Saturday, December 17, 2022

யார் தட்டிக்கேட்பது. மனசாட்சி இல்லாத நீதித்துறை.

 நீதியே உன் விலை என்ன ஆம் சாமானியனுக்கு இந்த தேசத்தை யார் ஆண்டாலும் நீதி கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாகும் நீதி வேண்டி எங்கள் குடும்பத்தார் ஒரு சாதாரண சக்சேஷன் வழக்கு ஒன்று 2014 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இன்றைய தேதி வரை திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையிலேயே உள்ளது ஆம் அந்த வழக்கின் எண் ஏழு பார் 2014 ஆகும் இந்த வழக்கில் எதிர்தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ள வங்கிகளின் வக்கீல்கள் நீதிமன்றத்தில் சரியாக ஆஜராகி தங்களுடைய வாதத்தை எடுத்துரைப்பதில்லை நீதிமன்றமும் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை காரணம் காட்டி இந்த வழக்கை எதிர் தரப்பினர் ஆஜராகவில்லை ஆகையால் இந்த வழக்கு ஒருதரை பட்சமாக முடிக்கப்படுகிறது என்று நீதியும் வழங்குவதில்லை ஆம் இதற்கு நம் நாட்டில் யார் ஆண்டாலும் ஒரு தீர்வு கிடைக்கப் போவதில்லை நீதிமன்றத்தை நாடுகின்ற மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் இல்லையென்றால் அதுவே அநீதிக்கு சமமாகும் இதில் நீதிமன்றங்கள் சரியான நீதிபதிகளில்லை என்கின்ற காரணத்தினாலேயே வழக்குகளை முடிப்பதில்லை மேலும் நீதிமன்றங்கள் ஒரு மருத்துவமனைக்கு சமமாகும் ஆனால் இந்த நீதிமன்றங்களுக்கு வருடம்தோறும் மாதக்கணக்கில் விடுமுறை விடப்படுகிறது நியாயமாக பார்த்தால் நீதிமன்றங்கள் மருத்துவமனை போல ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டும் ஒரு சில வழக்குகளில் நீதிமன்றம் நடு இரவிலும் பணி செய்கிறது ஆனால் அதே சாமானியனுக்கு நீதிமன்றம் இயங்க வேண்டிய நேரத்தில் கூட இயங்க மாட்டேன் என்கிறது இது என்ன நீதி இந்த வழக்கை என்னுடைய புலம்பலை கேட்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் எவரேனும் ஒருவர் சுயமோட்டாக எடுத்துக் கூட ஒரே நாளில் தீர்ப்பளிக்க முடியும் நான் ஒன்று நினைத்திருந்தேன் நமது தேசத்திலே பெரிய அரசியல் மாற்றம் நடந்து விட்டது ஆகையினால் ஒவ்வொரு அடிப்படையான விஷயங்களிலும் இந்த தேசத்தில் மாற்றம் ஏற்படும் என்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த தேசம் பிரிட்டிஷாரின் விடுதலைக்கு விடுதலையின் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கிறது எந்த மாற்றமும் இல்லை எனக்கு சுமார் ஒரு 27 வயது இருக்கும் பொழுது நான் ஒரு வக்கீலை அணுகி எனக்கு வரவேண்டிய பணத்திற்காக ஒரு வழக்கு போட வேண்டும் என்று சொன்னேன் அதற்கு அந்த வக்கீல் ஒரு பழமொழி ஒன்று சொன்னார் அந்த பழமொழி தான் இன்று எனக்கு நினைவிற்கு வருகிறது ஆம் எ பேடு காம்பரமைஸ் இஸ் பெட்டர் தன் குட் ஜட்ஜ்மெண்ட் பார்ப்போம் ஒரு வேளை நான் சொல்கின்ற இந்த தகவல் இந்த பத்திரிகையின் மூலமாக எவரேனும் ஒரு நீதிபதியின் கண்ணில் பட்டு எங்களுக்கு ஒரு நீதி விரைவில் கிடைக்குமானால் இந்த தேசத்திலும் நீதிமான்கள் வாழ்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...