Thursday, October 28, 2021

அண்ணாமலை மீது 500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு.

 போட்டது யார்? BGR எனர்ஜி..

யார் இந்த BGR எனர்ஜி? இதன் மூலம் என்ன? யார் இதனுடைய உண்மையான முதலாளி என்ற விவாதத்துக்கு செல்லவில்லை..
இந்த 500கோடி வழக்கு என்பது சும்மா மிரட்டி பார்க்க தானே ஒழிய எதுவும் நடக்கப்போவதில்லை என நினைத்தால் அதுதான் நடக்கப்போவதில்லை.
ஒருவேளை ஆதாரங்கள் இல்லை மன்னியுங்கள் என அண்ணாமலை சொல்வார் அதை வைத்து இவர் தனது எதிரிகள் மீது சுமத்தும் அனைத்து குற்றசாட்டுகளும் பொய் என இவர் பிம்பத்தை சிதைக்கும் முயற்சி செய்து இவரை ஒழித்து கட்டலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்.
ஒருவேளை அண்ணாமலை தகுந்த ஆதாரம் இல்லையென்றால் இந்த மாதிரி பொதுவெளியில் பேசி இருக்க மாட்டார். அதுவும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆதாரத்தை வைத்துக்கொண்டு மட்டுமே பேசி இருப்பார் ஆகவே முதலிலேயே சொன்னது போல வழக்கை சந்திக்க தயாராகவே இருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை எல்லாம் ஜெயாவுக்கு நடந்தது போல கர்நாடகாவில் நடந்தால் சிறப்பாக இருக்கும். அதுவும் விரைவு நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்பு 3 மாதத்துக்குள் வந்தால் மிகவும் சிறப்பு.
அடுத்ததாக இந்த மாதிரி வழக்கு மிரட்டல் எல்லாம் தற்குறி‌ அரசியல்வாதியை வேண்டுமானால் மிரட்ட பயண்படும் ஆனால் முதலிலிருந்தே பேட்டியில் வழக்கு தொடருங்கள் என சவால் விட்டவர் ஆதாரம் இல்லாமலா பேசுவார்..
BGR வாண்டடாக ‌வண்டியில் ஏறி மாட்டிக்கொண்டதாக புரிகிறது.இந்த யோசனை கொடுத்த நபர் சரியான பாடம் கற்றுக் கொள்வார்.
BGR ஆழம் தெரியாமல் காலை விட்டதாகவே தோன்றுகிறது.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...