Saturday, February 19, 2022

பருப்புப்பொடி செய்வது எப்படி?

 சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட சுவை அசத்தலாக இருக்கும். இன்று இந்த பருப்புப்பொடி செய்முறையை பார்க்கலாம்.

பருப்புப்பொடி செய்வது எப்படி?
பருப்புப்பொடி


















தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 4,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.

மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...