Wednesday, December 14, 2022

அவர் இருந்தால் இப்போது ஊளையிடும் குள்ளநரிகள் கப்சிப் என்று இருப்பார்கள்.

 அது திமுக ஆட்சியிலிருந்த 2006-ஆம் ஆண்டு மே மாதம். அதிமுகவின் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக சஸ்பண்ட் செய்தார் அன்றைய சபாநாயகர்.

ஜெயலலிதா மட்டும் பேரவைக்கு வராததால் அவரை மட்டும் சஸ்பண்ட் செய்யவில்லை. எதிர்கட்சி சார்பில் யாருமே இல்லாமல் சட்டபேரவை நடந்து கொண்டிருக்கிறது.
அப்பொழுது அடுத்த நாள் பேரவைக்கு போவதாக ஜெயலலிதா அறிவித்ததுதான் மிச்சம்...
அதிர்ந்து போனது ஆளும் திமுக அரசு, அலறியது மீடியாக்கள். சட்டமன்ற வளாகத்தை சுற்றி கிட்டதட்ட 2 கிமீ வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திருந்தது காவல்துறை..
சட்டப்பேரவையில் தனக்கு பின் 60 காலி இருக்கைகள் இருக்க, தனி ஒரு மனுசியாக சிங்கம் போல வந்து அமர்ந்தார் ஜெ.
பேரவை வளாகமே நிசப்தமானது.. வரலாறு காணாத அளவுக்கு மயான அமைதி நிலவியது.
முதலமைச்சர் உள்ளே நுழையும் போது அனைத்து அவை உறுப்பினர்களும் எழுந்து நிற்க, அவரை சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார் ஜெயலலிதா.
தனக்கு பேச ஒதுக்கப்பட்ட 30 நிமிடத்தில் பல்வேறு பிரச்சனைகளில் ஆளும் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.
நடுவில் அவருக்கு விளக்கம் அளிக்க முயன்ற #பொன்முடி, #KKSSR, #பீட்டர்_அல்போன்ஸ் ஆகியோரை நிராகரித்து விட்டு,
"எனக்கான விளக்கம் நான் பேசி முடித்த பின் கொடுத்தால் போதுமானது" என்று பேசி அவர்களை அமர வைத்தார்.
ஆனால் பேசி முடித்த உடன், யாருடைய விளக்கத்தையும் சட்டை செய்யாமல் அவையிலிருந்து வெளியேறினார்.
2011’ல் அழகிரி மத்திய அமைச்சரான போது மதுரையில் அவரை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது.
"அடுத்த தேர்தலுக்கு முன் அதிமுக என்ற கட்சியே இருக்காது" என்று அழகிரி கொக்கரித்து கொண்டிருக்க, அதிமுகவின் பல்வேறு தலைவர்கள் சசிகலா பிரச்சனையால் கட்சியை விட்டு பிரிந்திருந்த நேரம்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்திருந்தார் ஜெ. பிரச்சாரத்தில்,
“மதுரைக்கு வருவதற்கு எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தையும் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்களாக கருதி வந்துள்ளேன். யாரோ அஞ்சா நெஞ்சன் இருக்கிறாராமே? எங்கே அவர்” என்று கேட்டு அழகிரி & தொண்டரடிப்பொடிகளை அலறவிட்டார்.. சேலத்தில் அதற்கு முன் யாராலும் கட்டுப்படுத்த
முடியாதிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
"இது அதிமுகவின் வாழ்வா? சாவா? நிலை என்று கூறுகிறார்களே.. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது,
"தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு வாழ்வா? சாவா? பிரச்சனை, எனக்கு தனிப்பட்ட முறையில் அல்ல" என்றார் ஜெ.
எதற்கும் எப்பொழுதும் அசராத பெண்மணி செல்வி ஜெயலலிதா அவர்கள்...
அவருடைய ஆளுமை, வரலாற்றில் பெண்களிடம் கண்டிராத ஒன்று. தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு கட்சியின் தலைவராக இப்படிப்பட்ட ஒருவர் இருந்ததில்லை..
'பெண்களால் எதுவும் முடியும்' என்ற நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து, மரணத்தின் மூலமாக மட்டுமே ஆட்சி கட்டிலில் இருந்து விடுவிக்கப்பட்ட, இந்தியாவில் அதிக காலம் முதலமைச்சராக இருந்த ஒரே பெண் #முதல்வர் என்ற பெருமையுடன் சென்று விட்டார்.
எம்ஜிஆருக்கு பின் சரியோ தவறோ, அதிமுகவின் ஆளுமையுள்ள தலைமை என்பது செல்வி ஜெயலலிதாவோடு முடிந்து போனது.
May be an image of 3 people, people standing and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...