Saturday, February 19, 2022

துணை கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க.,வினர்.

 ஈரோடில், ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு யோசனை கூறிய தி.மு.க., வேட்பாளர், ஆய்வுக்கு வந்த துணை கலெக்டரை மிரட்டி அனுப்பினார்.ஈரோடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில், 41வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, தி.மு.க., வேட்பாளராக தண்டபாணி போட்டியிடுகிறார். இவர், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தலைவர் சிவகுமாரின் தம்பி.


அதிகாரம்

இவர், ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், ஓட்டுச்சாவடி மையத்துக்குள் நின்று, தன் ஆதரவாளர்கள் சிலரையும் நிறுத்தி, ஒவ்வொரு வாக்காளரையும் அழைத்து வழிகாட்டி அனுப்பினார்.அப்போது அங்கு வந்த, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமரன், ''ஓட்டுச்சாவடியை வேட்பாளர் பார்வையிட்டு செல்லலாம். வேட்பாளர் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளராக இருந்தாலும், வாக்காளர்களுடன் பேசுவது, வழிகாட்டுவது, இங்கேயே இருப்பது தவறு,'' என்றார்.

 துணை கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க.,வினர்

அதற்கு தண்டபாணி, ''நான் வேட்பாளர்; என்னை ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியே செல்ல சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை,'' என வாக்குவாதம் செய்தார். அப்போது, அவருடன் இருந்தவர்கள் வெளியேறினர்.


பரபரப்பு

பலமுறை கூறியும், தண்டபாணி கேட்கவில்லை. ''எங்கு வேண்டு மானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இங்கு இருப்பதற்கு எனக்கு 'ரைட்ஸ்' உள்ளது,'' என துணை கலெக்டரை மிரட்டி, வாக்குவாதம் செய்தார்.ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலரை அழைத்த துணை கலெக்டர், ''இவ்வாறு அனுமதிக்கக் கூடாது என உங்களுக்கு சொல்லித் தரவில்லையா,'' என கடிந்து கொண்டு, வேட்பாளரை வெளியேற்ற முடியாமல் சென்று விட்டார்.இதனால், 15 நிமிடங்களுக்கு மேல் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு நிலவியது.


எஸ்.பி.,யிடம் வாக்குவாதம்

சேலம் மாவட்டம், இடைப்பாடி, ஆலச்சாம்பாளையம் நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அதிகளவில் கூடி நின்றனர். சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கட்சியினரை கலைந்து போக அறிவுறுத்தினார். தி.மு.க.,வினர் மறுக்க, தடியடி நடத்தி கலைக்க முயன்றார்.அங்கு நின்றிருந்த தி.மு.க., வேட்பாளரின் அண்ணன் கணேசன், 38, 'நான் ராணுவ வீரர்' எனக் கூறி கலைந்து போக மறுத்தார். அவர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தொடர்ந்து, தி.மு.க.,வினரை கலைந்து போக செய்ததோடு, கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி இடைப்பாடி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.அவரது உறவினர்கள், கணேசனை விடுவிக்கக் கோரி, இடைப்பாடி நகராட்சி, 26வது வார்டு வேட்பாளர் பெருமாள்ராஜ், 35, தலைமையில், எஸ்.பி.,யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி, எஸ்.பி.,யிடம் பேச்சு நடத்தினார். கணேசனை விடுவிப்பதாக எஸ்.பி., உறுதியளிக்க, தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...