Thursday, October 28, 2021

🌸சாப்பிடுவதற்குக்கூட சாஸ்திரமா? – சாப்பிடும் முறை பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது?

 

🧔ஒற்றைத் துணி அணிந்து சாப்பிடக்கூடாது. பெண்கள் பெரும்பாலும் உடையணிந்தே இருப்பார்கள், என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் ஆண்கள் பல நேரங்களில் வீட்டில் இருக்கும்போது மேலாடை அணிவதில்லை. சாப்பிடும் நேரங்களில் ஒரு துண்டால் உடலை மறைத்துக் கொண்டாவது உணவருந்த வேண்டும்.
🍜சாப்பிடும் முன்பாக கை கழுவினால் மட்டும் போதாது. கால்களையும் கழுவ வேண்டும். இதனால் சாப்பிடும் நேரத்தில் சாப்பாட்டில் ஏதும் குறை என்றாலும் கூட, ‘சுர்’ரென கோபம் ஏறாது. மேலும் கால் கழுவி விட்டுச் சாப்பிடுபவர் தீர்க்காயுளுடன் இருப்பார்.
🖐️கையைத் தரையில் ஊன்றியபடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சாப்பிடும் பொருளில் உள்ள சத்து வீணாகாமல் உடலில் சேரும்.
🌻பாதி சாப்பாடு, கால் பங்கு தண்ணீர் என்பதே சரியான உணவு விகிதம். மீதியைக் காற்றுக்காக விட வேண்டும். வயிறு புடைக்க சாப்பிட்டால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும்.
🗣️சாப்பிட்டபின் குளிக்கக்கூடாது. ஒவ்வொரு வேளை சாப்பிடும்போது, குளித்துவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம் ஆகும்.
🌅 கிழக்கு நோக்கி அமா்ந்து சாப்பிட்டால் ஆயுள் விருத்தியும், மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வ அபிவிருத்தியும், தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் புகழும் கிடைக்கும். பொதுவாக வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் வடக்கு நோக்கி அமா்ந்து சாப்பிடுபவர், நியாயத்துக்காக போராடுபவராம்.🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...