Thursday, October 28, 2021

திருச்சி அப்போது... சுஜாதா.

 ஜாலியாய் ஒரு சுஜாதா பதிவு

Sunday Relexஐ enjoy பண்ண...


பட்டப் படிப்பு வரை நான் திருச்சியில் படித்தேன். ஸ்ரீரங்கத்திலிருந்து தினம் காலை ரெயில் ஏறி ஜோஸப் காலேஜுக்கு வருவேன். ரெயில்வேயில் மஞ்சளாக பாஸ் கொடுப்பார்கள். 


திருச்சிக்கு டிக்கெட் இரண்டணா என்று ஞாபகம். இரண்டணா என்பது இப்போதைய பனிரெண்டு பைசாவுக்கு சமானம். அது சுமாரான காசு, இரண்டணா வில் காப்பி சாப்பிடலாம். பெனின்ஸுலர் கபேயில் சாதா தோசை இரண்டணா. 


சினிமாவில் தரை டிக்கெட் இரண்டணா. மலைக்கோட்டையில் இரண்டணா கொடுத்து கைரேகை பார்த்துக் கொள்ளலாம். அது பற்றி அப்புறம் சொல்கிறேன். 


முதலில் திருச்சிக்கு ரெயில் பயணம். காலை ஒன்பது மணிக்கு லால்குடியிலிருந்து வரும் பாசஞ்சர் வண்டி அதில் பெட்டிகளுக்கெல்லாம் பெயர் உண்டு பஜனை வண்டியில் திருப்புகழ் பாடுவார்கள், சீட்டு வண்டி யில் முன்னூத்தி நாலு ஆடுவார்கள். அதே போல் பால் வண்டி, ஆபீசர் வண்டி என்று பாகுபாடுகள், காலேஜுக்கு பாண்ட்டு போட்ட தாக ஞாபகமில்லை. வேட்டியை டப்பா கட்டு கட்டிக்கொண்டு செருப்பில்லாமல் தான் செல்வேன். 


டவுன் ஸ்டேஷனில் இறங்கி ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் ரோடு வழியாக குறுக்கே மண்டபங்களை எல்லாம் கடந்து காலேஜ் அடைவோம். காலேஜில் அப்படி ஒன்றும் பிரசித்தமாக இருந்ததாக ஞாபகமில்லை. பலபேரைப் பார்த்து பயந்த ஞாபகம் இருக்கிறது. லைப்ரரியில் பல உள்ளே விடமாட்டார்கள் சீட்டு எழுதிக் சொடுக்க வேண்டும். 


பார்த்திபன் கனவு கேட்டால் திருச்சபை விளக்கம்'' கொடுப்பார்கள். கெமிஸ்டரி லாபில் மணல் சிந்தினால் கூட ஃபைன் போடுவார்கள். கிளாஸ் கட் அடித்து விட்டு செயிட்டியில் சினிமாப் போனாம் மறுநாளே தபால்காரரைத் தேட வேண்டும். பெற்றோருக்கு அச்சடித்த கடிதம் வந்துவிடும். 


மலைக்கோட்டையில் சின்னக்கடைத் தெருவில் ஒரு கபேயில் இலை போட்டு வீட்டு சாப்பாடு போடுவார்கள். (நெற்றியில் திரு நீர் இட்டுக்கொண்டால் தான் அனுமதி) பெரியாடைத் தெருவில் ஒரு கடையில் கண்ணாடிக்குள் வைத்திருந்த ஹார்மோனிக்கா இன்னும் எனக்கு ஆசை காட்டிக் கொண்டிருக்கிறது. 


அதே பெரிய கடைத்தெருவில் பழைய புத்தகக் கடையில் வீரமா முனிவரின் சதுரகராதியிலிருந்து ஆப்டோன் படங்களடங் கிய கொக்கோக சாஸ்திரம் வரை கிடைக்கும். பணத் தட்டுப்பாட்டுக்கு சட்டென்று புஸ்தகங்களை விற்கக்கூடிய ஸ்தலமும் இஃதே. சிங்காரத்தோப்பு இப்போது போல இல்லை. நிறைய தையல் கடைகளும், காப்பிக் கொட்டை, செருப்பு முதலியன கிடைக்கும்.


ராஜா தியேட்டர் தான் அப்போது ஒசத்தி ஏஸி தியேட்டர் என்பதே கிடையாது. இங்கிலீஷ் படத்திற்கு ஜங்ஷன் அருகில் பிளாஸா ஒரு தியேட்டர் தான். பிளாஸா வுக்கு எதிராகவே ரேடியோ நிலையம். அங்கே பள்ளி நாட்களில் ஒரு முறை மணி மலர்" நிகழ்ச்சியில் நான் இருபது பிள்ளைகளுடன் கலந்து கொண்டிருக்கிறேன். 


ரேடியோ அண்ணா யார்யார் எல்லாம் லெட்டர் எழுதியிருக்காங்க' என்று கேட்டதற்கு, "மணச்சநல்லூர் சிறுவர் சங்கம்" என்று முறை வந்தபோது சொல்லியிருக்கிறேன் அதற்காக கதரில் ஒரு துண்டு கொடுத்தார்கள்.


தில்லை நகர் எல்லாம் அப்போது இல்லை. அங்கெல்லாம் வயல் தான். தெப்பக்குளத்தில் மாலை ரப்பர் செருப்பு விற்பார்கள். மெயின் கார்டு கேட்டுக்குப் பக்கம் கைரேகை. இப்போது பர்மா பஜார் இருக்கும் இடத்தில் கைரேகை ஜோஸ்யர்கள் இருப்பார்கள், 


'ப்ரொபஸர் நாத் ஏபி. என்று ஒரு ஒல்லியான உயரமான ஸ்டாண்டில் மேல் நகரப் பெட்டி அமைத்து அதன்மேல் டார்ச் விளக்கும் ராட்சச கைபொம்மையுமாக ஜோஸ்யர் சுத்தமாக குளித்துவிட்டு காத்திருப்பார்.  


காட்டினவர்களின் உள்ளங்கையை லென்ஸ் வழியாகப் பார்த்து புன்னகை செய்து கொள்வார். 


கையில் பென்சிலால் மார்க் போட்டு உதட்டுக்குள் என்னவோ கணக்குகள் போட்டுப் பார்த்து "இந்த ஜாதகருடைய கையில் தனரேகையானது தீர்க்கமாக இருப்பதால் மலைக் கோட்டையிலிருந்து உருட்டிவிட்டது போல பணம் பெருகும் பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று பழமொழி எல்லாம் உபயோகித்து ஐந்து நிமிஷம் பலன் சொல்வார். எல்லோருக்கும் அடுத்த பங்குனி மாதம் நினைத்த காரியம் கைகூடும் என்பார். ஒரு ரூபாய் நோட்டு களைத் துச்சமாக மடித்துத் தன்னுடைய ஸ்டாண்டில் அங்கங்கே சொருகியிருப்பார்.


முருகன் தியேட்டரில் பழைய ஆங்கிலப்படங்களை நீச்சலடி சுந்தரி' என்று மொழிபெயர்த்து மார்னிங்ஷோ போடுவார் கள் பப்ளிக் லைப்ரரியில் 'ஜகன்மோகினி' இதழ்கள் கிடைக்கும். தேவர் ஹாலில் ராஜமாணிக்கம் குழுவினர் டிராமா போடுவார்கள். 


ராமகிருஷ்ணா போகிற வழியில் வீடுவீடாக பீடி சுற்றுவார்கள். ஹாட்டின் பீடி மாளிகையில் இரண்டு அலுமினிய மனிதர்கள் மீசை வைத்துக் கொண்டு திடகாத்திரமாக நிற்பார்கள். மாட்டு வண்டியில் ஒரு கிளாரினெட் கெட்டில், டிரம் சகிதமாக ஆட்டின் பீடி வந்துவிட்டது சோதரா! நாட்டின் பீடி நல்ல பீடி (ஆட்டின்)'' என்று பாடிச் செல்வார்கள்


கிழக்கு புலிவார்டு ரோடில் தாராசிங்கிற்கும், செந் தேளுக்கும், மல்யு த் தம் நடக்கும் பெண்கள் மல்யுத்தமும் வாலிபால் போட்டியும் பிரபலமாக இருக்கும். திராவிடர் கழக இயக்கங்கள் சுறுசுறுப்பான ஊர்வலங்களில் எங்களை எல்லாரையும் திட்டிக்கொண்டே செல்வார்கள். சொற்பொழிவு சாத்தாரத் தெருவில் கட்டைக் குரலில் செய்வார். 


பதினெட்டாம் பெருக்கின்போது பாலத்திலிருந்து இரயில் வரும் வரை காத்திருந்து குதிப்பார்கள். மலைக் கோட்டையிலிருந்து சிலர் சொத்தென்று விழுவார்கள்? காதல் தோல்வி அல்லது கடன் தொல்லையால். 


திருச்சி இப்போது ரொம்ப பெரிதாகி அடையாளம் கலைந்து போய் விட்டதாகத்தான் சொல்ல வேண்டும்.


======================

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...