Saturday, February 12, 2022

_தினம் ஒரு திருத்தலம்... பிள்ளை பாக்கியம் தரும் ருத்ராபிஷேகம்... முருகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை...!!_

 *அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்...!!*

🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙏 ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைமலை என்னும் ஊரில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🙏 ஈரோட்டிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் பச்சைமலை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டேக்சி வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🙏 பழநி திருத்தலத்தைப் போன்று, இங்கும் மேற்கு நோக்கி அருள்கிறார் சண்முகக் கடவுள்.
🙏 மூலவரின் திருநாமம் சண்முகநாத ஸ்வாமி. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார்.
🙏 இங்குள்ள மூலவரான முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
வேறென்ன சிறப்பு?
🙏 இங்கேயுள்ள வித்யா கணபதியும் விசேஷமானவர். இவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, தோப்புக்கரணமிட்டு வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம்.
🙏 மரகதவல்லி சமேத மரகதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத மரகத வேங்கடேச பெருமாள் ஆகியோர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.
🙏 வித்யா கணபதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், மனைவியர் சமேதராக நவகிரகங்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🙏 கந்த சஷ்டி, தைப்பூசம், காவடி எடுத்தல், திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
🙏 பத்து நாள் விழாவாக பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🙏 கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெறவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🙏 வேண்டுதல்கள் நிறைவேறியதும் இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றியும், ருத்ராபிஷேகம் செய்தும், பன்னீரால் அபிஷேகம் செய்தும், பச்சை நிற வஸ்திரம் சாற்றியும், சிறப்பு அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...