Friday, December 16, 2022

அடுத்த தேர்தலில்”சிதம்பரத்தில்” சிதைக்கப் பட வேண்டும்!

 பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி எதற்காக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார் ?. திருமாவளவன் கேள்வி .

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் திருமாவளவனே !.
இந்து மதத்தின் பட்டியல் சமூகம் சார்ந்தவன் என்ற சான்றிதழோடு தனி தொகுதியில் திருமாவளவன் என்ற இந்து பெயரில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதையும் வெண் பட்டு வேட்டி சகிதம் கழுத்தில் ருத்ராட்சம் - நெற்றி நிறைய விபூதியை பூசிக்கொண்டு நானும் இந்து தான் என்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் வலம் வந்து அங்கு இருக்கும் தீட்சிதர்கள் முன் பல் இளித்து அவர்கள் கொடுத்த பூரண கும்பம் மரியாதையை ஆ வென்று வாயைப் பிளந்து வாங்கிக் கொண்டு, சிதம்பரம் தொகுதியில் இருக்கும் இந்து மக்களின் வாக்கை பட்டியல் சமூகம் சார்ந்தவன் என்ற அனுதாபத்தை காட்டி பெற்றுக் கொண்டு, வெற்றி பெற்று நாடாளுமன்றம் போன பிறகு ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அதற்குப் பெயர் கோவில் என்று பேச உன் போல நாலாம் தர மனிதர்களால் மட்டுமே முடியும்.
வனத்தில் பழங்குடி இனத்தில் பிறந்து பார்க்கும் யாவையும் இறை அம்சமாக வணங்கி, வனமே வீடாக ,இயற்கையே தெய்வமாக ,இந்து சனாதன தர்மத்தோடு வளர்ந்த ,இந்து சனாதனத்தின் பவித்திரமான பத்தினி தீயாம் - சக்தியின் பிரதி பிம்பம்- பாஞ்சால நாட்டு இளவரசி- பாண்டவர்களின் பத்தினி - குருசேத்திரத்தின் வெற்றி திருமகளான துருபத குமாரி திரௌபதியின் திருநாமத்தை பிறவி நாமமாக பெற்றுக்கொண்டு, அந் நாமத்திற்கு கௌரவம் சேர்க்கும் வகையிலான ஒரு கண்ணியமான வாழ்வை இன்றளவும் வாழ்ந்து வரும் , இந்து பழங்குடியின வம்சத்தின் வனலட்சுமியான எங்கள் பரந்த பாரதத்தின் முதல் குடிமகளும் ,குடியரசுத் தலைவர் மாளிகையின் முடி சூடா மகாராணியும் பாரதம் என்னும் பரந்த சாம்ராஜ்யத்தின் குடியரசு தலைவருமான மாண்புமிகு திரௌபதி முர் மூ அவர்கள் அவரது வாழ்வியல் வழக்கப்படி ஆதி சிவனின் விக்கிரக திருமேனியை அபிஷேகம் செய்து வணங்குகிறார்.
இதில் உனக்கு என்ன பிரச்சனை ?.
தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் என்ற அடையாளத்தில் கட்சி, இந்து என்ற பெயரில் பதவியும் பெற்றுக் கொண்டு , தன்னை நம்பி வந்த மக்களை சமூக குற்றவாளிகளாக- மதமாற்ற வியாபாரிகளுக்கு நுகர்வு பண்டமாக மாற்றிக் கொடுத்த உனக்கு ,தன் வாழ்நாள் முழுவதையும் தன் உறவுகளான பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து வாழும், வாழ்வில் எத்தனையோ நெருக்கடிகளை கடந்த போதிலும் இறை அருளால் அத்தனையும் கடந்து வந்து பொறுமையில் பூதேவியையும் மிஞ்சிய திரௌபதி முர் மூ அவர்களின் பெயரை உச்சரிக்கும் அருகதை கூட உனக்கு கிடையாது. அப்படி இருக்க அவரைப் பற்றி கேள்வி எழுப்பவும் விமர்சனம் வைக்கவும் உனக்கு என்ன அருகதை இருக்கிறது ?.
பழங்குடி இனத்தில் பிறந்து வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து, வம்சத்தின் முதல் பட்டதாரி பெண்ணாக அரசு வேலை முதல் ஆளுநர் பதவி வரை இந்திய அரசின் மூலம் கிடைக்கப்பெற்ற அத்தனையும் பயன்படுத்தி, தன் சமூக மக்களை கல்வி - சுகாதாரம் - பொருளாதாரம் முன்னேற்றம் - சமூக அங்கீகாரம் - அரசியல் அதிகாரம் என்று அனைத்திலும் கோலோச்ச தேவையான அத்தனையும் சட்டத்தின் துணை கொண்டு செய்து வந்தவர் திரௌபதி முர்மூ அவர்கள். அவரின் அந்த தியாகமும் அர்ப்பணிப்பும் தான் அவரை தேசத்தின் முதல் குடிமகளாக உயர்த்தி இருக்கிறது.
தான் சார்ந்த சமூக மக்களுக்கு அவர் ஆற்றிய அரும் பணிகள் தான் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள், முகமறியா அவரை அவரின் பதவியேற்பு தினத்தன்று எங்களின் குலமகள் திரௌபதி இந்த தேசத்தின் குடியரசு தலைவர் என்று பெருமையாக இனிப்பு வழங்கி திருவிழா போல் கொண்டாட வைத்தது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் கட்சி நடத்துவதற்கும் , பணத்திற்காகவும் பதவிக்காகவும் பட்டியல் சமூகம் என்ற அடையாளத்தை முன்நிறுத்தி,அதே, இந்து மதத்தை ஏளனம் பேசியும் , இந்து மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் அவமதித்து பேசியும், மாற்று மதத்தவரை குளிர்வித்து அவர்கள் வீசும் எலும்பு துண்டிற்கு மலிவான அரசியல் செய்யும் உன்போன்ற நபர்களுக்கு திரௌபதி முர்மூ போன்ற தெய்வீகப் பிறவிகளின் அருமையும் அவர்கள் செய்யும் செயல்களுக்கான தார்பர்யம் - காரணம் என்ன? என்பதெல்லாம் சொன்னாலும் புரியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உணரவும் முடியாது.
முதல்வர் பதவி கூட முதல் இலக்கு இல்லை. இந்து ஆலயத்தின் கருவறை நுழைந்து அதன் மாண்பை சிதைப்பதே முதல் இலக்கு என்ற கெடுமதியோடு உலவும் உனக்கு, நாள்தோறும் ஆலயத்திற்கு உழவாரப் பணிகள் செய்து- பூஜை புனஸ்காரம் என்று சதா சர்வ காலமும் பக்தியோடு வாழ்ந்து தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வாழ்ந்து, தன் தேசபக்தியாலும் - தெய்வ பக்தியாலும் குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்த அவரின் பண்பை உன் போல பதர்கள் ஒருநாளும் உணர முடியாது.
பழங்குடி இனத்தில் பிறந்த பாரதத்தின் பெண்ணாக அவர் தனது பூர்வீகத்தை மறக்காமல் வன மகளாய் பிறந்து நரசிங்கனின் கரம் பிடித்த செஞ்சு லட்சுமியின் அவதாரமாக , தான் சார்ந்த வம்சத்தை கை தூக்கி வாழ வைக்கும் வன லட்சுமியாக தன் சகோதரனான சிவனை பூஜிக்கிறார்.
தான் பிறந்த பழங்குடி சமூகத்தில் தனக்கு முன்பு பிறந்திட்டு உலகாளும் ஈசனுக்கே கண்ணை தந்தருளிய, பக்தியின் உச்சத்தை சிவனின் திருவிளையாடலை உலகிற்கு நிகழ்த்தி காட்டிய கண்ணப்ப நாயனாரின் வம்சத்தில் பிறந்த வன துர்க்கையாக சக்தியின் அம்சமாக அவரின் வழியில் லிங்கத்தை வணங்குகீறார்.
தான் எத்தனை பெரிய பதவிக்கு வந்தாலும், எவ்வளவு பெரிய உயர்ந்த ஸ்தானத்தை அதிகாரத்தை அடைந்தாலும் கூட ,தான் பிறந்து வளர்ந்த பூர்வீகத்தை, தன் தாய் வீடான வனத்தையும் வாழ்வியலையும் ஒருபோதும் மறப்பதற்கும் விட்டுக் கொடுப்பதற்கும் இல்லை என்பதை சிவலிங்கத்தை அபிஷேகித்து இந்த மண்ணின் மகளாக அவர் தனது மாண்பை நிரூபித்து இருக்கிறார்.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் நாட்டையே காட்டிக் கொடுக்கும் நாசக்கார சக்திகளுக்கு துணை போகும், உயிரை துச்சமாக நினைத்து எல்லையை காக்கும் ராணுவ வீரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் உன் போன்ற தேச விரோதிகளுக்கு, தேசத்தின் முப்படைகளையும் கட்டிக் காக்கும் மூன்று தளபதிகளுக்கும், அவர்களின் தலைமை தளபதிக்கும் , பெரும் தலைமையாக இருந்து வழிநடத்தி ஆணை பிறப்பிக்கும் தேசத்தின் முதல் பாதுகாவலர் என்ற உயர்ந்த பாதுகாப்பு பீடத்தில் இருக்கும் அவர் துர்க்கையின் அம்சமாக பனிமலையில் எதிரிகளை பந்தாடிய இராணுவ வீரர்களின் நலன் காக்க அந்த மலையாக அமர்ந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யும் மகத்துவத்தை எப்படி உணர முடியும்?.
லிங்காபிஷேகம் மட்டுமல்ல ! அவசியமானால் தேசநலனுக்காக பிரார்த்தித்து தன் கைகளால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யவும் தயங்க மாட்டார். சிவனின் ஆலயத்திற்கு கங்கை தீர்த்தத்தை கொண்டு கும்பாபிஷேகம் கூட செய்து வைப்பார்.அவருக்கு அதற்கான அத்தனை அருகதையும் உண்டு. அதையும் நீ பார்த்து கதறத்தான் போகிறாய். உன் கதறலை நாங்கள் மனம் குளிர பார்க்க- கேட்கத்தான் போகிறோம்.
தேசத்தின் உச்சபட்ச பீடத்தில் அமர்ந்தாலும், ஆத்மார்த்தமான பக்தியும் தன் பழங்குடியின பண்பாடும் மாறாமல் சிவபூஜை செய்யும் எங்களின் பெருமைக்குரிய குடியரசுத் தலைவரும் நாங்கள் தாயாக வணங்கும் திரௌபதி முர்மூ அவர்களை வாழ்த்தி வணங்கும்
தேசியப் பணியில் !
May be an image of 3 people, beard and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...