Saturday, December 17, 2022

சொந்தமாக ஆட்டோ வாங்கி உழைப்பின் முழு பயனையும் இறைவன் தந்து அருள் புரிவார்.

 இன்று ஆட்டோவிற்காக கைகாட்டியபோது எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வந்து நின்ற ஆட்டோவினுள் புன்னகையுடன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லிம் பெண். திருவல்லிக்கேணி பெரியபள்ளிவாசல் அருகே செல்ல வேண்டும் என்றவுடன், சென்னை ஆட்டோ ட்ரைவர்களுக்கே உரிய பேரம் பேசுதல் இல்லாமல், தலையசைத்து உடனே ஏற்றிக்கொண்டார். ஆச்சரியத்திலிருந்து விடுபட்டு அவரோடு பேச ஆரம்பித்தேன்.

வியாசர்பாடியைச் சார்ந்த, மூன்று குழந்தைகளுக்கு தாயான பியாரி பாத்திமா ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தது கடந்த 6 மாதங்களாகத்தான். ஆட்டோ ட்ரைவரான கணவரிடம் கற்றுக் கொண்டவர் ரோட்டரி கிளப் உதவியுடன் முறைப்படி கற்று லைசன்ஸ் வாங்கி இப்பொழுது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். ஒரு நாள் ஆட்டோவிற்கான வாடகை 200 ரூபாய். காலையில் 10 மணிக்கு சவாரி ஆரம்பித்து இரவு 8.30 வரை ஓட்டுவராம். செலவு போக குறைந்தது 500 ரூபாய் அன்றாடம் கிடைக்கும் என்கிறார்.
கணவர் திருப்பூரில் வேன் டிரைவராக பணியில். சென்னை தெருக்களில் ஆட்டோ ஓட்டுவது, எந்த பிரச்சனைகளுமின்றி திருப்திகரமாக உள்ளது என்கிறார். யாரையும் அண்டி வாழ வேண்டியதில்லை. அதுவே மகிழ்ச்சி என்கிறார்.
இந்த சாதனைப் பெண்மணிக்கொரு வாழ்த்து சொல்லுவோம்.
May be an image of ‎1 person and ‎text that says "‎MASHA ALLAH வா கை TN. 03 TN03 O 8782 28782 AلA G NE 2019‎"‎‎

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...