ஓர் இளம் தம்பதிக்குள் சிறு வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், "தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, December 15, 2022
இதெல்லாம் சொல்லணும்.
"ஒண்ணுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடீஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு..."
முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒண்ணாவே ஊர்லே எல்லா புண்ணிய ஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா சர்க்கரை, ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான்தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையா உணர்றேன். என் பகல்கள் ரொம்ப நீளமாகிடுச்சு, இரவுகள் ரொம்பவே வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்க கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க மொபைல் நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...
முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்...
சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒண்ணா போக அவங்க இல்லை...'' என்றார் விழியோரம் நீர் தேங்க...
சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே தொடர்கிறார்...
''அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வரேன்...''
புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இருமல், தும்மல் வந்தால் கூட, I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும், எவ்வளவு மரியாதை தருகிறோம்?
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவிகிதம் 'இல்லை'தான்.
மனைவி ஆசையாகச் சமைத்துப் பரிமாறுவதை பிரமாதம்னு கணவன் பாராட்டுறதுமில்லை, அசதியா வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, 'ரொம்ப வேலையா? காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்'னு மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment