Monday, October 25, 2021

*இது தெரிஞ்சா, இனிமேல் நீங்கள் இருமல் மருந்தே வாங்க மாட்டீங்க!*

 சாதாரண இருமலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் இரசாயன கலப்புக் கொண்ட ஆங்கில மருந்துகள் வேண்டாம். இந்த எளிய இயற்கை மருந்தை வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் தும்மல் வந்தாலும், இருமினாலும், உடனே மருந்தகத்திற்கு சென்று சிரப் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்வோம். ஆனால், அதன் பக்கவிளைவுகள் என்ன, அதில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயன, வேதியில் பொருட்கள் என்ன, நாள்ப்பட அது நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது பற்றி நாம் சிறிதும் யோசிப்பதே இல்லை.
இரசயான கலப்பு கொண்டுள்ள இருமல் மருந்தை உட்கொள்வதற்கு பதிலாக, இயற்கை பொருட்கள் கொண்டு, வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்...
*தேவையான பொருட்கள்:*
* தேங்காய் சர்க்கரை - ஒரு கப்.
* நீர் - அரை கப். * எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
* தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.
* இஞ்சி - அரை டீஸ்பூன்.
* கிராம்பு - கால் டீஸ்பூன்.
*செய்முறை | ஸ்டெப் #1*
தேங்காய் சர்க்கரை, நீர், எல்லுமிட்சை சாறு, தேன், நசி மற்றும் கிராம்பை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூட்டில் நன்கு கலக்கவும். இளங்கொதி நிலை அடையும் போது சூட்டை குறைத்துக் கொள்ளவும்.
*செய்முறை | ஸ்டெப் #2*
15- 20 நிமிடங்கள் மிதமான சூட்டில், சூடு செய்யுங்க. மெல்ல, மெல்ல கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் (parchment paper) வைத்து ரெடி செய்து வையுங்கள்.
*செய்முறை | ஸ்டெப் #3*
பிறகு சூடு செய்ய கலவையை சாற்றி ஆறவிட்ட பிறகு. ஒரு ஸ்பூனில் பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி வைத்துள்ள பேக்கிங் பேனில் ஒவ்வொரு சொட்டு அந்த கலவை சிரப்பை இடுங்கள்.
*செய்முறை | ஸ்டெப் #4*
அதன் மீது தேங்காய் சர்க்கரையை தூவுங்கள். பிறகு அதோ பாதுகாப்பான இடத்தில் காய வையுங்கள். இது இருமலை எளிதில் போக்கும் தித்திப்பான மருந்தாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...