Friday, October 29, 2021

கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு #ஓ_பன்னீர்செல்வம் அவர்கள் #பசும்பொன் சென்று தேவர் #திருமகனார் திருத்தலத்தில் மரியாதை செலுத்துகிறார்.

 தெய்வீகத் திருமகனார் அய்யா #முத்துராமலிங்கத்_தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை காலை 8 மணிக்கு பெரியகுளத்தில் உள்ள தேவர் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு #ஓ_பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்,

தெய்வத்திருமதி #ப_விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி தசமி திதி தோஷ நிவர்த்தி சாந்தி நடைபெரும் நாளாகும், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி விஜயலட்சுமி அம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்த நாளில் இருந்து வரும் அக்டோபர் 30 வரை தோஷ காலம் ஆகும்,இந்த நாட்களில் எந்த ஒரு சுப காரியங்களுக்கும்,கோவில் மற்றும் திருத்தலங்களுக்கும் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் செல்ல முடியாது, இந்த சூழலில் 60 ஆவது நாள் மறைந்த சித்தர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு வருடமும் தவறாமல் தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு #அம்மா அவர்கள் வழங்கிய தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொடுத்தும், மாண்புமிகு அம்மா அவர்களுடனும், மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்
ஐயா அவர்களும் தேவர் ஜெயந்தி நாளில் தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நேரில் சென்று வழிபாடு நடத்தியும் வந்தார்கள், இந்நிலையில் இந்த வருடம் 60-வது நாள் தோஷ நிவர்த்தி வழிபாடு நடைபெற இருப்பதால் புண்ணிய பூமியான பசும்பொன் திருத்தலத்திற்கு செல்ல முடியாத நிலை 60 நாட்கள் கடந்து, வரும் #நவம்பர்_1 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள #மாமன்னர்கள்_மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு மதியம் 12 மணியளவில் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு #ஓ_பன்னீர்செல்வம் அவர்கள் #பசும்பொன் சென்று தேவர் #திருமகனார் திருத்தலத்தில் மரியாதை செலுத்துகிறார், அதை தொடர்ந்து தங்க கவசத்தை மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்பதை அன்புடன் தெரியபடுத்தி கொள்கிறோம்,
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...