Friday, February 25, 2022

கட்சிகளின் ஓட்டு சதவீதம்: கமிஷனின் கணக்கு சரியா?

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை பதிவான மொத்த ஓட்டுகள் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.

இதனால் தனித்து நின்ற கட்சிகள் குறைந்த வார்டுகளில் மட்டும் போட்டியிட்டதால் ஆணையம் வெளியிட்டுள்ள ஓட்டு சதவீதத்தை அக்கட்சிகளின் உண்மையான ஓட்டு சதவீதமாக கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புள்ளி விபரம்


latest tamil news



தமிழகத்தில் 1373 மாநகராட்சி உறுப்பினர் 3842 நகராட்சி உறுப்பினர் 7604 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.தேர்தல் முடிவுகள் பிப்.22ம் தேதி அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற ஓட்டு சதவீதம் விபரம் நேற்று முன்தினம் இரவு ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஓட்டு சதவீதம்தான் தேர்தலில் களம் இறங்கிய கட்சிகளின் பலம் என்ற அடிப்படையில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் இது தவறு என்பதை புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
கட்சிகள், ஓட்டு சதவீதம் ,கமிஷன் கணக்கு

உதாரணமாக மாநகராட்சி தேர்தலில் 1363 வார்டுகளில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இதில் 164 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 24 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. இதை அக்கட்சியின் ஓட்டு சதவீதமாக கருத முடியும்.
ஆளும் கட்சியான தி.மு.க. 1121 வார்டுகளில் போட்டியிட்டு 948 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி பெற்ற ஓட்டுகள் 43.59 சதவீதம். இதில் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் அடங்கும்.மேலும் தி.மு.க. போட்டியிடாத வார்டுகளில் கூட்டணி கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
அவை அந்த வார்டுகளில் பெற்ற ஓட்டுகள் பதிவான மொத்த ஓட்டுகளுடன் கணக்கிடப்பட்டு அது அக்கட்சிகளின் ஓட்டு சதவீதம் என கூறப்பட்டுள்ளது. இது எப்படி சரியாகும்?
அதேபோல் பா.ஜ. 1134 வார்டுகளில் போட்டியிட்டு 22ல் வெற்றி பெற்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம் 7.17. அக்கட்சி மீதமுள்ள வார்டுகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் அதன் ஓட்டு சதவீதம் அதிகரித்திருக்கும்.
அ.ம.மு.க. 879 வார்டுகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்று 1.38 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுள்ளது.
பா.ம.க. 569 வார்டுகளில் போட்டியிட்டு ஐந்தில் வென்று 1.42
சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 1114 வார்டுகளில் போட்டியிட்டு ஒன்றிலும் வெற்றி பெறாமல் 2.51 சதவீத
ஒட்டுகளைப் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் 671 வார்டுகளில் போட்டியிட்டு ஒன்றிலும் வெற்றி பெறாமல் 1.82 சதவீதஓட்டுகளைப் பெற்றுள்ளது.
இக்கட்சிகள் போட்டி
யிடாத வார்டுகளில் அக்கட்சிகளுக்கு ஓட்டுஇல்லை என கூற முடியாது.
எனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஓட்டு சதவீதத்தை ஆதாரமாக வைத்து அக்கட்சிகளின் ஓட்டு சதவீதம் இவ்வளவு தான் என்று கூற முடியாது. இதேபோல் தனித்து போட்டியிட்ட கட்சிகளில் அ.தி.மு.க. தவிர்த்து மற்ற கட்சிகள் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குறைந்த இடங்களிலேயே போட்டியிட்டுள்ளன. அந்த இடங்களில் அவை பெற்ற ஓட்டுக்களை பதிவான மொத்த ஓட்டுகள் அடிப்படையில் தேர்தல் கமிஷன் சதவீதம் கணக்கிட்டு வெளியிட்டு உள்ளது.
அக்கட்சிகள் போட்டியிட்ட வார்டுகளில் மட்டும் பதிவான ஓட்டுகளுடன் அவை பெற்ற ஓட்டுக்களை கணக்கிட்டால் அக்கட்சிகளின் ஓட்டு சதவீதம் அதிகமாகும். அதேபோல் அனைத்து வார்டுகளிலும் அக்கட்சிகள் போட்டியிட்டால் கூடுதல் சதவீதம் பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...