Friday, October 22, 2021

நமது முன்னோர்களுக்கு "எம தீபம்" ஏற்றுவோம் ....

 நவம்பர் 2ஆம் தேதி எமதீபம் ஏற்றுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும் சொத்துக்கள் சேரும்.

தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
தீபாவளி பண்டிகைக்கு அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூலோகம் வந்திருந்த நம்முடைய பித்ருக்கள் நாம் காட்டும் மத்தாப்பு வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.
பித்ரு கடன் .....
அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.
பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம்தான். எனவேதான் முதலில் பிதுர் தோஷத்தினையும், சாபத்தினையும் போக்க வேண்டும்.
ஐபசி அமாவாசை....
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது ஐதீகம்.
எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
எம தீபம் ஏற்றுவோம் ....
தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும்.
அனைத்து விதத் தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.
வாழ்க வளமுடன்......
🌙ஓம் நமசிவாய 🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...