Sunday, December 18, 2022

சபாஷ் பத்திக்கிச்சய்யா, இனிய கொழுந்து விட்டு எரியனும்.

 திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.
இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?

ராகுல் காந்தி:

 "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" .

இந்தியாவின் ரா கொடுக்காத உளவுத்தகவலை
அமெரிக்காவின் சிஐஏ கொடுக்காத எச்சரிக்கையை
இஸ்ரேலின் மொஸாட் கொடுக்காத துப்பினை
ரஷ்யாவின் எஃப்எஸ்எஸ் கொடுக்காத குறிப்பினை
ராகுலுக்கு யார் சொல்லி இருப்பாங்கன்ற சந்தேகம் வருதா உங்களுக்கு?
காத்மாண்டு,நேபாளத்தில் இருக்கும் மதுபான விடுதியில் நடந்த பார்ட்டியில் சீன தூதரக அதிகாரியுடன் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியதே.
ஒருவேளை அந்த அம்மணி சொல்லி இருப்பாங்களா?
அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க.
'இது தான் காங்கிரஸின் ஈனத்தனமான அரசியல் தந்திரம்.'
எல்லையில் சீன ராணுவ அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக அவையை காங்கிரஸ் முடக்கியதும் கூட அதன் அரசியல் போக்கினையே கட்டியம் கூறுகிறது.
ஏன் சீனாவை பற்றி பேசியபடியே இருக்கிறது காங்கிரஸ்?
அது தான் தந்திரத்தின் உச்சம்.
'சீனா மிகப்பெரிய வல்லரசு. நமது இந்தியா அவர்களை எதிர்கொள்ளும் வலிமையற்ற மிகவும் சாதாரணமான நாடு தான்'
என்ற நினைப்பை மக்களின் மனதில் அழியாமல் ஆளப்பதித்திட வேண்டும் என்பதால் தான் காங்கிரஸ் தொடர்ந்து சீனாவை பற்றி பேசியபடியே இருக்கிறது.
இந்த கண்ணோட்டம் மக்கள் மனதில் பதிந்து விட்டால்,
அவர்களை அறியாமலே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகும், தேசம் அபாய கட்டத்தில் உள்ளதென்ற பயம் உருவாகும்.
இந்த பயம்
பாஜகவின் மோடி கட்டமைத்து வரும் வலிமையான இந்தியா என்ற சுதந்திர சிந்தனையை அடக்கி,
இது இன்னும் பிரிட்டிஷாரின் அடிமை இந்தியா தான் என்ற மன மாயையை அகற்ற விடாது.
காங்கிரஸ் திணிக்கும் இந்த அடிமை எண்ணம், மக்களை தேசத்தின் வளர்ச்சி பாதையில் இருந்து பின்னோக்கி இழுத்து,
'எங்களுக்கு உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள்'
என்று மீண்டும் உலக நாடுகளிடம் மக்களை கையேந்த செய்யும் மனோபாவத்தை வளர்க்க முயற்சிக்கும் குரூரமான சதி.
'காங்கிரஸ் இன்னும் தன்னை திருத்தி கொள்ளவே இல்லை.'
ராகுல் காந்தி,
இது உங்கள் குடும்ப ஆதிக்கத்தில் இருந்த அடிமை இந்தியா அல்ல.
இது மோடியின் இந்தியா.
வலிமையான இந்தியா.
யுத்தம் இன்றி பாகிஸ்தானை நடுத்தெருவில் நிறுத்திய தந்திரம் அறியவில்லையா?
அல்லது
சத்தம் இல்லாமல் சீனாவின் பொருளாதார சாம்ராஜ்யத்தை ஆட்டுவிக்கும் சூட்சுமத்தை நீங்கள் உணரவில்லையா?
இது புண்ணிய பூமி ராகுல்.
இன்னும் நூறு வருடங்கள் உங்கள் பாதத்தை இந்த மண்ணில் பதித்து சுற்றி வாருங்கள்.
அப்போதாவது தேசப்பற்று உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் ஆன்மா புனிதமடையும்.

*கண்ணே, MONEYயே!*

 சமீபத்தில் ஒரு தினம் காப்பியை ஆற்றுவதற்காக ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளரில் ஊற்றினேன்.

நான் மிகச் சரியா ஊற்றுவதாக நினைத்துக் கொண்டாலும்,
அது எப்படியோ மற்ற டம்ளரில் ஒரு சொட்டுக்கூட விழாமல்,
டைனிங் டேபிள்மீதே விழுந்தது..
மேஜையின் மேடு பள்ளத்துக்குத் தகுந்த மாதிரி ஓடி கீழே சொட சொட வெனக் கொட்டிவிட்டது.
மனைவி தற்செயலாக சமையலறையிலிருந்து வெளியே வந்தவள், துடித்துப் போய்விட்டாள்.
"காப்பி நன்றாயில்லையென்றால் என் தலையில் கொட்டறதுதானே, ஏன் தரையில் கொட்டறீங்க?" என்று கூவினாள்.
எனக்கு மனைவி மீதோ தரை மீதோ எந்தக் கோபமும் இல்லை
ஆகவே கோளாறு வேறு எங்கோதான் என்று நான் நினைத்த மாதிரியே மனைவியும் நினைத்து,
"உங்களுக்கு வரவரக் கண்ணே தெரியறது இல்லை.
அன்றைக்கு கட்டைப் பைக்குள் பர்ஸைத் தேடச் சொன்னேன்.
நீங்கள் தேடிவிட்டு இல்லையென்று சொல்லிவிட்டீர்கள். நான் துடித்துப் போய்விட்டேன்.
கடைசியில் பார்த்தால் அதிலேயே இருந்தது.
"முந்தா நாள் வேலைக்காரி வாசலோடு போனவளைக் கூப்பிடுங்கள் என்கிறேன்.உங்களுக்குக் கண்ணே தெரியலை.
அவள் மேற்கே போய்க் கொண்டிருந்தாள் நீங்கள் கிழக்கே போய்
யாரையோ கை தட்டிக் கூப்பிடுகிறீர்கள்."
"சரி.
அடுக்கினது போதும்.
நான் காடராக்ட் ஆபரேஷன் பண்ணிக்கணும்.
அவ்வளவுதானே!" "சொல்லிச் சொல்லி சலிச்சுப் போயாச்சு.
தினமும் காப்பி கொட்டுகிற உற்சவம் நடந்துகொண்டிருக்கிறது.
பொறுப்பே இல்லாமல் இருக்கீங்களே.
காப்பிப் பொடி, சர்க்கரை, பால் இதெல்லாம் விற்கிற விலையில்...
காஸ் விலையும் கன்னா பின்னான்னு ஏறியாச்சு....நீங்க எதைப் பற்றியாவது எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?"
"இங்கே பாரு! நான் துளிக் காப்பியை கொட்டினதாலே பொறுப்பே இல்லாதவன் என்றெல்லாம் பெரீய பெரீய வார்த்தையைச் சொல்லாதே. உன் பி.பி.யை ஏத்திக்காதே.
ரிலாக்ஸ்.
ரிலாக்ஸ்.
நான் உனக்குப் புரியும்படி சொல்றேன்."
"வேலை இருக்கு தலைக்கு மேலே."
"தலையே போனாலும் போகட்டும்.
நீ சில விஷயத்தைத் தெரிந்துகொண்டாகணும்."
"சொல்லித் தொலையுங்க."
"நான் பொறுப்பற்றவன்னு சொன்னதை முதல்லே வாபஸ் வாங்கு."
"ஏன் வாபஸ் வாங்கணும். ஓட்டலிலே ஒரு காப்பி எட்டு ரூபாய்!
"நீ வீட்டுக் காப்பி விலையைச் சொல்லு.
"ரெண்டு ரூபா வெச்சுக்குங்க.
"நான் இன்னிக்கி முழுக் காப்பியையும் கொட்டிட்டேனா,
பாதி டம்ளர் காப்பியைக் கொட்டினேனா?
"பாதி இருக்கும் .அதுக்குள்ளேதான் நான் ஓடி வந்து குரல் கொடுத்துட்டேன்.
"நம் வீட்டுக் காப்பி பாதி கப் என்ன விலை?"
"ஊம். ஒரு ரூபா வெச்சுக்குங்க."
"ஒரு நாளைக்கு நீ எத்தனை வேளை காப்பி தர்ரே?"
"ரெண்டு வேளை.
"பூராக் காப்பியையுமே ரெண்டு வேளையும் நான் கொட்டினால்கூட ரெண்டு ரூபாய்தான் நஷ்டம்.
"சரி. ...
"ஒரு நாளைக்கு ரெண்டு ரூபான்னா மாசம் அறுபது ரூபாய்.
வருஷத்துக்கு எழுநூற்று இருபது ரூபாய்."
"சரி. சரி.
"வருஷம் எழுநூற்று இருபதுன்னா..நான் இன்னும் ஒரு
இருபது வருஷம் உயிரோடிருக்கிறதா எடுத்துக் கொண்டால்கூட
14,400 ரூபாய் ஏறக்குறைய
15,000 ரூபாய் செலவாகும்.
"தினமுமே கொட்டறதாகவே வெச்சுக்க என் ஆயுளில்
காப்பி கொட்டிய வகையிலே பதினையாயிரம் செலவு."
"செலவு செலவுதானே.
"உனக்குத்தான் புரியலை நான் காப்பி கொட்டாதிருக்கணும்னா காடராக்ட் ஆபரேஷன் பண்ணிக்குங்கன்னு சொல்றயே.
அதுக்கு என்ன செலவாகும் தெரியுமோ?
*நல்ல நர்ஸிங் ஹோமிலே போய்ப் பண்ணிக்கறதுன்னா இருபத்தையாயிரம் ரூபாய்.*
*அதுவும் ஒரு கண்ணுக்கு. ரெண்டு கண்ணுக்கும் ஐம்பதாயிரம் ரூபா."*
"அவ்வளவா ஆகும்?"
"ஆமாம். நமக்கு இப்ப ஏகச் செலவெல்லாம் இருக்கு.
உன் ரூமில் உனக்குன்னு ஒரு டி.வி. வாங்கி வைக்கணும்னு இருக்கேன்.
*அதுக்கு ஒரு இருபதாயிரம்.*
உனக்கு ஒரு நல்ல ஸெல்போன் வாங்கணும்னு இருக்கேன்.
*அது ஒரு பத்தாயிரம்*
உன் வளையல் ரொம்ப த்ராபையாயிருக்கு - அழிச்சிட்டு ரெண்டு பவுன் சேர்த்து கொஞ்சம் திடமானதாய் பண்ணணும்னு இருக்கேன்.
*அது ஒரு ஐம்பதாயிரமாகும்."*
"நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் - ஏகச் செலவு இருக்கு.
நான்தான் யோசிக்காம உங்களைத் திட்டிட்டேன்.
எனக்கே இப்பத்தான் தோணறது.
உங்களுக்கு ஒண்ணும் *இப்போ காடராக்ட் ஆபரேஷன் தேவையில்லை.*
*ஏதோ கை தவறி காப்பி கொட்டிட்டேள்!*
அவ்வளவுதான்!"```
(இந்த பதிவில் உள்ள காபி விலையை இன்றைய காபி விலைக்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பதிவில் உள்ள யதார்த்தத்தை அலசுங்கள்)

88 மாவட்ட செயலாளர்களுடன் 21-ந்தேதி ஆலோசனை: போட்டி பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் ஏற்பாடு .

 அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதுவும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பின்னடைவாகவே அமைந்திருந்தது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினரோ பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி அதற்கு எதிராக சட்ட போராட்டத்தையும் நடத்தி தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோரையும் ஓ.பி.எஸ். நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றே ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இன்னொரு தீர்ப்பும் வெளியானது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. வருகிற 4-ந்தேதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தொடர்ந்து ஆலோசனை நடத்தியதுடன் தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் முன்னிலை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். கூட்டியுள்ள இந்த திடீர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனைகளை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த கூட்டம் இருக்கும். அடுத்தகட்டமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்று தெரிவித்தார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஓ.பி.எஸ். தரப்பிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தகவல்களை விரைவில் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போதும் இந்த தகவல்களை ஓ.பி.எஸ். தரப்பினர் தெரிவிக்க உள்ளனர். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்த முடியும் என்பதே ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக உள்ளது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி இருக்கும் நிலையில் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். ஏற்பாடு செய்துள்ளார். இதுவும் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் 21-ந்தேதி ஓ.பி.எஸ். கூட்டியுள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவரஞ்சனியை வாழ்த்துவோம்.

 தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் சாதனை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களை காண முடிகிறது. தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.
மேலும் அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாக கூறினார்.
தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை வாழவைக்கும் சகோதரியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
May be an image of 1 person and grass

" தரங்கம்பாடி ".

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையோரமாக அமைந்துள்ளது, தரங்கம்பாடி என்ற ஊர்.

இங்கு பழம்பெருமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் சுந்தரரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும்.
கடல் அலைகள் இசைபாடுவதுபோல் அமைந்த இடம் என்பதால் ‘தரங்கம்பாடி’ என்ற பெயர் வந்தது.
இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது. கடல் அலைகள் கோவிலுக்கு நெருக்கமாக வந்து செல்லும். இந்த ஆலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காண முடியாத அண்ணல் (லிங்கோத்பவர்) ஆக உள்ளனர். விநாயகருக்கும் சன்னிதி உள்ளது.
இந்த ஆலயத்தின் கருவறை தற்போது பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. ஆலயத்தின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்த கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது.
மூலவரை மாசிலாமணீசுவரர் என்றும், மாசிலாநாதர் என்றும் கூறுகின்றனர்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக கோவில் அமைக்கப்பட்டது.மூலவருக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் அம்பாள் வீற்றிருக்கிறார். ஆலய பிரகாரத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. சந்திரன், சூாியன், பைரவர் திருமேனிகளும் காணப்படுகின்றன.
May be an image of outdoors

அருமை பெண்டாட்டியை அடமானம் வெச்சுட்டு போக என் மனசு ஒப்புமா, சொல்லு?”

 காபியும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவர சென்றபோதுதான் தூக்கிவாரிப்போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை.

“வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. நேரே வீட்டுக்குப்போ. பணம் எடுத்துக்கோ. போன ஆட்டோவிலேயே திரும்பிடு. போக வர முப்பது ரூபாதான் ஆகும். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான் தன் மனைவியிடம்.
“ஏங்க, அதுக்கு நீங்க பைக்கிலேயே போயிட்டு வந்துடலாமே?” என்றவளை, “சொன்னதைச்செய்” என்று கடுப்பாகச்சொல்லி விரட்டினான்.
கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ஓரமாக இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டான்.
அரை மணியில் வித்யா பணத்துடன் திரும்பினாள். ஓட்டல் பில்லை செட்டில் பண்ணிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.
பைக்கில் போகும்போது, “போக வர ஆட்டோவுக்கு தண்டச்செலவு. எனக்கும் அலைச்சல். நீங்களே பைக்ல போயிட்டு வந்திருந்தா பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிருக்கும். சொன்னா கேட்டாதானே?” என்று சிணுங்கினாள் வித்யா.
சிரித்தான் பாஸ்கர். “மேடத்துக்கு என் மேல ரொம்ப கோபம் போலிருக்கு?” என்றவன், “யோசிச்சுப்பாரு வித்யா! பத்து நிமிஷமே ஆனாலும், முள்ளுமேல உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்காதா உனக்கு? அதோட, கொஞ்ச நேரத்துக்குதான்னாலும் என் அருமை பெண்டாட்டியை அடமானம் வெச்சுட்டு போக என் மனசு ஒப்புமா, சொல்லு?” என்றான்.
தனது கணவனுக்கு தன்மேல் இருந்த அன்பின் ஆழம் புரிந்து அன்போடு இறுக கட்டியணைத்தாள் வித்யா.
உங்கள் வாழ்வில், உங்கள் வாழ்வின் இறுதிவரை, உங்கள் கைகோர்த்து, உங்களுக்காக வருபவள் உங்கள் மனைவி. எனவே உங்களை போலவே.... முடிந்தால் உங்களை விட அதிகமாகவே அவளையும் நேசியுங்கள்.
May be an image of 1 person, standing and jewellery

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...