Sunday, December 18, 2022

" தரங்கம்பாடி ".

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையோரமாக அமைந்துள்ளது, தரங்கம்பாடி என்ற ஊர்.

இங்கு பழம்பெருமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் சுந்தரரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும்.
கடல் அலைகள் இசைபாடுவதுபோல் அமைந்த இடம் என்பதால் ‘தரங்கம்பாடி’ என்ற பெயர் வந்தது.
இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது. கடல் அலைகள் கோவிலுக்கு நெருக்கமாக வந்து செல்லும். இந்த ஆலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காண முடியாத அண்ணல் (லிங்கோத்பவர்) ஆக உள்ளனர். விநாயகருக்கும் சன்னிதி உள்ளது.
இந்த ஆலயத்தின் கருவறை தற்போது பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. ஆலயத்தின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்த கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது.
மூலவரை மாசிலாமணீசுவரர் என்றும், மாசிலாநாதர் என்றும் கூறுகின்றனர்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக கோவில் அமைக்கப்பட்டது.மூலவருக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் அம்பாள் வீற்றிருக்கிறார். ஆலய பிரகாரத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. சந்திரன், சூாியன், பைரவர் திருமேனிகளும் காணப்படுகின்றன.
May be an image of outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...