பட்ட அந்தஸ்தை இழக்க நேரிடும்' என்று பயப்படுவதாகச் சொல்கிறார்கள்...
''இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், 2017-ம் ஆண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், சசிகலாதான் 'கிங் மேக்கர்' என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அன்றைய சூழலில், சசிகலா இல்லையென்றாலும் கூட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியிலான ஆட்சியை நாங்களே ஏற்படுத்திக்கொண்டிருப்போம்தான்.
எனவே, யானை மீது வந்தமர்ந்துவிட்ட கொசு, 'நான்தான் பலசாலி' என்று எண்ணிக்கொண்டால் அது அந்தக் கொசுவின் அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.
மக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் சசிகலாவும் அவரின் குடும்பத்தினரும். இப்படிப்பட்ட ஒரு நபரை நாங்கள் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?''
''நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ச்சியாக அ.தி.மு.க தோல்வியை சந்தித்துவரும் வேளையில், 'அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என சசிகலா சொல்லிவருவது நியாயமானதுதானே?'' என சிலர் கருதுகின்றனர்
''அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்? அமமுக-விலுள்ள குரூப்களை வேண்டுமானால், இவர் போய் ஒன்று சேர்க்கட்டும் அல்லது அந்தக் கட்சிக்கேகூட பொதுச்செயலாளர் ஆகிக்கொள்ளட்டும்.
மற்றபடி அதிமுக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஊராட்சித் தேர்தல் எல்லாம் ஒரு தேர்தலா? ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் செய்துவருகிற தி.மு.க-வினர் இப்போது ஆட்சிப் பொறுப்பில் வேறு இருக்கிறார்கள். சாம, பேத,தான, தண்டம் என அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி அராஜகமான முறையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, இதையெல்லாம் நாங்கள் ஒரு வெற்றியாகவே கருதவில்லை.
சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெற்ற தி.மு.க-வுக்கும் தோல்வியடைந்த அ.தி.மு.க-வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது 3% மட்டுமே. அதாவது, அ.தி.மு.க-வுக்கு விழுந்த வாக்குகள் 1 கோடியே 40 லட்சம். அதுவே தி.மு.க-வுக்கு ஆதரவான வாக்குகள் என்பது 1 கோடியே 54 லட்சம். வெறும் 14 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம். அதனால்தான் தி.மு.க-வினரேகூட இதை 'மகத்தான வெற்றி' என்று குறிப்பிடுவதில்லை. ஆக தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதல்வராகியிருப்பதால்தான், மு.க.ஸ்டாலினும்கூட மகிழ்ச்சியாக இல்லை. ஆக, அ.தி.மு.க-வுக்கு 1 கோடியே 40 லட்சம் பேர் நம்பி வாக்களித்திருக்கிறார்கள் என்றால், கட்சி பலமாகத்தானே இருக்கிறது.''
''சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் இல்லை என்பதற்கான ஆதாரத்தை அ.தி.மு.க-வினர் யாரும் தன்னிடம் காட்டவில்லை என எம்.ஜி.ஆர் நினைவு இல்ல நிர்வாகியும் எம்.ஜி.ஆரின் பேரனுமாகிய குமார் ராஜேந்திரன் சொல்கிறார் என சிலர் கூறுகின்றனர்
''இதுபோன்று அவர் சொல்லியிருந்தால், உண்மையிலேயே அவர் நீதிமன்ற அவமதிப்புக்குத்தான் உள்ளாவார். ஏனெனில், அ.தி.மு.க என்பது நாங்கள்தான் என்பதை கட்சியின் பொதுக்குழுவில் ஆரம்பித்து டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா அமைப்புகளுமே அங்கீகாரம் செய்துள்ளது.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கிறேன். ஆனால்...
எடப்பாடி பழனிசாமி
சசிகலா அன்றைக்கு அ.தி.மு.க கொடியை ஏற்றியபோது, 'எந்த உரிமையில் நீங்கள் அ.தி.மு.க கொடி ஏற்றலாம்...' என்று கூறி நாங்கள் வாக்குவாதம் செய்திருக்க முடியும். ஆனால், இதன் தொடர்ச்சியாக அங்கே ஒரு சண்டை எழத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவேதான் நாங்கள் அவ்வாறு செயல்படவில்லை. எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எனவேதான், சசிகலா எந்தெந்த பிரிவிகளின் கீழ் எல்லாம் தவறிழைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி முதற்கட்டமாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம்!''
''சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்ப்பது இல்லை என்ற முடிவுக்கு முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவிப்பர். எனவேதான் முத்துராமலிங்கனார் குருபூஜைக்கு முன்பாக சசிகலா ஆதரவு என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஓ.பி.எஸ் என அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சொல்கிறார்...
''ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கனார். அதனால்தான் எந்தக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் செய்யாத அளவுக்கு 13 கிலோ தங்கத்திலான கவசத்தை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது செய்துகொடுத்து சிறப்பு செய்தோம். எனவே, முத்துராமலிங்கனார் மீது எங்களுக்கு அதிக பற்றும் பாசமும் உள்ளது. தொன்றுதொட்டு நாங்கள் குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்டும் வருகிறோம் எனவே, இதை முன்வைத்து வீண் விமர்சனங்கள் செய்வது தேவையற்றது.''
ஓ.பன்னீர்செல்வம்
''முதல்வர், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க-வில் நிராகரிக்கப்பட்டே வருகிறது என்பதால்தான் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார் என சிலர் கருத்து சொல்கிறார்கள்...
''அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது மிகவும் பிரதான பதவி!
கட்சியிலுள்ள நானே அந்த ஒருங்கிணைப்பாளர் குறித்து விமர்சனம் செய்வதென்பது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. எனவே, இந்தக் கேள்விக்கெல்லாம் என்னால் விலாவாரியாக பதில் சொல்ல முடியாது. எனவே, இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.'
இவ்வாறு ஜெயக்குமார் அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்பாவுக்கு தப்பாத மகன் Dr .விஜய் ஜெய்சங்கர் !

 #ஜெய்சங்கர்

அப்பாவுக்கு தப்பாத மகன் Dr .விஜய் ஜெய்சங்கர் !
மக்கள் கலைஞருடன் 30 + வருடங்கள் பழக்கமிருந்தாலும் கூட ,Dr விஜய் அறிமுகமான சம்பவம் எனக்கு மறக்க முடியாதது.
2000 ம் வருடம் மே மாதம் குவைத்தின் சிவரஞ்சனி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டி நடிகர் ஜெய்சங்கரை ஏற்பாடு செய்துக் கொடுத்திருந்தேன்.
என்ன மாதிரி மனிதர் அவர்!
கடல் கடந்தும் சேவை செய்து வரும் தமிழர்களின் லிஸ்ட் கொடுங்கள் .அங்கு வரும் போது அவர்களை நான் கவுரவப்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டு வாங்கி பரிசு பொருட்களும் வாங்கி வந்திருந்தார்.
ஆனால் என்ன கொடுமை பாருங்கள்..
விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அவர் மயங்கி விழ, உடனே மருத்துவமனை ! நேராக ஐ.சி.யூ ! அவருக்கு நினைவு பிசகி.. கோமா !
நிகழ்ச்சி ரத்து என்பது ஒரு புறமிருக்க அவரது உடல் நிலையை சரிபண்ணி எப்படி பத்திரமாய் ஊருக்குத் திருப்பி அனுப்புவது என்கிற கவலையும் சேர்ந்துக்கொண்டது.
நண்பர்கள் BN ராஜன் முதல் பலரும் அவரை கூட இருந்து கவனித்துக்கொண்டனர்.
ஒரு வார தீவிர சிகிச்சைக்கு பிறகும் கூட அவருக்கு நினைவு திரும்பாமல் போகவே Dr. விஜய்க்கு விசா அனுப்பி அவரை வரவழைத்தோம்.
விஜய், மன கஷ்டம் தாங்காமல் "எங்க அப்பாவை மேற்கொண்டு இங்கே வைத்திருக்க வேண்டாம். அனுமதி தாருங்கள். தனி விமானம் ஏற்பாடு செய்தாவது அழைத்துப் போகிறேன்!" என்று டாக்டர்களிடம் மன்றாடினார்.
அந்த சமயத்தில் ஒரு ஆச்சரியம்!
ஜெய்சங்கருக்கு திடீரென உணர்வு திரும்பிற்று. மெல்ல கண் திறந்து அவர் பேச ஆரம்பித்ததுமே, நிகழ்ச்சி எப்போது என்று அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார். பிறகு கொஞ்சம் உடல் தேறி, அழைத்துச் செல்ல டாக்டர்கள் அனுமதியளித்தனர்.
ஆனால், ஜெய், " நிகழ்ச்சி வையுங்கள். எனக்காக இங்கே உதவினவர்களுக்கும் உழைத்தவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்!" என்று பிடிவாதம் பிடித்தார்.
சரி, அவரது திருப்தி... சந்தோஷத்திற்காக நிகழ்ச்சி வைத்துவிடலாம் என்று ஏற்பாடு செய்ய , அதிர்ச்சியாக மறுபடியும் அவருக்கு நினைவு போயிற்று. அந்த 15 நாட்களும் விஜய் அனுபவித்த வேதனைகள் கொஞ்சமில்லை.
பிறகு அனைவரது பிரார்த்தனையின் பலனாய் ஜெய்க்கு நினைவு திரும்பவே மறுநாளே அவரை பத்திரமாய் ஊருக்கு அனுப்பிவிட முயற்சித்தோம்‌.
ஊரில் முழு ஓய்வு வேண்டும்--- வெளிநாடு போகக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தும் கூட ஒப்புக்கொண்ட தேதியில் போயாக வேண்டும் என்று வீட்டில் சண்டை பிடித்து, கிளம்பி வந்திருக்கிறார் ஜெய்.
இதில் விஷேஷம் பாருங்கள் ...அத்தனை மோசமான உடல்நிலையிலும் கூட குவைத்தில் அனாதை ஆசிரமத்திற்கு நிதி திரட்டிட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அவருக்கு அப்படி ஒரு விசால-பரந்த சிந்தனை!
ஆனால் ...
அவரை சென்னைக்கு அனுப்பி வைத்த அடுத்த ஒரு மாதத்திலேயே( ஜூன் 3-2000 ல் ) ஒரு நல்ல - தூய்மையான - நட்புக்கு இலக்கணமான மனிதரை நாம் இழக்க வேண்டி வந்தது.
அந்த இழப்பில் துவண்டு விடாமல் , விஜய் ,மருத்துவ மனைவியுடன் இணைந்து வேகமாய் வளர்ந்திருக்கிறார். ஜெய்யின் பெயரிலேயே கிளினிக்குகள்!. அங்கு ஜெய் மட்டுமல்லாது பிரபலங்களுடனா அவரது Blow upகள்! விஜய்,வருபவர்களிடம்,இனிமையாய் பேசி, அவர்களுக்கு தெம்பளித்து பம்பரமாய் சுழன்று வருகிறார்.
விஜய்யிடம் எப்போதும் உற்சாகம். ஜெய் பேரில் உள்ள மதிப்பில் பிரபலங்கள் பலரும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
"நான் கண் டாக்டராகி ஆயிரம் பேருக்கு ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசையாக இருந்தது. அவரது விருப்பப்படியே நானும் இதுவரை 90K + நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறேன்."
பூரிப்போடு சொல்கிறார்--அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிரபல கண் மருத்துவருமான விஜய் சங்கர்.
ஜெய் போலவே அதே பண்பும் ..நட்பும்..கனிவும்...மனிதாபிமானமும் மிக்கவர். இலவச கண் சிகிச்சை முகாம்களும் உற்சாகம் குறையாமல் நடத்திக்கொண்டிருப்பவர்.
அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றியதால் அவரது ஆன்மா எங்களை என்றும் ஆசீர்வதித்து கொண்டுள்ளது. அதனாலேயே எங்களால் வெற்றிகரமாய் செயல்பட முடிகிறது என்று உருகுகிறார் விஜய்.
உண்மை!
--------------------------------------------------

உண்மை தான் இவன் ஒரு பச்சோந்தி.

 71 வயது மனிதன் ...

ஒரு காலத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் போட்டச்சு,
குடும்பத்திற்கு பணத்தை வாரி குவித்தாகி விட்டது,
100ரூ டிக்கட்டை 1500க்கு விற்று சிஸ்டம்
சரிபண்ணியாச்சு..
தமிழர்கள் கொடுத்த புகழ்
வெளிச்சத்தில்,
அரசியல் வாதிகள் தொடர்புகள் மூலம் விருதுகளும் வாங்கியாச்சு..
திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வே...
அரசியல் நாடகம் நிறைவுற்றது...
அதற்காக பரிசு தான் சன் பிக்சர்ஸ் #அண்ணாத்த
இன்னும் மனிதனுக்கு பணத்தின் மீதான ஆசை அடங்கவில்லை.
தன்னை நம்பி வயதை தொலைத்த ரசிகர்கள் என்கிற பெரும் கூட்டத்திற்கு எந்த வித பிரோயசனமும் இல்லா
சுய நல மனிதன்..
நேற்று கூட பாகுபாலி படத்தில்
நாசர் ..என் மகன் ,என் மகன்.என்று கூறுவது போல
என் பேரன் என் பேரன் என்பேரன்
படம் பார்க்க ஆசைப்பட்டார்
என்று சுய தம்பட்டமாய்
அண்ணாத்தே விளம்பரம்.
இன்று சாதாரண உடல் பரி சோதனையை பயங்கர பில்டப் கொடுத்து மீடியாவை அலற விட்டு
அண்ணத்தே விளம்பரம் ...!
அரசியல் பஞ்ச் பேச முடியாத காரணத்தால் இந்த மாற்று ஏற்பாடு..
இதெல்லாம் பேராசையின்
வெளிப்பாடு..
தமிழர்கள் கொடுத்த புகழின்
வெளிச்சம் கொண்டு .
தமிழர்களின் உரிமை ,மண் சார்ந்த ,மொழி சார்ந்த
வாழ்வியல் சார்ந்த எந்த பிரச்சனைக்கும்
இந்த சுய நல விரும்பி
குரல் கொடுத்ததும் இல்லை
பயன் பட்டதும் இல்லை.
ஆனால் சிவாஜி ராவ் கொய்வாட்க்கு தமிழ் எழுத தெரியாது என்பதை
பெருமையாக கூறுகிறார்
இவரின் புதல்வி.
ஆனால் தனது பயோடட்டாவில்
மராட்டியர் என்று தெளிவாக
குறிப்பிடுகிறார் செளந்தர்யா ரஜினி காந்த்.
அப்பாவி தமிழர்களின் பணத்தை சினிமா மூலம் பறித்து எடுக்க எத்தனை
நாடகம் போடுகிறார் இந்த சீனியர் சிட்டிசன் நடிகர் ..
இவர் படப் பாடலில் தான் வாழ்க்கையை
எட்டு எட்டாக பிரிக்க சொன்ன
ஞானி..
ஆனால் தமிழன் பாக்கட்டைத் தட்டிப்பறிப்பதில் விஞ்ஞானி..
பல தடவை அரசியலுக்கு வருவதாக நாடகமாடிய மனிதன் ..
இன்று வரை தமிழர்களை
ஏமாற்றுகிறார்...
தன் கட்டவுட்டுக்கு பாலூற்றுவதை ரசிக்கும் கபட வேடதாரிகளின் முன்னோடி..
May be an image of 1 person and beard

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...