Friday, October 29, 2021

மோடியின் இடத்திற்கு ராகுல் வர முடியாது: பிரசாந்த் கிஷோர்.

 ‛‛ பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,'' என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். இந்நிலையில், கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசியதாவது:
இந்தியாவில் பா.ஜ., இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ., அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும்.
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ., எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.
தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பா.ஜ.,வுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து ஓட்டு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...