Sunday, February 13, 2022

தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும்.

 பெண்ணுக்கு பெண்ணே எதிரி எந்த ஆணும் விதவைகளை எதுவும் சொல்ல மாட்டார்கள் அறிந்து.விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனம் இல்லை அந்தக் காலத்தில், இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது.

அதிலும், திருமணமான ஆண், வயதில் மூத்தவராக குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பூ, பொட்டு, வளையல், வண்ண உடைகள் எதுவுமே அணியாமல் வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய கட்டுப்பாடு இருந்தது.
திருமணமான தம்பதிகளோ, அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால், இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும்.
அது ஏதோவொரு வகையில், இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் புதிதாக திருமணம் செய்த பெண் பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம்.
அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து விதவைப்பெண் எதிரே செல்லக் கூடாது என முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தைக் கொண்டு வந்தனர்.
இது வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமே, அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது.
இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லை, அவசியமும் இல்லை. காலம் மாறிவிட்டது விதவைகளும் பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்று நமது சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக்கொண்டு விட்டது உண்மைதான் ஆணுக்கு மனைவி இறந்துவிட்டால் தோற்றத்தில் ஒரு மாற்றமும் கிடையாது ஆனால் பெண்ணுக்கு இந்த சமுதாயம் உணர்ந்தே விட்டது
விதவைப் பெண்களை மதிப்போம் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...