Friday, October 22, 2021

சாதனைகளை விட சோதனைகளை சந்திந்த வளர்ந்த இயக்கம் தான் அதிமுக மற்ற கட்சிகளை போல அடுத்தவர் தோளில் அமர்ந்து பயணம் செய்வது இல்லை.

 50 ஆண்டுகள், 5 முதலமைச்சர்கள், முதல் பொதுத்தேர்தலை சந்தித்ததில் இருந்து தற்போதுவரையுள்ள 44 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் மக்களின் பேராதரவோடு ஆளுங்கட்சியாக, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சியாக இருந்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம்முதல் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்வரை தமிழகத்தில் அதிக பல்கலைக்கழகங்களை அமைத்த ஆட்சி அதிமுக ஆட்சி.
ஒட்டுமொத்த தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 65% மருத்துவ கல்லூரிகள் அதிமுக கொண்டு வந்தது.
தற்போதிருக்கும் சட்டக்கல்லூரிகளில் 90% சட்டக்கல்லூரிகள் அதிமுக கொண்டுவந்தது.
சமூக நீதிக்கு அடித்தளமாக விளங்கும் இட ஒதுக்கீட்டின் அளவை 49%லிருந்து 68%ஆக உயர்த்தியது. 69% இட ஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பு அட்டவணையில் சேர்த்து சட்டப் பாதுகாப்பு வாங்கித் தந்தது.
சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தது.
சென்னையை ஆசியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக்கியது. சென்னைக்கு வீராணம்முதல் கிருஷ்ணா நதி நீர் வரை கொண்டு வந்து சேர்த்தது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தேர்வாய்-கண்டிகை எனும் நீர்த்தேக்கத்தை சுதந்திர இந்தியாவில் அமைத்த ஒரே அரசு அதிமுக அரசு.
உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை கொடுத்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் கொடுத்தது.
ஒரு தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்த ஒரே தமிழக கட்சி.
பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை அரசாணை மூலம் நடைமுறைப்படுத்தியதோடல்லாமல் தமிழ் மொழிக்கென தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்த கட்சி. 2 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய ஒரே திராவிடக் கட்சி.
கொங்கு பகுதி மக்களின் அரை நூற்றாண்டு கனவான அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய கட்சி.
தமிழகத்தின் பரவலான தொழிற்புரட்சிக்கு காரணமான 21 சிப்காட்களில் 13 சிப்காட் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்ததுமுதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுவரை அதிமுக செய்தவைதான்.
இதுவரை 11 சட்டமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. அதில் 7 முறை திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குமேல் எதிர்க்கட்சியாக இருந்த வரலாறு அதிமுகவுக்கு இல்லை.
செய்த சாதனைகளைக்கூட பெரிதாக விளம்பரப்படுத்தாமல், எந்த காலத்திலும் மீடியாக்களின் ஆதரவு இல்லாமல், இலக்கிய சொம்புகளின் துதிபாடல்கள் இல்லாமல், வாரிசு அரசியலை முன்னிறுத்தாமல் ஒரு கட்சி அரைநூற்றாண்டை வெற்றிகரமாக கடப்பதே ஆச்சர்யமான விஷயம்தான்.
அந்த ஆச்சர்யத்தின் மறு பெயர்தான் அதிமுக.
தமிழக மக்கள் தங்களை ஆள அதிக முறை தேர்வு செய்த ஒரே கட்சி அதிமுக. அந்த வகையில் அதிமுக வெற்றிகரமான கட்சிதான்.
அரை நூற்றாண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அதிமுக என்ற பேரியக்கம் பொன்விழா ஆண்டை தொட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...