Sunday, December 18, 2022

*கண்ணே, MONEYயே!*

 சமீபத்தில் ஒரு தினம் காப்பியை ஆற்றுவதற்காக ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளரில் ஊற்றினேன்.

நான் மிகச் சரியா ஊற்றுவதாக நினைத்துக் கொண்டாலும்,
அது எப்படியோ மற்ற டம்ளரில் ஒரு சொட்டுக்கூட விழாமல்,
டைனிங் டேபிள்மீதே விழுந்தது..
மேஜையின் மேடு பள்ளத்துக்குத் தகுந்த மாதிரி ஓடி கீழே சொட சொட வெனக் கொட்டிவிட்டது.
மனைவி தற்செயலாக சமையலறையிலிருந்து வெளியே வந்தவள், துடித்துப் போய்விட்டாள்.
"காப்பி நன்றாயில்லையென்றால் என் தலையில் கொட்டறதுதானே, ஏன் தரையில் கொட்டறீங்க?" என்று கூவினாள்.
எனக்கு மனைவி மீதோ தரை மீதோ எந்தக் கோபமும் இல்லை
ஆகவே கோளாறு வேறு எங்கோதான் என்று நான் நினைத்த மாதிரியே மனைவியும் நினைத்து,
"உங்களுக்கு வரவரக் கண்ணே தெரியறது இல்லை.
அன்றைக்கு கட்டைப் பைக்குள் பர்ஸைத் தேடச் சொன்னேன்.
நீங்கள் தேடிவிட்டு இல்லையென்று சொல்லிவிட்டீர்கள். நான் துடித்துப் போய்விட்டேன்.
கடைசியில் பார்த்தால் அதிலேயே இருந்தது.
"முந்தா நாள் வேலைக்காரி வாசலோடு போனவளைக் கூப்பிடுங்கள் என்கிறேன்.உங்களுக்குக் கண்ணே தெரியலை.
அவள் மேற்கே போய்க் கொண்டிருந்தாள் நீங்கள் கிழக்கே போய்
யாரையோ கை தட்டிக் கூப்பிடுகிறீர்கள்."
"சரி.
அடுக்கினது போதும்.
நான் காடராக்ட் ஆபரேஷன் பண்ணிக்கணும்.
அவ்வளவுதானே!" "சொல்லிச் சொல்லி சலிச்சுப் போயாச்சு.
தினமும் காப்பி கொட்டுகிற உற்சவம் நடந்துகொண்டிருக்கிறது.
பொறுப்பே இல்லாமல் இருக்கீங்களே.
காப்பிப் பொடி, சர்க்கரை, பால் இதெல்லாம் விற்கிற விலையில்...
காஸ் விலையும் கன்னா பின்னான்னு ஏறியாச்சு....நீங்க எதைப் பற்றியாவது எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?"
"இங்கே பாரு! நான் துளிக் காப்பியை கொட்டினதாலே பொறுப்பே இல்லாதவன் என்றெல்லாம் பெரீய பெரீய வார்த்தையைச் சொல்லாதே. உன் பி.பி.யை ஏத்திக்காதே.
ரிலாக்ஸ்.
ரிலாக்ஸ்.
நான் உனக்குப் புரியும்படி சொல்றேன்."
"வேலை இருக்கு தலைக்கு மேலே."
"தலையே போனாலும் போகட்டும்.
நீ சில விஷயத்தைத் தெரிந்துகொண்டாகணும்."
"சொல்லித் தொலையுங்க."
"நான் பொறுப்பற்றவன்னு சொன்னதை முதல்லே வாபஸ் வாங்கு."
"ஏன் வாபஸ் வாங்கணும். ஓட்டலிலே ஒரு காப்பி எட்டு ரூபாய்!
"நீ வீட்டுக் காப்பி விலையைச் சொல்லு.
"ரெண்டு ரூபா வெச்சுக்குங்க.
"நான் இன்னிக்கி முழுக் காப்பியையும் கொட்டிட்டேனா,
பாதி டம்ளர் காப்பியைக் கொட்டினேனா?
"பாதி இருக்கும் .அதுக்குள்ளேதான் நான் ஓடி வந்து குரல் கொடுத்துட்டேன்.
"நம் வீட்டுக் காப்பி பாதி கப் என்ன விலை?"
"ஊம். ஒரு ரூபா வெச்சுக்குங்க."
"ஒரு நாளைக்கு நீ எத்தனை வேளை காப்பி தர்ரே?"
"ரெண்டு வேளை.
"பூராக் காப்பியையுமே ரெண்டு வேளையும் நான் கொட்டினால்கூட ரெண்டு ரூபாய்தான் நஷ்டம்.
"சரி. ...
"ஒரு நாளைக்கு ரெண்டு ரூபான்னா மாசம் அறுபது ரூபாய்.
வருஷத்துக்கு எழுநூற்று இருபது ரூபாய்."
"சரி. சரி.
"வருஷம் எழுநூற்று இருபதுன்னா..நான் இன்னும் ஒரு
இருபது வருஷம் உயிரோடிருக்கிறதா எடுத்துக் கொண்டால்கூட
14,400 ரூபாய் ஏறக்குறைய
15,000 ரூபாய் செலவாகும்.
"தினமுமே கொட்டறதாகவே வெச்சுக்க என் ஆயுளில்
காப்பி கொட்டிய வகையிலே பதினையாயிரம் செலவு."
"செலவு செலவுதானே.
"உனக்குத்தான் புரியலை நான் காப்பி கொட்டாதிருக்கணும்னா காடராக்ட் ஆபரேஷன் பண்ணிக்குங்கன்னு சொல்றயே.
அதுக்கு என்ன செலவாகும் தெரியுமோ?
*நல்ல நர்ஸிங் ஹோமிலே போய்ப் பண்ணிக்கறதுன்னா இருபத்தையாயிரம் ரூபாய்.*
*அதுவும் ஒரு கண்ணுக்கு. ரெண்டு கண்ணுக்கும் ஐம்பதாயிரம் ரூபா."*
"அவ்வளவா ஆகும்?"
"ஆமாம். நமக்கு இப்ப ஏகச் செலவெல்லாம் இருக்கு.
உன் ரூமில் உனக்குன்னு ஒரு டி.வி. வாங்கி வைக்கணும்னு இருக்கேன்.
*அதுக்கு ஒரு இருபதாயிரம்.*
உனக்கு ஒரு நல்ல ஸெல்போன் வாங்கணும்னு இருக்கேன்.
*அது ஒரு பத்தாயிரம்*
உன் வளையல் ரொம்ப த்ராபையாயிருக்கு - அழிச்சிட்டு ரெண்டு பவுன் சேர்த்து கொஞ்சம் திடமானதாய் பண்ணணும்னு இருக்கேன்.
*அது ஒரு ஐம்பதாயிரமாகும்."*
"நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் - ஏகச் செலவு இருக்கு.
நான்தான் யோசிக்காம உங்களைத் திட்டிட்டேன்.
எனக்கே இப்பத்தான் தோணறது.
உங்களுக்கு ஒண்ணும் *இப்போ காடராக்ட் ஆபரேஷன் தேவையில்லை.*
*ஏதோ கை தவறி காப்பி கொட்டிட்டேள்!*
அவ்வளவுதான்!"```
(இந்த பதிவில் உள்ள காபி விலையை இன்றைய காபி விலைக்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பதிவில் உள்ள யதார்த்தத்தை அலசுங்கள்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...