Wednesday, October 27, 2021

போனஸ் நீங்கள் கேட்ட அளவு அப்படியே ஏற்று அரசு தந்துவிட்டதா?

 போக்குவரத்து ஊழியர்களே...

போனமுறை எடப்பாடியார் ஆட்சியில் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடினீர்களே நினைவு உள்ளதா?
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்!
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி ஓய்வுப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்!
போனஸ் வேண்டும்!
கோரிக்கை எல்லாம் சரிதான் - ஓய்வு பெற்ற பல ஊழியர்களுக்கு இன்னமும் பென்ஷன், கிராஜுவிட்டி, லீவு சரண்டர் தொகை... இப்படிப் பலதும் முழுமையாகவோ பகுதியாகவோ வழங்கப்படாமல் தேக்க நிலை நிலவியது - உண்மைதான்!
உங்களுடைய கோரிக்கையின் நியாயத்தை யாருமே மறுக்கவில்லை!
ஆனால் ஸ்ட்ரைக் என்று குறிப்பிட்ட நேரத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்து விட்டு - அந்த நேரத்துக்கு ஓரிரு மணிகள் முன்னதாகவே பஸ்களைத் தாறுமாறாக நடுவழியில் நிறுத்திவிட்டுப் போனீர்களே அதுதான் அராஜகம்!
பாவம், எத்தனையோ பயணிகள், முதியவர்கள், குழந்தை குட்டிகளுடன் பயணம் செய்தவர்கள் - நீங்கள் ஸ்ட்ரைக் அறிவித்த நேரத்தை ஒட்டித் திட்டமிட்டு பயணத்தை வகுத்துக் கொண்டவர்கள் - நீங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே பஸ்களை நிறுத்திவிட்டு இறங்கிப் போனதால் தடுமாறிப் போனார்கள்!
அவர்கள் பட்ட வேதனையும் - விட்ட சாபமும் சொல்லி மாளாது!
ஆனால் அவை அத்தனையும் எடப்பாடியார் - மோடி அரசுகளின் மீது வெறுப்பாக மாற்றி சாமர்த்தியமாகத் திருப்பிவிட்டு - அதற்கான அறுவடையையும் நன்றாகப் பார்த்து இன்று ஆட்சி அதிகார மகசூலையும் அனுபவிக்கிறார்கள் - அன்று எதிர்க்கட்சியாகி இருந்து இன்று ஆளுங்கட்சியானவர்களும் அவர்களுடைய கூட்டணிக் கட்சியினரும்!
அந்தக் கட்சிகளின் தொங்குசதைகள்தானே நீங்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங்கள் பலதும்?!
எனவே ஒரு பாமரப் பயணியாக எனக்கு அறிய ஆசை!
போனமுறை எங்களை எல்லாம் நடுவழியில் பஸ்ஸை நிறுத்தி விட்டுப் போனீர்களே? இப்போது எப்படி?
இந்த ஆட்சி வந்தவுடன் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கை எழுத்தாகி விட்டதா?
ஓய்வுக் காலப் பணப் பலன்கள் பைசா பாக்கி இல்லாமல் எல்லாருக்கும் கிடைத்து விட்டதா?
போனஸ் நீங்கள் கேட்ட அளவு அப்படியே ஏற்று அரசு தந்துவிட்டதா?
இவை எல்லாம் ஏன் கேள்விகள் ஆகின்றன என்றால் - இந்த வருடம் இதோ தீபாவளி நெருங்கிவிட்டது!
பல லட்சக்கணக்கான மக்கள் பண்டிகை விடுமுறையில் தங்கள் ஊர்களுக்குச் செல்வார்கள்!
நீங்கள் எடப்பாடியார் அரசிடம் காட்டிய அதே வீரத்தை தப்பித்தவறி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடமும் காட்டி...
பஸ்களைத் தாறுமாறாக நிறுத்திவிட்டு நீங்கள் பாட்டுக்கு இறங்கிப் போய் - பல ஆயிரக்கணக்கான பயணிகளை அவதியுறச் செய்து விடுவீர்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு!
ஆனால் எடப்பாடியார் அரசு மீது காட்டிய வீரத்தையும், வன்மத்தையும், ஆவேசத்தையும் நீங்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது காட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு!
ஏனெனில் திமுக அரசு - அதாவது திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் தனக்கெதிரான போராட்டங்களை எப்படி இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்பதற்கு - சிம்சன் போராட்டம் தொடங்கி விவசாயிகள் மீதான பெத்தநாயக்கன் பாளையம் துப்பாக்கிச் சூடு முதல் - மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டம் வரை - வரலாற்றில் நெடிய உதாரணங்கள் உண்டு!
எனவே இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு - எந்த விதமான போராட்டத்தையும், அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் - இரும்புக் கரம் கொண்டு உரிய முறையில் அடக்கி - வழிக்குக் கொண்டுவரத் தயங்காது!
எனவே போக்கு வரத்து ஊழியர்களே...
தமிழக அரசு உங்களுக்குத் தரம் போகும் ஸ்வீட் பாக்கெட்டை - அதில் 'அல்வா' வும் இருக்கும் - அதை முதல்வருக்கு நன்றி கூறி வாங்கிக் கொண்டு...
உங்கள் ஊதியக் கோரிக்கை மற்றும் பழைய பென்ஷன் கோரிக்கை ஏதாவது இருந்தால் அவற்றை தீபாவளிக்கு அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள் 🤣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...