Thursday, December 15, 2022

ரொம்ப நாளைக்கு ஒங்க வண்டி ஓடாது பாத்துக்க.. சனங்க புத்தி சாலிகளாக்கும்.

 கபாலி - டேய்! கணேசா... செத்த இங்கே வாடா...!

கணேசன் - சொல்லு கபாலியண்ணே.. நல்லாயிருக்கியா.. வீட்டில மயினி புள்ளையளுக எல்லாம் நல்லாயிருக்குதாவுளா.
கபாலி - நல்லாயிருக்குதாவுடேய் எல்லோரும்..
ஓங்கிட்ட ஒண்ணு கேக்கணும்.. அதான் கூப்பிட்டேன்.
கணேசன்- நீங்க கேளுங்க சீக்கிரமா..
ஆயிரத்தெட்டு ஜோலி கெடக்கு .. சீக்கிரமா போணும்..
கபாலி - அட கருமாண்டி.. அவ்ளோ பெரிய இவனாயிட்டியா..ஏலேய்! நீ காண்டிராக்ட் எடுத்து கடற்கரையில போட்ட மரப்பாலத்தை பத்தி ஊரே கழுவி ஊத்துதே..அத பத்தி கேக்க தான் கூப்பிட்டேன்.
கணேசன் -. நான் என்னண்ணே பண்ணட்டும்.. ரெண்டு கோடி ரூவா காண்டிராக்ட்ன்னு எடுத்தேன்.
நேயர் பங்குன்னு அந்த பாப்பா ஒரு 20 பர்செண்டு கொடுத்த பின் தான் காண்டிராக்டே ஒதுக்கிச்சு.
அந்த தாடி வைச்ச ஆணையர் பகவான் சிங் கேடி பத்து பெர்சண்டேஜ் எடுத்துட்டான்.
சொடல பங்குன்னு பத்து பர்செண்ட் கொடுத்தேன். உள்ளூர் கவுன்சிலர்ன்னு பத்து பர்செண்ட் போயிடுச்சு..
மெட்ராஸ் காண்டிராக்டுன்னாலே பாம்பு பாபுவுக்கும் , மோ. சிப்பிரமணிக்கும் பங்கு கொடுக்கணுமாம்..
கபாலி - அட .. பேரிக்கா தலையா.. எழுவது பர்செண்ட் இவனுளுக்கே போயிடுதேடா..
கணேசன் - எனக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு டிங்கோல்பியும் இருக்கு. காண்டிராக்டில் பத்து பர்செண்ட் லாபம் பாத்தா தான் நான் பொழக்க முடியும்.
கபாலி - அட ஆமால்ல.... நீயும் இத வைச்சு தானே பொழக்கணும்..
இப்படி கமிஷன் கொடுத்தா கம்பி கட்டி பாலம் போடுறதுக்கு பதில் கட்டைய வைச்சு தானே பாலம் போட முடியும்.
கணேசன் - அது தாமுண்ணே கட்டையை வைச்சு பாலத்தை போட்டேன்.
கபாலி - என்ன கட்டைய வைச்சு கோமுட்டி தலையா பாலத்தை போட்ட.. செம கட்டை ஒண்ணு அந்த பாலத்துல நடந்தாலே பாலம் தாங்காதே.
மாற்று திறனாளி நடக்குற பாலம் என நெனைச்சு அந்த பாலத்துல ஒரு கால் சரியில்லாதவன் நடந்து கீழே விழுந்து ரெண்டு காலையும் இழந்து போயிட கூடாதுன்னு கடவுளே புயல் வடிவத்துல வந்து எடுத்துட்டான்.
பானிப்பூரி கடைக்காரனோட வண்டியெல்லாம் அசையாமல் நின்னிருக்குது ..நீங்க போட்ட பாலம் மட்டும் ஒடஞ்சி போயிருக்குதுன்னா நீங்க போட்ட திராவிஷ பாலத்தோட பலம்...மம்ம்ம்.. பிரமாதம் டேய்..
கணேசன் - அட விடுங்கண்ணே.. பொது சனம் இதை பத்தி கேக்க கூடாதுன்னு தான் நேயர் பாப்பாவை காருல தொங்க வைச்சு கூட்டுட்டி போனாரு பெரிய பகவதி.
இப்போ பாருங்க இந்த முட்டா சனம் பாலம் மேட்டரை மறந்து பாப்பா போட்ட தாப்பாள் அய்யய்யோ. சாரிண்ணே!! படிக்கட்டில் பாப்பா ன்னு பொங்குறானுக..
கபாலி - நீங்க பொழக்க தெரிஞ்சவனுக டேய்.. ஒரு விசயத்த மறைக்க ஒரு வெசயத்த கெளப்பி வுடுறனுவக நீங்க...
அது சரி. காருக்குள் ஏண்டா அனுமதி கொடுக்கலன்னு நாங்க கேட்டா நம்மை கர்ப்பகிரகத்துக்குள் அனுமதித்ததா ஆரிய சமுவம், பேரிய சமுவம் ன்னு ஊருக்குள்ள கலவரத்த இழுத்து விடுவியே.. தள்ளி போடா கருமாண்டி..
ஏலேய்.. ஒண்ணு சொல்லுதேன் கேட்டுக்கோ.. ரொம்ப நாளைக்கு ஒங்க வண்டி ஓடாது பாத்துக்க.. சனங்க புத்தி சாலிகளாக்கும்.
கணேசன் - அட போங்கண்ணே.. எல்லோருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவோமுன்னு தேர்தல் அறிக்கை விட்டா போதும்.. தமிழ்நாட்டு பரப்பளவு தெரியாம ஓட்டு போடுற கூமுட்டை பயலுக இவனுக.. நாங்க ஏமாத்தியே ஆச்சிய புடிச்சுடுவோமுண்ணேய்..
கபாலி - ஓங்கிட்ட பேசுனா பிபி கீப்பி எல்லாம் ஏறிடும் நான் கெளம்புதேன்....
என சொல்லி விட்டு தன்னுடைய கீப்பு பாகம்பிரியாள் கீது வீட்டை நோக்கி நடக்க துவங்கினார் கபாலி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...