Sunday, February 27, 2022

அரிதாரத் தமிழனுக்கும் அல்லாத தமிழனுக்குமான வேறுபாடு.

 திராவிட இயக்கங்களால் தமிழ் வளர்ந்துள்ளதா? ஆம் எனில் நம் முதல்வரால் ஏன் ஒரு பழமொழியை (பூனை மேல் மதில்) கூட சரியாக சொல்ல வரவில்லை?

ஹாஹா , நல்ல நகைச்சுவை கேள்வி. தெலுங்கர்கள் வந்து வளர்க்கும் அளவிற்கா தமிழ் கீழே கிடந்தது? எப்படி தமிழ் வளர்த்த தமிழர்களை புறம் தள்ளி , தமிழை தவறாக புரிந்துக் கொண்ட கால்டுவெலையும் , வன்மம் மிகுந்த கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கியும் , திருக்குறளை இழித்த ஈவே.ராமசாமியையும் எவ்விதம் வளர்த்ததாக வதந்தி வேண்டுமானால் பரப்பலாம் அது உண்மையாகாது.
இன்று நாம் உலக அரங்கில் தமிழ் மொழி தான் உலகின் பழமையானது என்று நிருபிக்க காரணமே ஒரு சில தமிழர்கள் தங்கள் வாழ்வையே அர்பணித்து ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சில் ஏற்றியது தான் காரணம் . இந்த வேலையை எந்த திராவிடரும் செய்ய வில்லை.
தமிழ் நூல்களை வெளிநாட்டவர்கள் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதை தடுக்க நினைக்க வள்ளல் பாண்டித்துரை தேவர். தமிழ் நூல்களை தாமே அச்சிலேற்ற முடிவு செய்தார் . ஒருசமயம் ஆய்வுக் கட்டுரைக்காக பாண்டித்துரைதேவர் திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை பெற முயற்சித்தபோது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளிலிருந்தும் கூட இந்நூல்களை பெற முடியவில்லை. இந்த நிலையை மாற்ற இவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்டார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், பாண்டித்துரைத் தேவரின் தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழகம் , ஈழத்திலிருந்து ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றனர். அதனால் நிறைய தகவல்கள் கிடைக்க ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரியநூல்களை அச்சிலேற்றினார்.
. தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு, சிச்சமவாதவுரை மறுப்பு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது. சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பெரும் பொருளுதவி செய்தார். உ.வே சாமிநாதய்யர் சேகரித்த மணிமேகலை , புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றை அச்சிலேற்றினார். இவரின் நான்காம் தமிழ் சங்கமே அறிஞர்களை ஒன்றினைத்து ஊக்கப்படுத்தி தமிழை வளர்த்துள்ளது.
உ.வே.சாமிநாதய்யர் தமிழ்ப் பணி மிகவும் பெரியது. திராவிடப் படையெடுப்பில் தமிழர்களிடம் மூட நம்பிக்கைகள் திணிக்கப்பட திராவிடரோடு சேர்ந்து ஓலைச்சுவடிகளை ஆடிப் பெருக்கில் ஆற்றில் விட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலைக் கண்டு பெரிதும் வேதனையுற்ற உ.வே.சா ஊர் ஊராக திரிந்து ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சிலேற்றினார் . உ.வேசாவிற்கு பொருளாதாரம் இல்லாததால் மற்றவர்களின் உதவியை பெற்று அச்சிலேற்றினார். ஐம்பெருங்காப்பியம் , சங்க இலக்கியம் , புராணங்கள் , சிற்றிலக்கியம் என 90 நூல்களுக்கு மேல் அச்சிலேற்றியுள்ளார். மேலும் 3000 ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்தார். நாம் படித்த பல நூல்கள் உ.வே.சாவின் கொடை .
ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணிகள்
சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர். 20 நூல்களை எழுதியுள்ள இவர் , 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். எழுதியது , அச்சிலேற்றியது மட்டுமல்லாது இலவசப் பள்ளிகளை கட்டி மாணவர்களுக்கு பயிற்றும் வித்தவர்.
தமிழ்வேள் உமாமகேஸ்வர பிள்ளை கரந்தையில் தமிழ் சங்கம் நிறுவி தமிழ்பணி ஆற்றினார். தமிழ்பல்கலைக்கழகத்தின் விதையை இவர் தூவினார். யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார் . இன்று தமிழில் வடமொழி சொற்களை தவிர்த்ததற்கு காரணமும் இவர் தான். ரகுநாத ராஜாளியார் வீரசோழியம் , தொல்காப்பியம் , நற்றிணை , புறநானூறு ஆகிய ஓலைச்சுவடிகளை உ.வே.சாவிற்கு கொடுத்து அச்சிலேற்றினார். தமிழ் இலக்கண நூல்கள் அனைத்தும் ரகுநாத ராஜாளியார் கொடுத்தது. "தொல்காப்பியம் ராஜாளியார் வீட்டு சொத்து என்று இன்றும் கூறுவார்கள்". ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதினெண் கீழ்கணக்கு , காப்பியங்களுக்கு உரை எழுதி வெளியிட்டார்.
காஞ்சி ராமசாமியார் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை , வேதநாயகம் பிள்ளை , பம்மல் விஜயரங்கனார் , பூண்டி அரங்கநாத முதலியார் , பொன்னம்பலம் அருணாச்சலனார் , பின்னத்தூர் நாராயணசாமி , திரு.வி.க , சுப்ரமணிய பாரதியார் , சோமசுந்தர பாரதியார் ,திருவரங்க நீலாம்பிகை , ஈ.த.ராஜேஸ்வரி இன்னும் பலர் பட்டியல் மிகப்பெரியது . இதில் திருவாடுதுறை ஆதினம் , மன்னர் பாஸ்கர சேதுபதியும் மிகப் பெரிய ஆதரவளித்து ஊன்று கோலாய் இருந்தனர். மேற்கூறிய அனைவரும் பச்சைத் தமிழர்கள் . அவர்களை திராவிடர்கள் என்று இழிவுபடுத்துவது பெருந்தவறு.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...