Monday, February 28, 2022

மரணம் ஒரு ஆனந்தம்

 

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,
🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,
🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.
🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடணும்,
🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?
🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....

'மனைவியிடம் அடங்கி போவது எப்படி ?'

 புது மாப்பிள்ளை......

மூன்று மகள்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனார். சில மாதங்கள் கழித்து தனது கடைசி மகளை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளார்.
புதுமருமகனிடம் பேசிட்டு இருக்கும்போது.......
"மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம் .. You are great... !"
"ஆமாம் மாப்பிள்ள.... சந்தோஷமா..... நிம்மதியா இருக்கேன்.. "
"ஒரே ஒரு சின்னக் குறைதான் மாமா.. "
"என்னது..?"
"பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்."
"அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளய தேடி இருக்கனும்..... நீங்க கிடைச்சிருப்பீங்களா ?! எனக்கு.. பெரிய வேலையாப் போயிருக்கும்ல !!!"
உர்ர்ர்..னு ஆன
புதுமாப்பிள்ளை - யிடம்......
"ஆமா மாப்பிள 'மனைவியை அடக்கி ஆள்வது எப்படி ?' னு
புக் எழுதுனீங்களே என்னாச்சு ?"
"அதுவா மாமா......ஒங்க மகளிடம் வாங்கிய அடிக்கு பிறகு...
'மனைவியிடம் அடங்கி
போவது எப்படி ?' னு மாத்தி எழுதிகிட்டு இருக்கேன்."
May be an image of 2 people, people standing, outdoors and text

ஆந்திராவில் இருந்து உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களுக்கு ஒரு நல்ல செய்தி.

 "இனி திருமலையில் உணவு விற்பனைக்கல்ல..."- தனியார் ஹோட்டல்களை மூட திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

அதற்கு பதிலாக தேவஸ்தானம் மூலம் திருமலையில் பல்வேறு இடங்களில் அன்னபிரசாதத்தை விநியோகிக்கச் சிறுகடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி திருப்பதியில் உணவு, விற்பனைப் பொருளாக இருக்காது என்றும் அனைவருக்கும் உரிமையானதாக விளங்கும்.
திருமலை திருப்பதியின் ‘உணவு விற்பனைக்கல்ல’ என்னும் இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பினைத் தெரிவித்து வருகிறார்கள். 🌹🌹

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!

 மருத்துவம், வாழ்க்கைமுறை

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.
மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!
இதையும் படிங்க: நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க…
இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை #1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
உண்மை #3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.
உண்மை #4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.
உண்மை #5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,
வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து
மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.
பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.
சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.
நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை #6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை #8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை #9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை #10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.
உண்மை #11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை #12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.
உண்மை #14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.
உண்மை #15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.
May be an image of 1 person, child, standing and sky

மரியாதைக்குரியவர்கள் பெண்கள்:

 

♥எபிடியூரல் சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும், ஆனால் சில தாய்மார்களுக்கு
தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,
♥அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்கியது ..
♥தினமும் வலியில், அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..
♥தாய் என்ற பெண்ணை தவிர ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது...
ஆடையற்ற உடலை உணர்வின் வலியோடு பார்க்கும் போது காமம் என்பது காணாமல் போகிறது
அப்படிபட்ட பெண்மையை மதிக்காவிட்டாலும் கேவலபடுத்தாதீர்கள்...!!

Sunday, February 27, 2022

ஜாலியா போயிருவீங்க!!

 Laughing therapy

😂😂😂
Just for Fun.
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு, இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க
விஷயத்தை மனைவியிடம்
பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும்
மூணு மணி நேரம் தான் இருக்கு.
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்ததும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும்.
சுடுகாட்ல புக் பண்ணனும்.
உங்களுக்கென்ன காலைல
எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.
ஜாலியா போயிருவீங்க!!
கணவன்: 😭😭

செல்வம் குறைவதின் அறிகுறிகள்.

 1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒட்டறைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது..!🙏🕉️🙏

உடுமலை நகர்மன்ற தலைவர் பதவி யாருக்கு? முட்டிமோதும் இரண்டு முக்கிய பிரமுகர்கள்!

 திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுகவில் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் முட்டிமோதி வருவதால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுகவின் முன்னாள் பொருளாளர் மறைந்த எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவின் தம்பி மகனான மத்தீன் என்பவரும், உடுமலை நகர முன்னாள் திமுக செயலாளர் வேலுச்சாமி என்பவரும் நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர்.
இதில் பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவை பெற்றதால் மத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
.
.
உடுமலை நகராட்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் திமுக தனிப்பெரும்பான்மயுடன் 24 வார்டுகளில் அமோக வெற்றிபெற்றிருக்கிறது. இந்நிலையில் 15-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள உடுமலை நகர திமுக செயலாளர் மத்தீன், நகராட்சி சேர்மன் பதவிக்கான ரேஸில் முந்துகிறார். திமுகவின் பொருளாளராக இருந்த அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவின் தம்பி மகன் என்பது மத்தீனுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
நகராட்சி தலைவர்
இதனிடையே உடுமலை நகர முன்னாள் திமுக செயலாளரான வேலுச்சாமியும் நகராட்சி தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். இவர் ஏற்கனவே பல பதவிகளில் இருந்த காரணத்தால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் சென்னையில் முகாமிட்டு கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மூலம் பதவியை கைப்பற்றுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்.
கவுன்சிலர்கள் ஆதரவு
உடுமலைப்பேட்டை நகராட்சியில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள் 24 பேரில் பெரும்பாலானோர் மத்தீனுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதால் மறைமுகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
எஸ்.ஜே.சாதிக்பாட்ஷா
மறைந்த எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவுக்காக உடுமலை நகராட்சி சேர்மன் பதவியை அவரது தம்பி மகனுக்கு கொடுக்க வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கருணாநிதி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் திமுகவில் பொருளாளர் பதவியை வகித்தவர் சாதிக்பாட்ஷா என்பது திரும்பிப்பார்க்கத் தக்கது.

அரிதாரத் தமிழனுக்கும் அல்லாத தமிழனுக்குமான வேறுபாடு.

 திராவிட இயக்கங்களால் தமிழ் வளர்ந்துள்ளதா? ஆம் எனில் நம் முதல்வரால் ஏன் ஒரு பழமொழியை (பூனை மேல் மதில்) கூட சரியாக சொல்ல வரவில்லை?

ஹாஹா , நல்ல நகைச்சுவை கேள்வி. தெலுங்கர்கள் வந்து வளர்க்கும் அளவிற்கா தமிழ் கீழே கிடந்தது? எப்படி தமிழ் வளர்த்த தமிழர்களை புறம் தள்ளி , தமிழை தவறாக புரிந்துக் கொண்ட கால்டுவெலையும் , வன்மம் மிகுந்த கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கியும் , திருக்குறளை இழித்த ஈவே.ராமசாமியையும் எவ்விதம் வளர்த்ததாக வதந்தி வேண்டுமானால் பரப்பலாம் அது உண்மையாகாது.
இன்று நாம் உலக அரங்கில் தமிழ் மொழி தான் உலகின் பழமையானது என்று நிருபிக்க காரணமே ஒரு சில தமிழர்கள் தங்கள் வாழ்வையே அர்பணித்து ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சில் ஏற்றியது தான் காரணம் . இந்த வேலையை எந்த திராவிடரும் செய்ய வில்லை.
தமிழ் நூல்களை வெளிநாட்டவர்கள் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதை தடுக்க நினைக்க வள்ளல் பாண்டித்துரை தேவர். தமிழ் நூல்களை தாமே அச்சிலேற்ற முடிவு செய்தார் . ஒருசமயம் ஆய்வுக் கட்டுரைக்காக பாண்டித்துரைதேவர் திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை பெற முயற்சித்தபோது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளிலிருந்தும் கூட இந்நூல்களை பெற முடியவில்லை. இந்த நிலையை மாற்ற இவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்டார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், பாண்டித்துரைத் தேவரின் தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழகம் , ஈழத்திலிருந்து ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றனர். அதனால் நிறைய தகவல்கள் கிடைக்க ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரியநூல்களை அச்சிலேற்றினார்.
. தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு, சிச்சமவாதவுரை மறுப்பு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது. சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பெரும் பொருளுதவி செய்தார். உ.வே சாமிநாதய்யர் சேகரித்த மணிமேகலை , புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றை அச்சிலேற்றினார். இவரின் நான்காம் தமிழ் சங்கமே அறிஞர்களை ஒன்றினைத்து ஊக்கப்படுத்தி தமிழை வளர்த்துள்ளது.
உ.வே.சாமிநாதய்யர் தமிழ்ப் பணி மிகவும் பெரியது. திராவிடப் படையெடுப்பில் தமிழர்களிடம் மூட நம்பிக்கைகள் திணிக்கப்பட திராவிடரோடு சேர்ந்து ஓலைச்சுவடிகளை ஆடிப் பெருக்கில் ஆற்றில் விட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலைக் கண்டு பெரிதும் வேதனையுற்ற உ.வே.சா ஊர் ஊராக திரிந்து ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சிலேற்றினார் . உ.வேசாவிற்கு பொருளாதாரம் இல்லாததால் மற்றவர்களின் உதவியை பெற்று அச்சிலேற்றினார். ஐம்பெருங்காப்பியம் , சங்க இலக்கியம் , புராணங்கள் , சிற்றிலக்கியம் என 90 நூல்களுக்கு மேல் அச்சிலேற்றியுள்ளார். மேலும் 3000 ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்தார். நாம் படித்த பல நூல்கள் உ.வே.சாவின் கொடை .
ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணிகள்
சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர். 20 நூல்களை எழுதியுள்ள இவர் , 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். எழுதியது , அச்சிலேற்றியது மட்டுமல்லாது இலவசப் பள்ளிகளை கட்டி மாணவர்களுக்கு பயிற்றும் வித்தவர்.
தமிழ்வேள் உமாமகேஸ்வர பிள்ளை கரந்தையில் தமிழ் சங்கம் நிறுவி தமிழ்பணி ஆற்றினார். தமிழ்பல்கலைக்கழகத்தின் விதையை இவர் தூவினார். யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார் . இன்று தமிழில் வடமொழி சொற்களை தவிர்த்ததற்கு காரணமும் இவர் தான். ரகுநாத ராஜாளியார் வீரசோழியம் , தொல்காப்பியம் , நற்றிணை , புறநானூறு ஆகிய ஓலைச்சுவடிகளை உ.வே.சாவிற்கு கொடுத்து அச்சிலேற்றினார். தமிழ் இலக்கண நூல்கள் அனைத்தும் ரகுநாத ராஜாளியார் கொடுத்தது. "தொல்காப்பியம் ராஜாளியார் வீட்டு சொத்து என்று இன்றும் கூறுவார்கள்". ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதினெண் கீழ்கணக்கு , காப்பியங்களுக்கு உரை எழுதி வெளியிட்டார்.
காஞ்சி ராமசாமியார் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை , வேதநாயகம் பிள்ளை , பம்மல் விஜயரங்கனார் , பூண்டி அரங்கநாத முதலியார் , பொன்னம்பலம் அருணாச்சலனார் , பின்னத்தூர் நாராயணசாமி , திரு.வி.க , சுப்ரமணிய பாரதியார் , சோமசுந்தர பாரதியார் ,திருவரங்க நீலாம்பிகை , ஈ.த.ராஜேஸ்வரி இன்னும் பலர் பட்டியல் மிகப்பெரியது . இதில் திருவாடுதுறை ஆதினம் , மன்னர் பாஸ்கர சேதுபதியும் மிகப் பெரிய ஆதரவளித்து ஊன்று கோலாய் இருந்தனர். மேற்கூறிய அனைவரும் பச்சைத் தமிழர்கள் . அவர்களை திராவிடர்கள் என்று இழிவுபடுத்துவது பெருந்தவறு.


*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...