Thursday, February 24, 2022

நான் வணங்கும் இரும்பு பெண்மணியின் பிறந்த நாளில் வணங்குகிறேன் 🙏🙏.

 பணத்தையும் பாசத்தையும் இறுக பிடித்தாலும் இலகுவாக விலகத்தான் செய்கிறது.

நம் எல்லோருமே இங்கு கண்ணாடி மாதிரி தான். அன்பாக சந்தோசமாக கோபமாக வெறுப்பாக சிரிப்பாக எப்படிப் பார்க்கிறார்களோ, அப்படியே தெரிவோம்.
இது இருந்தால் நல்லா இருக்கும் என்பது ஆசை. அதுவும் இருந்தால் நல்லா இருக்கும் என்பது பேராசை.
பாசம் பலவீனமான ஆயுதம். ஆனால் பலமாக காயம் தந்துவிடும்.
பனித்துளி அளவு துரோகம் போதும். கடலளவு கண்ணீருக்கு.
பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும் பிடித்தவருக்காக வாழ்ந்திடுங்கள். பிடிக்காத வாழ்க்கையும் பிடித்துவிடும்.
நம்மை சுமக்கும் நால் வரை எதிர்பாக்கும் நாள் வரை வாழ்வதே வாழ்க்கை.
எப்படிப் பழக வேண்டும் என்பதை விட எந்த அளவுக்குப் பழக வேண்டும் என்பது தான். உறவுகளில் முக்கியமானது.
தேடிக் களைத்து கண்டு பிடிக்க முடியாமல் கைவிட்ட ஒன்று தானாகக் கண்ணில் படும் போதுதான் தேடாமலே கைவிட்ட ஒன்று ஞாபகம் வருகிறது.
தோல்விக்கு நிரந்தர நரகம் இல்லை. வெற்றிக்கு நிரந்தர சொர்க்கமும் இல்லை. அனைத்தும் மன மாயை.*
*விடை தேடிய பயணம் தான் வாழ்க்கை. சிலருக்கு விடை தெரியவில்லை. பலருக்கு வினாவே புரியவில்லை.
வியந்து போன வரிகள்
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல.
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...