Friday, October 29, 2021

சசிகலா செய்த தியாகம் என்ன?

 சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பது தான், இப்போது அக்கட்சியினர் முன் உள்ள பிரச்னை. அ.தி.மு.க., தோன்றிய போது, கட்சியில் உறுப்பினராக சசிகலா இல்லை. எம்.ஜி.ஆர்., இருந்தபோது, கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஜெயலலிதா, கொள்கைப் பரப்புச் செயலர், ராஜ்யசபா உறுப்பினர் என படிப்படியாக முன்னேறினார்.



latest tamil news




எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், சில போராட்டங்களை சந்தித்து, வெற்றிகண்டு, கட்சியின் பொதுச்செயலரானார்; பின், முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சசிகலா நேரடியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் அமர்ந்து, கட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார். ஜெயலலிதாவின் உண்மையான தோழியாக இருந்தால், 'எனக்குப் பின்னாலும் அ.தி.மு.க., 100 ஆண்டுகள் இருக்கும்' என்ற அவரது கனவை நனவாக்க, சசிகலா பாடுபட வேண்டும்.

'நான், கட்சியில் உறுப்பினராகவே இருக்கிறேன். என் குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம். கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம். தேர்தலில் போட்டியிட மாட்டேன். வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைக் காப்போம்' என சசிகலா அறிவித்தால், கட்சியினரிடையே நம்பிக்கை ஏற்படும். அதை விடுத்து, கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல், எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத சசிகலா, தான் பொதுச் செயலாராகவே இருப்பேன் என்றால், அதை பெரும்பாலான தொண்டர்கள் எப்படி ஏற்பர்?


latest tamil news




ஜெயலலிதாவைப் பயன்படுத்தி கட்சியிலும், ஆட்சியிலும் அதிகார மையமாக திகழ்ந்து, தன்னையும், தன் குடும்பத்தையும் வளப்படுத்தியவர் சசிகலா. அவருக்கு கட்சி பொதுச்செயலர் பதவி கொடுத்து, மன்னார்குடி குடும்பத்துக்கு அடிமை வாழ்வு வாழ, உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் விரும்ப மாட்டார்கள். அ.தி.மு.க., கட்சி அதிகாரத்தில் சசிகலா அமர்ந்தால், 'ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதாம்' என்ற கதையாகி விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...