Sunday, February 27, 2022

பயன்படுத்திய சமையல் எண்னெயை என்ன செய்வது என்பது பெரிய பிரச்சனை.

 முன்னேறிய நாடுகளில் உணவகங்களில் ஏராளமான சமையல் எண்ணெய் வீணாகும். அமெரிக்காவில் மெக்டானல்ட்ஸ் மாதிரி உணவகங்களுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெயை கொட்ட ஒரு பீப்பாய் மாதிரி கொடுத்திருப்பார்கள். அதனுள் ஒரு வடிகட்டி இருக்கும். எண்ணெயை அதில் ஊற்றினால் எண்ணெயில் இருக்கும் உணவுபருக்கைகள் எல்லாம் போக ஒரு அளவு சுத்தமான எண்ணெய் பிப்பாயில் ஸ்டோர் ஆகும்

அதன்பின் அதை பாக்டரிக்கு கொண்டுபோய் சுத்திகரித்து 10:1 எனும் விகிதத்தில் மெதனாலுடன் கொஞ்சம் சோடியம் ஹைட்ராக்ஸைடை கலந்து புராசஸ் செய்தால், 100 லிட்டர் எண்ணெய்க்கு 100 லிட்டர் பயோடீசலும், 10 லிட்டர் க்ளிசராலும் கிடைக்கும். க்ளிசாரால் மருந்து உற்பத்திக்கு பயனாகும்
இந்த பயோடீசலை பெட்ரோல் மாதிரி பயன்படுத்தலாம். கார்களை ஓட்டலாம், விமானம் கூட ஓட்டமுடியும். வீடுகளில் உண்டாகும் சமயல் எண்ணெய் கழிவையும் கலெக்ட் செய்து பயோடீசல் தயாரிக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஆண்டுக்கு இப்படி 181 கோடி லிட்டர் பயோடீசல் தயாராகிறது
இந்தியாவிலும் உணவகங்களில் பயனாகும் எண்ணெய் தெருவோர கடைகளுக்கு சட்டவிரோதமாக விற்கபடுகிறது. அதுக்கு பதில் இப்படி பயோடீசல் எடுத்தால் ஆண்டுக்கு 100 கோடி லிட்டர் பயோடீசல் கிடைக்கும் என கூறப்படுகிறது
உலகெங்கும் இப்படி வீணாகும் சமையல் எண்ணெய் பயோடீசலாக மாறினால் எத்தனை நல்லா இருக்கும்?
~ *நியாண்டர் செல்வன்*
நாம் தற்போது பிளாட்பார்ம் கடைகளில் சாப்பிடும் வடை, பஜ்ஜி எல்லாம் டேஸ்ட் இருப்பதற்கு காரணம் இதுதான் 😆

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...