Thursday, October 28, 2021

சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõம்பிகை ஸ்தோத்திரம் .

 திருக்கருகாவூர் அம்மன் 108 போற்றி #திருக்கருகாவூர் #கர்ப்பரக்சாம்பிகை

#பற்றிய_45_தகவல்கள் இன்று 29/10/2021 வெள்ளிக்கிழமை அன்று பதிவு செய்து வணங்குகின்றோம்
1. தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு.
4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்த காணிக்கையை செலுத்துகிறார்கள்.
5. இங்கு தலவி நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.
6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். 8. காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
10. இக்கோவிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.
11. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
12. இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
13. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
14. சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
15. முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் “ என்று தலம் குறிக்கப்படுகின்றது.
16. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
17.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
18. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
19. மாதவி (முல்லைக் கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்று பெயர் பெற்றது.
20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.
21. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும்.
22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.
23. பொன்னி நதி பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
24. இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன், சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது.
25. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
26. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்.. தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் - நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.
28. பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.
29. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.
30. கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.
31. மன்னன் குசத்துவன் காட்டில் வேட்டையாடும் போது சத்திய முனிவரின் சாபத்தால் கொடும்புலி உருப்பெற்று சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு சுய உருப்பெற்றான்.
32. சங்கு கர்ணன் என்னும் அந்தணன் விந்தியா குருஷன் மகளை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் சாபப்படி பேயுருப் பெற்றான். பின் முன் வினைப்பயனால் இத்திருத்தல எல்லையை அடைந்ததும் பேயுரு நீங்கப்பெற்றான்.
33. இத்தலத்தின் சோமாஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் உற்சவ மூர்த்திகள் மிகவும் அழகு வாய்ந்தவை.
34. கோவிலின் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீசுவரர் மிகுந்த பொலிவுடன் உள்ளார். நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும் காணக் கண் கோடி வேண்டும்.
35. இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்ளையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷதரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார்.
36. காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும்.
37. இத்திருக்கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருக்கம் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியன் பார்த்தவாறு நின்றிருக்கும். நவக்கிரகங்கள் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றனர்.
38. இத்திருக்கோவிலில் சந்தன மரங்கள் தானாகவே வளர்கின்றன. மரத்தை வைத்துப் பயிர் செய்ய வேண்டிய அவசியமில்லை.
39. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற மூவரால் பாடல் பெற்ற புண்ணியத் திருத்தலம் இது.
40. 1946 ஆம் ஆண்டு காஞ்சி முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கே அனுஷ்டித்தார்கள். அப்போது ஐந்து மாத காலங்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார்கள்.
41. இத்திருக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவ காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு கூடியவை.
42. மதுரை கொண்ட கோபுர கேசரிவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோர் காலத்திய கல்வெட்டுக்கள் இத்திருக்கோவிலின் சுற்று மதிற்சுவர்களிலும், எம்பெருமானின் கர்ப்பக்கிரகச் சுவர்களிலும், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபங்களிலும் காணப்படுவதாக, இத்திருக்கோவில் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
43. தமிழக இந்து சமய அறநிலையத்தினரால் இத்திருக்கோவில் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
44. ஸ்காந்த புராண புத்ர வைபவக் காண்டத்தில் சனத்குமார சம்கிதையில் இத்திருக்கோவில் தல வரலாறு காணப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் அமைந்ததாகும்.
45. அம்பலவாணப் பண்டாரம் என்பவரால் தமிழில் பாடப்பட்ட 338 பாடல்கள் தற்சமயம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இல்லை....
#கோவில் முகவரி:
அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
தமிழ்நாடு போன்: (04374) 273423
#ஓம் நமசிவாய
🌺🌺திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை 108 போற்றி
ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் கருகாவூர் தேவியே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
ஓம் சக்தியின் வடிவமே போற்றி
ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி
அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.
ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ)
வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ)
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ)
ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ)
ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ)
ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுது
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...